முகலாயப் பேரரசு
பாபர் பற்றிய ஒரு மதிப்பீடு
பாபர் ஒரு சிறந்த ஆட்சியாளர். நிலைத்த சாதனைகளை நிகழ்த்தியவர். அரபு மற்றும் பாரசீக மொழிகளில் புலமை மிக்கவர். துருக்கி மொழியே அவரது தாய்மொழி. துசுகி பாபரி என்ற அவரது நினைவுக்குறிப்புகள் துருக்கி மொழியில் எழுதப்பட்டதாகும். இந்தியாவைப் பற்றிய வருணனைகள் அதில் இடம் பெற்றுள்ளன. எந்த உண்மையையும் மறைக்காமல் தான் பெற்ற தோல்விகளையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இயற்கையை ரசிக்கும் உள்ளத்தவரான அவர் இந்தியாவின் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றியும்கூட தமது நினைவுக் குறிப்புகளில் விவரித்துள்ளார்.
ஹூமாயூன் |
பாபரின் மூத்த மகன் ஹூமாயூன், ஹூமாயூன் என்றால் 'நல்வாய்ப்பு' என்று பொருள். ஆனால், முகலாயப் பேரரசில் நல்வாய்ப்புகளைப் பெறாத மன்னராக அவர் இருந்தார். ஹூமாயூனுக்கு கம்ரான், அஸ்காரி, ஹிண்டால் என்ற மூன்று சகோதரர்கள். ஹூமாயூன் பேரரசை தனது சகோதரர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். ஆனால், அதுவே அவருக்கு பெரும் சோதனையாக முடிந்தது. காபூல் மற்றும் காண்டஹாரின் ஆட்சியாளராக கம்ரான் நியமிக்கப்பட்டார். சாம்பல் மற்றும் ஆல்வார் பகுதிகள் அஸ்காரிக்கும் ஹிண்டாலுக்கும் அளிக்கப்பட்டன.
கிழக்கில் ஹூமாயூன் ஆப்கன்களை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்த போது குஜராத்தின் பகதூர் ஷா டெல்லிநோக்கி படையெடுத்து வரும் செய்தி அவருக்கு கிட்டியது. எனவே, ஆப்கானியர்களின் தலைவரான ஷெர்கானுடன் (வருங்கால ஷெர்ஷா) அவசரமாக ஒரு உடன்படிக்கையை செய்து கொண்ட ஹூமாயூன் குஜராத் நோக்கிப் புறப்பட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , ஹூமாயூன், வரலாறு, பாபர், முகலாயப், இந்திய, அவர், தமது, பேரரசு, இந்தியாவின், கம்ரான், அவருக்கு, அதில், அவரது, இந்தியா, பற்றிய, துருக்கி, ஆப்கன்களை