முகலாயப் பேரரசு
நிலவருவாய் நிர்வாகம்
ராஜா தோடர்மால், அக்பரது ஆட்சிக்காலத்தில் நிலவருவாய் நிர்வாகத்தில் சில ஆய்வுகளை மேற்கொண்டார். அக்பரது நிலவருவாய் முறை ஜப்தி அல்லது பந்தோபஸ்து முறை என அழைக்கப்பட்டது.
ராஜா தோடர்மால் அதனை மேலும் சீரமைத்தார். அதற்கு தாஹாசாலா முறை எனப்பெயர். 1580ல் அது நிறைவேற்றப்பட்டது. அம்முறைப்படி தோடர்மால் ஓரே மாதிரியான நில அளவையை அறிமுகப்படுத்தினார். கடந்த பத்தாண்டு காலத்தில் விளைச்சலின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு நிலவருவாய் நிர்ணயிக்கப்பட்டது. நிலங்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன போலஜ் (ஆண்டு தோறும் பயிரிடப்படும் நிலம்), பரௌதி (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முறை பயிரிடப்படுவது), சச்சார் (மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடப்படுவது) மற்றும் பஞ்சார் (ஐந்து அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடப்படுவது). நிலவரி பொதுவாக பணமாகவே செலுத்தப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , முறை, வரலாறு, நிலவருவாய், அல்லது, அக்பரது, இந்திய, தோடர்மால், ஆண்டுகளுக்கு, பயிரிடப்படுவது, முகலாயப், பேரரசு, நான்கு, ராஜா, இந்தியா, அக்பர்