சிரிக்கலாம் வாங்க 68 - சிரிக்கலாம் வாங்க
"என்னது..? நிறைய ஓட்டை இருக்குன்னு உன் கதையை திருப்பி அனுப்பிட்டாங்களா..? கதை பேர் என்ன..?"
"சல்லடை..!"
-***-
ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சு
தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!
-***-
‘’ பதவியில இருக்கிறப்போ பலரையும் சுரண்டி வாழ்ந்த நம்ம தலைவர் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கார்?”
‘’ செல்போன் ரீ-சார்ஜ் கர்ர்ட சுரண்டிகிட்டு இருக்கார்.”
-***-
பஸ்ஸில் உன் பக்கத்தில் அழகான இளம்பெண் உட்கார்ந்ததுக்காக சந்தோஷப்படாமல் ஏன் வருத்தப் படறீங்க ?
எப்படி சந்தோஷப்பட முடியும் ? வயசுப் பொண்ணு கூச்சமில்லாம நம்ம பக்கத்துல உட்கார்ந்தா என்ன அர்த்தம் ? நம்மை வயசானவனா நினைக்கிறாள்னு தானே அர்த்தம்
-***-
நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
ஜன கண மன விற்குக் கைதட்டினாரே
-***-
‘’ இப்பொழுது மழை எதுவும் இல்லை, பிறகெதுக்கு குடை ரிப்பேர் காரன் அரண்மனைக்குள் வந்துள்ளான்?’’
‘’ நமது வெண்கொற்றக்குடையிலிருக்கும் ஓட்டையை பார்த்திருப்பான் மன்னா!’’
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 68 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, ", என்ன, எப்படி, அர்த்தம், இருக்கார், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், நம்ம