முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 361
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 361
என்ற பெயரில் நீங்கள் ஏற்றுக் கொள்வதானால், உலகிலே உண்மையான மத நம்பிக்கை இல்லாத நாடு எங்கே இருக்கிறது. காந்திஜியின் நண்பரும், முன்னால் லார்டு இர்வின் என்ற பெயரையுடையவருமான லார்டு ஹாலிபக்ஸ் ஒரு பக்காக் கிறிஸ்தவ பக்தர். இன்றுவரை மதத்தின் பெருமையைப் பிரசாரம் செய்து, மத நம்பிக்கை உள்ள ஆங்கிலேயர்கள் பொது உடைமைக் கொள்கையிலிருந்து ஒதுங்கி நிற்க வேண்டுமென்றுதான் இந்தக் கிறிஸ்தவ பக்தர்களும் உபதேசிக்கிறார்கள். அரேபியர்கள், துருக்கியர்களும், ஈரானியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் ஆகிய முஸ்லீம்கள், இந்தியர்களைவிடக் குறைந்த மத நம்பிக்கை உடையவர்களல்ல; லட்சக்கணக்கான யுவதிகள் தாங்களாகவே தங்கள் தலைமயிர்களை வெட்டிக் கயிறாகத் திரித்து கோவில் கட்டுவதற்காக மரங்களைத் தூக்கிச் சென்ற அந்த ஜப்பான் தேசம் உங்களை விட மத நம்பிக்கையில் குறைந்ததா? சுரண்டுகிறவர்கள் எல்லோரும் உறுதியான மத நம்பிக்கை உடையவர்கள். அதனால்தான் சுரண்டலை எதிர்ப்பவர்களை மத
விரோதிகள் என்று பிரகடனம் செய்கிறார்கள். பொது உடைமைக் கொள்கை அன்னிய நாட்டுச் சரக்கென்றே வைத்துக் கொள்வோம். கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் போன்ற அன்னிய மதங்களும், ரயில், தந்தி, விமானம், இயந்திரத்தொழிற்சாலைகள் போன்ற அன்னியப் பொருள்களும் இங்கு வந்து, நம் கண் முன்னாலேயே சுதேசியாக மாறிவிட்டிருக்கும் பொழுது, பொது உடைமைக் கொள்கையும் அவ்விதமே சுதேசியாக ஏன் மாறிவிட மாட்டாது?”
2
பாட்னாவிலே மாலை நேரத்தில் உலாவுவதற்கு லான், ஹாரடிங் பார்க் இரண்டையும் தவிர வேறு இடம் கிடையாது. அந்த இரண்டிடமும் கூட மிக மோசமான நிலைமையிலே வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பொது இடங்கள் யாரையும் கவர்ந்திழுக்கும் சக்தியற்றிருந்தாலும் மாலை நேரத்தில் உலாவவோ அல்லது நண்பர்களைச் சந்திக்கவோ விரும்புகிறவர்கள் அங்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. ஆயினும், பாங்சிப்பூர் லானிலே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த மூன்று நண்பர்களின் பேச்சும் முடிவதாகத் தெரியவில்லை. அவர்களில் ஒருவன்,
“தோழா சுமேர்! மறுபடியும் ஒருமுறை நீ நன்றாக யோசித்துப் பார். நீ ரொம்ப, வேகமாகக் காலெடுத்து வைக்க நினைக்கிறாய்.”
“மரணத்தோடு விளையாடுவதைவிட வேகமாக முன்னேறுவது வேறென்ன இருக்கமுடியும், ரூப்! இந்த முடிவு பக்காவானதுதான். நான் ஒன்றும் அவசரப்பட்டுச் செய்யவில்லை. அவசரப்பட்டுச் செய்யக்கூடியதுமல்ல.”
“காற்றிலே பறப்பது தம்பி! மாளிகையின் மாடிக் கைப்பிடிச் சுவரின் ஓரத்தில் நிற்பதுகூட எனக்குப் பயமாக இருக்கிறது.”
“எத்தனையோ பேருக்குச் சைக்கிளில் ஏறுவதுகூடப் பயமாக இருக்கிறது. ஆனால் நீ, இரண்டு கைகளையும் விட்டுவிட்டுச் சைக்கிள் ஓட்டுகிறாயே!”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 359 | 360 | 361 | 362 | 363 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொது, நம்பிக்கை, அந்த, உடைமைக், கிறிஸ்தவ, இருக்கிறது - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்