சிரிக்கலாம் வாங்க 76 - சிரிக்கலாம் வாங்க
'தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே ஏன்?'
'கடைத் திறப்பு விழான்னு கூட்டிக்கிட்டுப் போய் 'சாக்கடை'யை திறக்க வெச்சுட்டாங்களாம்'
-***-
அந்த நடிகையோட அளவு 36:26:36:0
அதென்ன சைபர்?
அவளோட அறிவு
-***-
டேய் மாது எனக்கு லைப்பே ஒரு பிடிப்பு இல்லே தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுதுடா
அட அசடு அதுக்காகத் தற்கொலை பண்ணிக்காதே. கல்யாணம் பண்ணிக்கோ. அது போதும்.
-***-
“நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே..”
“ஐயையோ! அது பச்சைப் பொய், எனக்கு வருமானமே கிடையாது.. சொத்து மட்டும்தான் சேர்க்கறேன்”
-***-
காலைல எழுந்ததும் உடற்பயிற்சி , அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்... இவ்வளவு செஞ்சும் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு ?
அட , இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 74 | 75 | 76 | 77 | 78 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 76 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, தற்கொலை, சொத்து, எனக்கு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை