சிரிக்கலாம் வாங்க 77 - சிரிக்கலாம் வாங்க
என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...!!
உனக்குத்தான் தெரியுமே...
நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...
-***-
” நமது மன்னர் நடிகர் விஜய்ய சந்திக்கனுமுன்னு விருப்பப்படுறாரே ஏன்?”
” வில்லு மாதிரி வந்து எதிரி மன்னன போட்டுதள்ள முடியுமான்னு கேட்கிறதுக்குத்தானாம்!”
-***-
உங்க மனைவி நல்லா சமைப்பாங்களா ?
என்ன இப்படி கேட்டுட்டீங்க ?, நான் சமைக்கலைன்னா அவ என்னை வறுத்தெடுப்பா , காரம் அதிகமா இருந்தா பொங்கிடுவா. உப்பு அதிகமாகிடிச்சின்னா என்னை தாளிச்சிடுவா..
-***-
நானும் என்மனைவியும் தெய்வமகன் படம் பார்த்து வந்த உடன் தான் எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது!
நல்ல வேலை நீங்கள் அலிபாபாவும் 40 திருடர்களும் படம் பார்க்கவில்லை.
-***-
போஸ்ட்மேன் கல் தடுக்கி எப்படி விழுவார் ?
’தபால்’-ன்னு விழுவார் !
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 77 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், என்னை, படம், விழுவார், நல்ல, நான், kadi, நகைச்சுவை, சிரிப்புகள்