முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 367
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 367
அர்த்தம். அப்படி எல்லோரையும் ஒரே ஜாதியாக ஆக்க பொது உடைமைக் கொள்கை ஒன்றால்தான் முடியும். அதிலும் கூடப் பாஷையைக் கவனித்தால் இந்தியாவிலே எண்பதுக்கதிகமான ஜாதிகள் இருக்கும்.”
“எண்பதுக்கதிகமா? நீ பாகிஸ்தானையும் தாண்டிப் போய் விட்டாயே!”
“பாஷைகளை, நாம் தோற்றுவிக்கவில்லை. ஜனங்களின் ஆட்சியிலே, கல்வி கற்றுக் கொடுப்பதற்கு அவர்களின் தாய்ப் பாஷைதான் சாதனமாய் இருக்க வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்து பிழையின்றிப் பேசப் பழகி வருவதுதான், தாய் மொழியாகும்; சோவியத் யூனியனில் எழுபது சுதந்திர ஜாதிகள் இருக்கின்றன. அதைவிட இரண்டு மடங்கு ஜனத் தொகையுடைய இந்தியாவிலே, எண்பது சுதந்திர ஜாதிகளைக் கொண்ட ஐக்கிய ராஜ்யம்
இருக்குமானால், அதைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?”
“அப்படியானால், நீ பாகிஸ்தானை ஆதரிக்கிறாயா?”
“முஸ்லிம் ஜனங்கள் அதற்காக வற்புறுத்தும்பொழுது நாம் என்ன செய்ய முடியும்? இன்று ஒவ்வொரு முஸ்லீம் தலைவரும் பாகிஸ்தான் வேண்டுமென்று வற்புறுத்தும் பொழுது நாம் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முஸ்லீம் அல்லாதவர்களுக்கு முஸ்லீம்களின் இந்த, நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்த எவ்வித உரிமையும் கிடையாது. முஸ்லீம்கள் பெரும்பான்மையோராயுள்ள மாகாணத்தில் வசிக்கும் ஜனங்கள் இந்திய ஐக்கியத்தை விட்டுப் பிரிந்து போக விரும்பினால், அப்படிப் பிரிந்து போகும் உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும்.”
3
கீழே கரிய சமுத்திரம். அதன் அமைதியான நீர்ப்பரப்பின் மீது, உயிர்களின் வாடையே காணப்படவில்லை. எதிரே கண்ணுக்கெட்டிய தூரம் வெண்மையான மேகத்திரை. தனக்கு முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தைக் காட்டும் இயந்திரத்தைத் தவிர, தான் செல்லும் வேகத்தை அளப்பதற்கு ஆகாயத்திலே வேறு எவ்வித அடையாளமும் சுமேருக்குக் கிடைக்கவில்லை. மணிக்கு முன்னூறு மைல் வேகத்தில் அவனுடைய விமானம் பறந்து கொண்டிருந்தது. சுமேரின் சிந்தனை பழங்காலத்தை நாடிச்சென்றது. ஒரு காலத்தில் மனிதன் தான் கண்டுபிடித்த கூர்மையில்லாத கல் கத்தியை வைத்துக்கொண்டு, இதுதான் உலகத்திலே பெரிய ஆயுதம் என்று நினைத்துக்
கொண்டிருந்தான். ஆனால் இன்று அவன் ஆகாயத்திலே மிதந்து கொண்டிருக்கிறான். மனித அறிவு எவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டது! அதே சமயத்தில் மனிதத் தன்மையின் விரோதிகளைப் பற்றியும் அவன் மனம் சிந்தித்தது. அறிஞர்களின் மூளைகள் தந்த இந்த அற்புதமான கொடையை, பாசிஸ்டுகள், மக்களின் கால்களிலே அடிமை விலங்கைப் பூட்டுவதற்காக உபயோகிக்கிறார்கள். ஜப்பானிய பாசிஸ்டுகள், பாரதத்தின் எல்லைப்புறமான பர்மாவுக்குள் வந்து விட்டார்கள் என்று நினைத்தபொழுது, அவனுடைய உள்ளம் கொதித்தது; அப்பொழுது அவனுடைய மனக்கண் முன்னால், அந்த நடை கிணற்றுக்குப் பக்கத்திலுள்ள வீடும், அதிலே வசிக்கும் பெண்களும் காட்சியளித்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 362 | 363 | 364 | 365 | 366 | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவனுடைய, வேண்டும், நாம் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்