முகலாயப் பேரரசு
ஷாஜகானின் நான்கு புதல்வர்களுக்கிடையே தாரா ஷக்கோ (பட்டத்து இளவரசர்), ஷிஜா (வங்காள ஆளுநர்), அவுரங்கசீப் (தக்காண ஆளுநர்) மற்றும் மூரத் பஷ் (மாளவம், குஜராத்தின் ஆளுநர்) - அவரது ஆட்சிக்கால இறுதியில் பலத்த வாரிசுரிமைப் போர் மூண்டது. 1657ஆம் ஆண்டு இறுதியில் ஷாஐகான் சற்று நோய்வாய்ப்பட்டு பின்னர் தேறினார். ஆனால் இளவரசர்கள் நால்வரும் முகலாய அரியணைக்காக போரிடத்துவங்கினர்.
இப்போரில் அவுரங்கசீப் வெற்றி பெற்று ஆக்ரா கோட்டைக்குள் நுழைந்து தாராவை விரட்டியடித்தார். ஷாஜகானையும் அடிபணியச் செய்தார். ஆக்ரா கோட்டையில் அந்தப்புறப்பகுதியில் ஷாஐகானை சிறைவைத்தார். ஆனால், அவுரங்கசீப் தமது தந்தையை மோசமாக நடத்தவில்லை. அடுத்த எட்டு ஆண்டுகள் ஷாஜகான் தனது மகள் ஜகனாராவின் அன்பான சேவையில் காலத்தை கழித்தார். 1666ல் ஷாஜகான் இறந்தார். அவரது உடல் தாஜ்மஹாலில் மும்தாஜின் கல்லறைக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
அவுரங்கசீப் |
திறமைமிக்க முகலாய அரசர்களில் அவுரங்கசீப்பும் ஒருவர். அவர் ஆலம்கீர் அல்லது உலகை வெல்பவர் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார். முதல் பத்தாண்டுகள் அவர் மேற்கொண்ட படையெடுப்புகள் யாவும் வெற்றியில் முடிந்தன. சிறுசிறு கிளர்ச்சிகளை அவர் நசுக்கினார். ஆனால், அவரது ஆட்சிக் காலத்தில் பிற்பகுதியில் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஜாத்துக்கள், சத்நாமியர்கள் மற்றும் சீக்கியர்களும்கூட அவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அக்கிளர்ச்சிகள்யாவும் அவுரங்கசீப்பின் கடுமையான சமயக்கொள்கையின் எதிர்விளைவுகளேயாகும்.
தக்காணக் கொள்கை
முகலாயரின் தக்காணக் கொள்கை அக்பரின் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. காந்தேஷ், பீரார் ஆகியவற்றை அக்பர் கைப்பற்றினார். அகமது நகரில் மாலிக் ஆம்பருடன் ஜஹாங்கீர் போரிட்டார். ஷாஜகான் ஆட்சிக்காலத்தில் தக்காண ஆளுநராக இருந்த அவுரங்கசீப் தீவிரமான தக்காணக் கொள்கையை பின்பற்றினார். முகலாயப் பேரரசராக பொறுப்பேற்றவுடன் அவுரங்கசீப் தமது ஆட்சிக்காலத்தில் முதல் இருபத்தியைந்து ஆண்டுகள் வடமேற்கு எல்லைப்பகுதியில் கவனம் செலுத்தினார். அத்தருணத்தில்தான் மராட்டிய அரசர் சிவாஜி வடக்கு மற்றும் தெற்கு கொங்கணப்பகுதியில் தனக்கென ஒரு தனி அரசை ஏற்படுத்திக்கொண்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , அவுரங்கசீப், வரலாறு, இந்திய, முகலாயப், ஷாஜகான், அவர், தக்காணக், அவரது, ஆளுநர், பேரரசு, ஆட்சிக்காலத்தில், இந்தியா, ஆட்சிக், வாரிசுரிமைப், கொள்கை, தமது, போர், தக்காண, இறுதியில், முகலாய, ஆக்ரா, ஆண்டுகள்