சிரிக்கலாம் வாங்க 71 - சிரிக்கலாம் வாங்க
சென்னைக்கு எத்தனை மணிக்கு பஸ்..?
9 மணிக்கு..
அதுக்கு முன்னாடி எதுவும் இருக்கா..?
ஓ இருக்கே.. ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு.
-***-
ஒரு வீட்டுவாசலில் கணவனும் மனைவியும்…
‘‘ஆடித்தள்ளுபடியில ஒரு புடவை எடுத்துத் தாங்களேன்!’’
‘‘நான் பணக் கஷ்டத்துல தள்ளாடிக்கிட்டிருக்கேன். உனக்குத் தள்ளுபடியில புடவை கேக்குதாக்கும்…’’
‘‘சாயங்காலமானா நீங்க ‘தள்ளாடுறது’தான் ஊருக்கே தெரியுமே…’’
-***-
ஒருவன்: "யோவ்! என்னய்யா அர்த்த ராத்திரியில அந்த வீட்ல இருந்து வேகமா ஓடிவந்து கம்பியை நீட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்கிறே?"
திருடன்: "நான் தொழிலுக்குப் புதுசுங்க! வீட்ல பூந்து பணத்தைத் திருடிக்கிட்டு `கம்பி' நீட்டணும்னு என் தோஸ்த்து சொன்னாங்க..
-***-
”எதுக்கு எதுக்கு இலவசமுன்னு விளம்பரம் பண்றதுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமப்போச்சு!”
” ஏன் என்னாச்சு!”
நடிகை நமீதாவோட படத்தப் பார்த்தா கனவுல இலவசமா வருவாங்கன்னு விளம்பரம் பண்ணுறாங்க!”
-***-
அது என்ன வீரப்பன் வெடி ?
மற்ற வெடியை வெடிச்சா கந்தக வாசம் வரும். ..
இந்த வெடியை வெடிச்சா சந்தன வாசம் வரும்...
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 69 | 70 | 71 | 72 | 73 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 71 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், ", வெடியை, வாசம், வரும், விளம்பரம், வெடிச்சா, மணிக்கு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, புடவை, வீட்ல