முகலாயப் பேரரசு
![]() |
அவுரங்கசீப் தர்பார் |
அவுரங்கசீப்பின் சமயக் கொள்கையால், ரஜபுத்திரர்கள் மராட்டியர்கள், சீக்கியர்கள் முகலாயப்பேரரசுக்கு எதிராகத் திரும்பினார். மதுராவிலிருந்த ஜாத்துக்களும், மேவாரிலிருந்த சத்நாமியர்களும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். எனவே முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கும் அவுரங்கசீப் காரணமானார்.
அவுரங்கசீப்பின் ஆளுமை மற்றும் குணநலன்
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவுரங்கசீப் கடும் உழைப்பாளர், ஒழுக்கசீலர், உணவு மற்றும் உடை போன்றவற்றில் மிகவும் எளிமையைக் கடைப்பிடித்தார். குரானைப் படியெடுத்து அவற்றை விற்று வரும் பணத்தில் தமக்கு வேண்டிய செலவுகளை செய்துகொண்டார். மது அருந்தும் வழக்கம் அவருக்கில்லை. கற்றறிவாளரான அவர் அராபிய மற்றும் பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார். புத்தகங்கள் அவருக்குப் பிடித்தமானவை. தனது சமயத்திற்கு உண்மையானவராக நடந்து கொண்ட அவுரங்கசீப் தினம் ஐந்துவேளை தொழுகை நடத்தத்தவற மாட்டார். ரம்சான் நோன்பினை கட்டாயமாக அனுசரிப்பார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , அவர், வரலாறு, முகலாயப், இந்திய, அவுரங்கசீப், கோயில்கள், பேரரசு, அவுரங்கசீப்பின், சீக்கிய, இந்துக், இந்தியா