சிரிக்கலாம் வாங்க 67 - சிரிக்கலாம் வாங்க
” நம்ம மன்னருக்கு நாய் அடி, பேயடி, பாய் அடி கிடைச்சுதாம்!”
” அதென்ன பாய் அடி?”
” ஒருநாள் மட்டும் மகாராணிய பாயில படுக்கச் சொல்லீட்டு மன்னர் கட்டுல்ல படுத்தாராம், மகாராணி பாயாலே சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்களாம்!”
-***-
பஸ்ஸில் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி: இது இராயப்போட்டையா?
இல்லை தோள்பட்டை.
-***-
தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது;
நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்... நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்....பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்...
-***-
இண்டர்வியூவில் அதிகாரி : என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
வேலு : நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!
-***-
பஞ்சாயத்து கூட்டத்துக்கு தலைவர் ஏன் இஞ்ச் டேப்போட வர்றாரு?
அளந்து பேசத்தான்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 67 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, பையைத், தாத்தா, பாய், சிரிப்புகள், kadi, நகைச்சுவை