சிரிக்கலாம் வாங்க 75 - சிரிக்கலாம் வாங்க
“ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்கறியே நியாயமா?”
“தப்பா நினைச்சுக்காதீங்க வெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்”
-***-
” நிலவுல நாம எப்போ போகப்போறோமுன்னு மன்னர் அடிக்கடி கேட்கிறாரே ஏன்?”
” எதிரி மன்னன்கிட்டயிருந்து தப்பிச்சு கொஞ்ச நாள் அங்க போய் ஒழிஞ்சிருக்கலாமுன்னுதான்!”
-***-
ஆசிரியரும் மாணவனும்......
''வீட்டுப் பாடம் ஏன் எழுதலைன்னு கேட்டதுக்கு எதிர்த்துப் பேசறியே... ஏன்?''
''நீங்கதானே சார் சொன்னீங்க, எந்த ஒரு பிரச்னைன்னாலும் சோர்ந்து போயிடாம எதிர்த்துப் போராடணும்னு!''
-***-
தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது. இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.
-***-
கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ...
அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 75 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, எதிர்த்துப், க்ரீமைத், பால், சிரிப்புகள், kadi, நகைச்சுவை