முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » வாசகர்களுக்கு
வால்காவிலிருந்து கங்கை வரை - வாசகர்களுக்கு
வாசகர்களுக்கு
பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன்
தமிழ் உலகத்திற்குப்
புதியவரல்ல. அவருடைய “பொது உடைமை தான் என்ன?”
என்ற
நூலைப் படித்தவர்கள் ஒவ்வொருவரும், இந்த அறிவுக்கடலின்
சிறுபகுதியையேனும் பார்த்திருப்பார்கள். பிள்ளைப் பருவத்திலேயே
அறிவுத்தாகமெடுத்த ராகுல்ஜி அறிவைச் சேகரிப்பதற்காக உலகத்தின்
மூலை முடுக்குகளையெல்லாம் சுற்றியிருக்கிறார். ஐக்கிய மாகாணத்தில்
ஆஜம்கட்ஜில்லாவைச் சேர்ந்த ஒரு சிறு கிராமத்திலே பிறந்த அவர், காசி
நகரிலே தொடங்கிய தமது அறிவு சேகரிக்கும் முயற்சியை லெனின் கிராடு
சர்வ கலாசாலைப் பேராசிரியர் பதவியைப் பெற்ற பிறகுங்கூடத் தொடர்ந்து
செய்து வந்திருக்கிறார். ஆயுள் முழுவதும் உழைத்துச் சேகரித்த அறிவுப்
பொக்கிஷத்தை அவருடைய நூல்களிலே அள்ளித் தந்திருக்கிறார்.
சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் முதலியவைகளைப் பற்றித் தத்துவ ரீதியாக, “மனித சமுதாயம்” என்ற ஒரு பெரிய நூலை எழுதி இருக்கிறார். அவரே கூறியிருப்பதுபோல், அந்த முக்கியப் பிரச்னைகளைச் சாதாரண ஜனங்களும் புரிந்து கொள்வதற்காக இந்த “வால்காவிலிருந்து கங்கை வரை” யை எழுதியிருக்கிறார். இது அவருடைய சிறந்த சிருஷ்டிகளுள் ஒன்று. இதிலுள்ள 20 கதைகளுள், ஒவ்வொன்றும் மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படிகள். தனி மனிதனையோ தனிச்சம்பவத்தையோ மையமாகக் கொள்ளாமல் சமுதாயத்தின் முக்கியமான மாற்றம் அல்லது பெரிய வளர்ச்சிகளையே மையமாகக் கொண்டு, கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன. சில கதைகள் அந்த வளர்ச்சி- மாற்றத்தின் போக்கைப் பொறுத்து இரண்டு மூன்று தலைமுறைகளைத் தம்முள் அடக்கிக் கொண்டிருக்கின்றன. சில கதைகள் ஒரு தலைமுறையைக் கூடப் பூராவாகத் தம்முள் அடக்கவில்லை. ஒவ்வொரு கதையிலும், அந்தந்தக் காலத்துப் பழக்க வழக்கங்கள் சூழ்நிலைகள் அப்படியே எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இவைகள் வெறும் கதைகளல்ல. சமுதாய வளர்ச்சியையும் சரித்திரத்தையும், காலங்களையும் நிர்ணயித்துக் கதை உருவத்திலே எழுதப்பட்டிருப்பதால், கதைப் போக்கிற்கு அவசியமில்லாத விஷயங்கள் ஒவ்வொரு கதையின் மத்தியிலும் இடம் பெற்றிருப்பதாகத் தோன்றலாம். சில இடங்களைப் படிக்கும் பொழுது, சரித்திர ஏடுகளைப் படிப்பதைப் போன்ற உணர்ச்சி கூட ஏற்படலாம். ஆனால், சரித்திரத்தையும் மனித சமுதாய வளர்ச்சியையும் தெரிந்து கொள்வதற்கு அவைகள் இன்றியமையாதவை. சரித்திரத்தைப் படிப்பதால் ஏற்படும் சலிப்பும், தத்துவத்தைக் கற்பதால் ஏற்படும் சிரமமும் தோன்றாதபடி, கதை உருவிலே இந்த அம்சங்களை அற்புதமாகப் பின்னித் தந்திருக்கிறார் ராகுல்ஜி. இது
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாசகர்களுக்கு - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்