முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 363
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 363
விட்டால் இந்த உலகம் மறுபடியும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு இருளிலே மூழ்கிக் கிடக்கும். நாங்கள் உயிரோடிருக்கும் வரை இந்தப் பயங்கரமான கொடுமை எங்கள் கண் முன்னாலேயே நடக்கவிட மாட்டோம்.”
“சுமேர்! தேசத்தில் இன்னும் பல சமுதாயக் கொள்கைக்காரர்கள் இருக்கிறார்களே, அவர்களும் உலகத்திலிருந்து சுரண்டலைப் போக்கத்தானே விரும்புகிறார்கள்?”
“சேவாக் கிராமத்திலிருந்து பரவிவரும் இருளைப் பிரகாசமாகக் கருதுகிற அந்தச் சமுதாயக் கொள்கைக்காரர்களிடமிருந்து சைத்தான் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். ஹிட்லரும்கூட, தன்னைச் சமுதாயக் கொள்ளைக்காரர் (சோஷலிஸ்ட்) என்று தான் சொல்லிக் கொள்கிறார். காந்திஜியின் சிஷ்யர்களும், தங்களைச் சமுதாயக் கொள்ளைக்காரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். சமுதாயக் கொள்கைக்காரர்கள் என்று சொல்லிக் கொள்வதால் யாரும் சமுதாயக் கொள்கைக்காரர்களாக ஆகிவிட முடியாது. ஹிட்லர், டோஜாவின் வெற்றியால் இந்தியாவில் முதலாளித்துவமும்- முதலாளி வர்க்கமும் அழிந்து விட மாட்டாது. இன்னும் அதிக உறுதியடைவே செய்யும். ஆனால் பாசிஸ்ட் முறைகளினால் தொழிலாளர்-விவசாயிகள்-மூச்சு விடக்கூட
முடியாத நிலைமை ஏற்படும். பொதுஉடைமைக்காரர்களின் கதி என்ன ஆகும் என்பதற்கு, சமீபத்திய இத்தாலி-ஜெர்மனின் சரித்திரத்தைப் பார்த்தாலே தெரியும்.
அவ்வளவு தூரம் ஏன்? இப்பொழுது பிரான்ஸிலே நாள்தோறும் பொது உடைமைக்காரர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் கேள்விப்படுகிறோமல்லவா? தன்னை மார்க்ஸ்வாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன், இந்த யுத்தத்திலிருந்து ஒதுங்கி நிற்க விரும்பினால், ஒன்று அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான்; அல்லது பிறரை ஏமாற்ற விரும்புகிறான். ஹிட்லர் டோஜோவின் ஆட்சியில் மார்க்ஸ்வாதியினுடைய உயிரின் விலை ஒரு துப்பாக்கிக் குண்டுதான். இது நமக்கு நன்றாகத் தெரியும். சமுதாயக் கொள்கைக்காரன், தான் நடுநிலைமை வகிப்பதாகச் சொன்னால், அது வௌவால் கொள்கையாகத் தான் ஆகும். சோவியத் யூனியன் அழிந்த பிறகும், சமுதாயக் கொள்கைக் கொடியைப் பறக்கவிட முடியும் என்று சொல்கிறவன் ஒன்று பயித்தியக்காரனாக இருக்க வேண்டும்; அல்லது ஏமாற்றும் சூழ்ச்சிக்காரனாக இருக்க வேண்டும்.”
“இந்த யுத்தத்தில் யாரும் நடுநிலைமை வகிக்க முடியாதென்று நீங்கள் கருதுகிறீர்களா?”
“ஆம்; இது என்னுடைய உறுதியான எண்ணம். யாருடைய மூளை சரியாக வேலை செய்கிறதோ, அவன் ஏதாவது ஒரு பக்கத்தில் சேராமல் இருக்க முடியாது. ஏனெனில், இந்த யுத்தம் ஒன்று சுரண்டல் எதிர்ப்புச்
சக்தியை அடியோடு அழித்து விடும். அல்லது முஸோலினி, ஹிட்லர், டோஜோக்களுக்கும் அவர்களின் வளர்ப்புத் தந்தைகளான பால்டுவின் சேம்பர்லின் ஹாலிபக்ஸ்களுக்கும் இந்த உலகத்திலே இடமிருக்க முடியாதபடி அந்தச் சக்தி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 361 | 362 | 363 | 364 | 365 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சமுதாயக், சொல்லிக், இந்த, என்று, தான், இருக்க, அல்லது, ஹிட்லர், வேண்டும், ஒன்று - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்