முகலாயப் பேரரசு
அக்பரது ஆட்சி முறையில் மன்சப்தாரி முறை முக்கிய இடம் வகித்தது. இம்முறையின்கீழ் ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு தகுதிநிலை வழங்கப்பட்டது. குறைந்ததபட்ச தகுதிநிலை மன்சப்தார் 10 என்பதாகும் அதிகபட்ச தகுதி மன்சப்தார் 5000. இது உயர் குடியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அரசகுலத்தை சேர்ந்தவர்களுக்கு அதற்கும் மேலான தகுதிநிலைகள் நிர்ணயிக்கப்பட்டன. மன்சப் தகுதிநிலைகள் சத் மற்றும் சாவர் என இருவகைப்படும். சத் என்பது ஒருவரது தனிப்பட்ட அந்தஸ்தைக் குறிப்பதாகும். சாவர் என்பது ஒருவர் வைத்திருக்க வேண்டிய குதிரை வீரர்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது. ஒவ்வொரு சாவரும் குறைந்தபட்சம் இரண்டு குதிரைவீரர்களையாவது பெற்றிருக்கவேண்டும். மன்சப் தகுதிநிலைக்கு வாரிசுரிமை கிடையாது. நியமனங்கள் பதவி உயர்வுகள், பதவிநீக்கங்கள் அனைத்தும் நேரடியாக அரசரால் மேற்கொள்ளப்பட்டன.
ஐஹாங்கீர் |
அக்பரின் மறைவுக்குப்பிறகு, 1605 ஆம் ஆண்டு இளவரசர் சலீம் ஐஹாங்கீர் (உலகை வென்றவர்) என்ற பட்டத்தோடு ஆட்சிக்குவந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பல்லேறு கலகங்கள் நடைபெற்றன. அவரது மகன் குஸ்ரூ கலகத்தில் ஈடுபட்டார். ஆனால், முறியடிக்கப்பட்டு சிறையிலிடப்பட்டார். அவரை ஆதரித்ததற்காக ஐந்தாவது சீக்கிய குருவான குரு அர்ஜன் சிங் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
நூர்ஜஹான் |
1611 ஆம் ஆண்டு ஐஹாங்கீர் மெஹருனிசாவை மணந்து கொண்டார். அவர் நூர்ஜஹான் (உலகின் ஒளி) என்று அழைக்கப்பட்டார். நூர்ஜஹானின் தந்தை இதிமத்தௌலா ஒரு பண்பாளர். அவருக்கு தலைமை திவான் பதவி தரப்பட்டது. நூர்ஜஹானின் குடும்பத்தைச்சேர்ந்த பலருக்கு உயர்பதவிகள் வழங்கப்பட்டன. அவரது மூத்த சகோதார் ஆசப்கானுக்கு உயர் குடியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிற கான்-இ-சாமன் பதவி வழங்கப்பட்டது. 1612ஆம் ஆண்டு ஆசப்கானின் மகளான அர்ஜிமந்த் பானு பேகம் (பிற்காலத்தில் மும்தாஜ்) என்பவரை ஜஹாங்கீரின் மூன்றாவது மகன் இளவரசன் குர்ரம் (பிற்காலத்திய ஹாஜகான்) மணந்து கொண்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , வரலாறு, ஐஹாங்கீர், இந்திய, ஆண்டு, அவரது, முகலாயப், வழங்கப்பட்டது, பதவி, நூர்ஜஹான், பேரரசு, என்பது, நூர்ஜஹானின், கொண்டார், சாவர், மணந்து, மகன், மட்டுமே, ஒவ்வொரு, முறை, மன்சப்தாரி, இந்தியா, தகுதிநிலை, மன்சப்தார், தகுதிநிலைகள், குடியினருக்கு, உயர், மன்சப்