முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 366
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 366
“காந்திய சுயராஜ்யமா, அல்லது பொதுஉடைமை சுயராஜ்யமா என்பதிலே உனக்கும் எனக்கும் அபிப்பிராய பேதம் இருக்கலாம். ஆனால் சுயராஜ்யம் இந்தியாவிற்குத்தான் என்பதில் அபிப்பிராய பேதம் இல்லையல்லவா, சுமேர்?”
“இந்தியா என்பது, ஒரு உருவற்ற-தெளிவில்லாத சொல் ரூப் பாபு! அந்தப் பெயரை வைத்துக்கொண்டு அநேக தவறுகளும் ஏமாற்றங்களும் ஏற்படக்கூடும். சுயராஜ்யம், இந்தியர்களுக்கு வேண்டும். அதில் இந்தியர்கள் தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே நிச்சயித்துக் கொள்வார்கள். ஆகாயத்திலிருந்து குதிக்கும் சில பெரிய மனிதர்களுக்கு மட்டும் உபயோகப்படும் சுயராஜ்யம் நமக்குத் தேவையில்லை.”
“போகட்டும்; அப்படியே வைத்துக் கொள்வோம். சுயராஜ்யம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியாவைத் துண்டுதுண்டாக ஆக்கிவிடக் கூடாதல்லவா?”
“நீங்கள் மறுபடியும் தவறான-தெளிவில்லாத சொல்லை உபயோகிக்கிறீர்கள். இந்தியாவைப் பிரிக்க வேண்டுமா அல்லது அப்படியே பிரிக்காமல் வைத்திருக்க வேண்டுமா என்பது அதில் வசிப்பவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. மௌரியர்கள் காலத்தில், ஹிந்துகுஷ் மலையையும் தாண்டி ஆமுகால்வாய் வரை இந்தியாவின் எல்லை இருந்தது. பாஷை, பழக்கம், வழக்கம், சரித்திரம் இவைகளையெல்லாம் நோக்கினால், ஆப்கானிய ஜாதி (பட்டான்) இந்தியாவையே சேர்ந்தது. பத்தாவது நூற்றாண்டு வரை காபூல் ஒரு ஹிந்து ராஜ்யமாகவே இருந்தது. அந்தக் காலத்தில், இந்தியாவின் எல்லை ஹிந்துகுஷ்மலைதான். இப்பொழுது அகண்ட ஹிந்துஸ்தான் வேண்டுமென்று சொல்கிறவர்கள், ஹிந்துகுஷ் மலைவரை உரிமை கொண்டாடப் போகிறார்களா? ஆப்கானியர்களின் விருப்பத்திற்கு விரோதமாகப்போக நினைக்காவிட்டாலும், சிந்துவிற்கு மேற்கே வசிக்கும் எல்லைப்புறவாசிகளான பட்டானியர்களைக்கூட அவர்களின் விருப்பத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள்ளேயே வைத்திருக்க முடியாது. அப்படியிருக்க, அதே விஷயம் சிந்து, பஞ்சாப், காஷ்மீர், கிழக்கு வங்காளம் ஆகிய பிரதேசங்களுக்கு ஏன் பொருந்தாது?”
“இந்தியாவிலிருந்து அவர்கள் விலகிப்போக அனுமதிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?”
“ஆம், அவர்கள் வற்புறுத்தினால். நாம் ஜனங்களுக்காகப் போராடுகிறோம். ஆகவே எந்த நாட்டு ஜனங்களும் அவர்களின் விருப்பத்திற்கு
விரோதமாக அரசியல் அடிமைத்தனத்திலே பிணைத்து வைக்கப்படக்கூடாது. பாகிஸ்தானைப் பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள், ஹிந்துக்கள் அல்ல, முஸ்லீம்கள். அதிக எண்ணிக்கையில் இருக்கும் மாகாணவாசிகளே முடிவு செய்யவேண்டும். நாம், இந்தியாவில் ஜனங்களுடைய ஆட்சியை ஏற்படுத்தாமல், சுரண்டுகிறவர்களின் ஆட்சியை ஏற்படுத்த விரும்பினால், இங்கு பாகிஸ்தான் ஏற்பட்டுத்தான் தீரும். மூளையாலும், உடலாலும் உழைக்கும் ஜனங்களின் ஆட்சி ஏற்பட்டால், அநேக சுதந்திர ஜாதிகள் நிறைந்த ஓர் ஐக்கிய தேசமாக இந்தியா விளங்கும். ஒரு ஜாதி என்பதற்கு ஒரே பாஷை பேசுகிறவர்கள்-உணவு, கொள்வினை, கொடுப்பினைகளில் ஒன்றாக இருப்பவர்கள் என்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 362 | 363 | 364 | 365 | 366 | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுயராஜ்யம், விருப்பத்திற்கு - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்