முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 362
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 362
“அது போகட்டும், கூலிக்காரியின் மகன் சுமேருக்கு இந்த சாம்ராஜ்ய யுத்தத்தில் உயிரைக் கொடுக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது என்று எனக்குத் தெரியவில்லை.”
“ஏனெனில் இந்த யுத்தத்தோடு அந்தக் கூலிக்காரியின் மகனுடைய எதிர்காலமும் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த யுத்தம் சாம்ராஜ்யத்தின் எதிர்காலத்தை மட்டும் நிச்சயிக்கப் போவதில்லை. சுரண்டலின் எதிர்காலத்தைப் பற்றியும் நிச்சயிக்கப் போகிறது.”
“இந்த யுத்தத்தின் முழுக் குற்றவாளிகள் ஆங்கில முதலாளிகள்தான் என்பதை நீ ஒப்புக்கொள்ளவில்லையா?”
“அந்தச் சுயநலத்தின் பிரதிநிதிகளான பால்டுவினும் சேம்பர்லினும் தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவர்கள்தான் முஸோலினியையும், ஹிட்லரையும் தட்டிக்கொடுத்து வளர்த்தார்கள். அதன் மூலம் சாம்ராஜ்யச் சுரண்டல் வர்க்கத்தினருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், பஸ்மாசுரன் வரத்தின் பலத்தைப் பரீட்சிக்க பரமேஸ்வரன் தலையிலேயே கைவைக்க முயன்ற கதையைப் போல் ஆகிவிட்டது. இந்த வேடிக்கை நடந்து
கொண்டிருந்த வரை நானும் வேடிக்கை பார்ப்பவனாகவே இருந்தேன். இன்று பஸ்மாசுரன் பரமேஸ்வரனை விட்டு விட்டு நம் தலையிலே கை வைக்க முயலுகிறான்.”
“நம் தலையிலா? ஆரம்பநிலைக்கும் தற்போதைய நிலைக்கும் ஒன்றும் வேற்றுமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.”
“உங்களுக்கு வேற்றுமை தெரியாது. ஏனெனில் உங்கள் வர்க்கம் முதலாளிவர்க்கம். பாசிஸ்டு ஆட்சியிலும் நெய்ப்பூரி கிடைக்குமென்ற நம்பிக்கை உடையவர்கள். இந்த யுத்தம் தோன்றியதால் மிட்ஸூயி* குடும்பம் நெய்யிலே குளிக்கிறது. ஆனால் சோவியத் யூனியன் தோல்வியடைந்தால், சுரண்டப்படும் தொழிலாளி விவசாயிகளுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் போய்விடும். கொலைகார ஹிட்லரும், டோஜோவும் நடத்தும் ராஜ்யத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையைக் கூடப் பெற்றிருக்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய கொடுமைக்காகவும்கூட எதிர்த்துப் போராடும் உரிமை அவர்களுக்கு இருக்காது. பாசிஸம் தொழிலாளிகளையும், விவசாயிகளையும் உண்மை அர்த்தத்தில் அடிமைகளாகவே ஆக்க விரும்புகிறது. எங்களுக்குச் சோவியத்யூனியன் பல நாடுகளில் ஒன்றல்ல. எங்கள் நம்பிக்கைக்கு ஆதாரமான ஒரே ஒரு தேசம். உலகத்தின் தொழிலாளிகளும், விவசாயிகளும் அதனிடம் தான் நம்பிக்கை வைத்திருக்க முடியும். ஒன்றரை நூற்றாண்டு காலம் போராடி, லட்சக்கணக்கான தியாகங்களைச்செய்த பிறகு, மனித சமுதாயத்திற்கு-அநாதி காலம் தொட்டுச் சுரண்டப்பட்டு வருபவர்களுக்குப் பொது உடைமைப்
பேரொளி இந்த உலகத்திலே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேரொளி ஒரு முறை அணைந்து போகும்படி விட்டு
___________________________________________________
*மிட்ஸுயி-ஜப்பானின் பொருளாதார வாழ்வு முழுவதையும் தங்கள் கையிலே வைத்திருக்கும் மூன்று பணக்காரக் குடும்பங்களிலே ஒன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 360 | 361 | 362 | 363 | 364 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்த, நம்பிக்கை - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்