சிரிக்கலாம் வாங்க 51 - சிரிக்கலாம் வாங்க
என் கணவர் அநியாயத்துக்கு பயப்படறார்...
ஏன் என்னாச்சு..?
என் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட முதல்ல தியேட்டர்ல தான் ரிலீஸ் பண்ணனுமாம். இல்லாட்டி ‘திருட்டு விசிடி' கேஸ்ல 3 வருஷம் கம்பி எண்ணனும்னு பயப்படறார்....
-***-
மிஸ்... உக்ககிட்டே ஏகப்பட்ட டேலண்ட் இருக்கு... நீங்க ஏன் ஒரு வலைப்பூ தொடக்கக்கூடாது? ( BLOG)
அப்புறம் என்னை எல்லாரும் ‘பிளாக்கர்’-னு (BLACK)சொல்லிடுவாங்களே? மீ செக்கச்சிவப்பு
-***-
” நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை!”
” ஏன், என்ன நேர்ந்தது?”
” புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால் இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள் யாரும் அவர கண்டுக்கலையாம்!’‘
-***-
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
-***-
என்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா போற மாதிரி படம் எடுத்தா என்ன பெயர் வைப்பாங்க....?
‘ராவோட ராவா'.......
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 51 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், என்ன, பயப்படறார், சிரிப்புகள், kadi, நகைச்சுவை