சிரிக்கலாம் வாங்க 83 - சிரிக்கலாம் வாங்க
சாலை விதியில் குறிப்பிட்டு இருந்த வாசகம்:
வாகனத்தை ஓட்டும் போது செல்ஃபோன் அழைப்பை எடுக்காதீர்கள், கூப்பிடுவது எமனாகக் கூட இருக்கலாம்!
-***-
மளிகை கடைக்காரரை கட்டிக்கிட்டது தப்பா போச்சு?
ஏன்?
கிஸ் கேட்டா எத்தனை கிலோன்னு கேட்கிறார்...!
-***-
சார்.. நீங்க எழுதிட்டு வர்ற தொடர்கதை இந்த வாரம் சூப்பர் .. அதிலும் அந்தக் கடைசி வரி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்..!
அப்படியா.. ? என்ன அது கடைசி வரி.. ?
அடுத்த இதழில் முடியும்ன்னு போட்டிருக்கே.. அதான்..!
-***-
ட்ரெயின் கண்டுபிடிக்கலன்ன என்ன ஆகி இருக்கும் ?
“தண்டவாளம் (ரெயில்) வேஸ்ட் ஆகி இருக்கும்!”
-***-
'என்னங்க இது இவரு பாஸ்போர்ட வாங்க 'கோவணத்தோடு வந்திருக்காரு?'
'ஆவணத்துடன் வரவும் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டாரு'
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 83 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், jokes, ஜோக்ஸ், கடைசி, என்ன, இருக்கும், சார், தப்பா, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்