முகலாயப் பேரரசு
மேலும் மராட்டியப் பூசலுக்கு ஒரு முடிவையும் அவர் காணத்தவறினார். ஷியா வகுப்பைச் சேர்ந்த தக்காண சுல்தானியங்களிடமும் அவர் தவறான கொள்கையையே கடைப்பிடித்தார். அவரது சமயக்கருத்துக்களை முஸ்லீம்கள் அல்லாத சமுதாயத்தின்மீது கட்டாயமாக திணிக்க அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. முஸ்லிம் அல்லாதவர்களை பகைத்துக்கொண்டதால் முஸ்லிம்கள் அனைவரின் ஆதரவையும் அவர் பெற்றார் என்றும் கூறமுடியாது. மாறாக முகலாயப் பேரரசின் அரசியல் எதிரிகளின் எண்ணிக்கை பெருகிறது.
முகலாயரின் வீழ்ச்சிக்கான காரணங்கள்
அவுரங்கசீப்பின் மறைவுக்குப்பிறகு, முகலாயப் பேரரசு வேகமாக வீழ்ச்சியடைந்தது. முகலாய அரசவையிலிருந்த உயர் குடியினருக்கிடையே போட்டிக் குழுக்கள் மலிந்தன. 1739 ஆம் ஆண்டு நாதிர்ஷா முகலாயப் பேரரசரை சிறைப்பிடித்து டெல்லியை சூரையாடியபோதுதான் பேரரசின் பலவீனம் வெளிப்பட்டது. முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் பலவகைப்பட்டவை. அவுரங்கசீப்பின் தக்காண மற்றும் சமயக் கொள்கைகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. திறமையற்ற வழித்தோன்றல்களும், முகலாயப் படைகளின் ஒழுக்கசீர்கேடுகளும் அதன் வீழ்ச்சிக்கு வித்திட்டன. பரந்த பேரரசை கட்டிக்காப்பதும் கடினமாக இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற போர்களினால் நிதிநிலைமையும் மோசமாகியது. இந்தியாவில் ஐரோப்பியர்கள் குடியேற்றங்களை அமைக்கத் தொடங்கியபோதுதான், முகலாயரிடம் வலிமையான கடற்படை இல்லாமையை உணரத்தொடங்கினர். நாதிர்ஷா, அகமது ஷா அப்தாலி போன்றோரின் படையெடுப்புகளும் பேரரசின் வலிமையைக் குறைத்தன. எனவே முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு அரசியல், சமூக, பொருளாதார கூறுகளின் ஒட்டு மொத்த செயல்பாடுகளே காரணங்களாக அமைந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , முகலாயப், வரலாறு, பேரரசின், அவர், இந்திய, பேரரசு, அரசியல், வீழ்ச்சிக்கு, அவுரங்கசீப்பின், நாதிர்ஷா, காரணங்கள், வீழ்ச்சிக்கான, தக்காண, இந்தியா, அவுரங்கசீப்