முகலாயப் பேரரசு
அவுரங்கசீப்பின் நடவடிக்கை முகலாயருக்கும், மராட்டியருக்கும் இடையே நேரடி மோதல் உருவாக வழிவகுத்தது. மேலும் அவரது தக்காணப்படையெடுப்புகள் முகலாய கருவூலத்தை காலிசெய்தன. ஜே.என். சர்க்காரின் கூற்றுப்படி தக்காணக் குடற்புண் அவுரங்கசீப்பை அழித்தது.
சமயக் கொள்கை
அவுரங்கசீப் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வைதீக முஸ்லீமாகத் திகழ்ந்தார். இந்தியாவை ஒரு இஸ்லாமிய அரசாக மாற்றியமைப்பதே அவரது கொள்கை. ஒழுக்கநெறிகளை நடைமுறைப் படுத்துவதற்கென முதாசீபுகள் என்ற உயர் அதிகாரம் படைத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு தனித் துறையை அவுரங்கசீப் ஏற்படுத்தினார். மது அருந்துவது தடை'செய்யப்பட்டது. பாங்க் என்ற தாவரம் பயிரிடுவதும், பயன்படுத்துவதும் பிற போதைப் பொருட்களும் தடைசெய்யப்பட்டன. முகலாய அரசவையில் இசை தவிர்க்கப்பட்டது. தரோக்கா தர்ஷன் என்ற பேரரசர் மணிமாடத்தில் மக்கள் முன்தோன்றும் சடங்கையும் அவர் விட்டொழித்தார். தசரா விழாவுக்கும் தடைவிதிக்கப்பட்டது. அரசவையிலிருந்த வானஇயல் மற்றும் ஜோதிடக்கலை அறிஞர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயப் பேரரசு , வரலாறு, இந்திய, முகலாயப், அவுரங்கசீப், பேரரசு, மராட்டியருக்கும், முகலாயருக்கும், அவரது, அவுரங்கசீப்பின், முகலாய, கொள்கை, மீது, பீஜப்பூர், இந்தியா, கோல்கொண்டா, இணைத்துக், கொண்டார், அழித்தது