சிரிக்கலாம் வாங்க 69 - சிரிக்கலாம் வாங்க
உங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் யாராவது பிறந்திருக்கிறார்களா?
இல்லை, குழைந்தைகள்தான் பிறந்திருக்கின்றன.
-***-
டியர். நம்ம காதல் ஒரு வெங்காயம் மதிரி..
என்ன உளர்றீங்க?
கட் பண்ணி பாரு.. கண்ல கண்ணீர் வரும் ..
-***-
மன்னருக்கு சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது !'
'எப்படி ?'
'தன்னைப்பற்றி ஏதும் கிசுகிசு வந்திருக்கிறதா ? என்று கேட்கிறாரே !'
-***-
மேடையில தலைவர் இப்படிப் பேசியிருக்க கூடாது.....
என்ன பேசினார் ?
தலைக்கு ஐம்பது வாங்கிக் கொண்டு லாரியில் ஏறி வந்திருக்கும் ஜால்ராக்களேன்னு சொல்லிட்டாரு......
-***-
” எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா ன்னு மூணு தடவ எழுதியிருக்கியே யாருப்பா அந்த நடிகை!”
“ த்ரி-ஷா தான்”
-***-
"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"
"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.."
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 67 | 68 | 69 | 70 | 71 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 69 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், ", கேரட், அல்வா, நடிகை, என்ன, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்