தமிழ் - தமிழ் அகரமுதலி - வீக்கு முதல் - வீடிகை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வீக்கு | கட்டுகை ; இறுகுகை : அடிக்கை ; பெருமை ; மிகுதி ; ஒரு கணிதமுறை . |
| வீக்குதல் | கட்டுதல் ; அடக்குதல் ; தடுத்தல் ; அடித்தல் ; நிறைத்தல் ; வேகமுறச் செலுத்துதல் ; உயிரைப் போக்குதல் ; அழித்தல் . |
| வீகம் | மோதிரம் ; பூட்டு ; விரைவு ; காற்று ; பறவை . |
| வீங்கல் | மிகுதி ; பொருளைப் பெறும்பொருட்டு ஏக்கங்கொள்ளுதல் ; இளைத்திருப்பவர் ; காண்க : வீங்கி ; தூங்குதல் . |
| வீங்கி | ஒன்றன்மீது ஏக்கங்கொண்டிருப்பவர் ; மரவகை . |
| வீங்குதல் | பருத்தல் ; பூரித்தல் ; வீக்கமுறுதல் ; வளர்தல் ; மிகுதல் ; நெருங்குதல் ; இறுகுதல் ; விறைப்பாய் நிற்றல் ; மேனோக்கிச் செல்லுதல் ; மெலிதல் ; ஏக்கங்கொள்ளுதல் ; தூங்குதல் . |
| வீங்கை | ஆடல்வகை ; குதிரைநடை ; ஒருவகை அசைவு . |
| வீச்சம் | தீநாற்றம் . |
| வீச்சாட்டம் | இடப்பரப்பு ; நன்னிலைமை ; நீளம் . |
| வீச்சு | எறிதல் ; சிறகடிக்கை ; அடி ; ஆட்டுகை ; நீளம் ; வேகம் ; ஓட்டம் ; நோய்வகை ; வலிமை ; வீண்பேச்சு ; ஆந்தை முதலியவற்றின் சத்தம் ; விளைவு . |
| வீச்சுக்காரன் | செலவுகாரன் ; பெருமைபேசுவோன் . |
| வீச்சுக்காரி | செலவுகாரி ; பெருமை பேசுவோள் ; விலைமகள் . |
| வீசகணிதம் | காண்க : பீசகணிதம் . |
| வீசகரி | வேங்கைமரம் . |
| வீசம் | 1/16 பங்காகிய மாகாணி ; விதை ; மூலம் ; முளை ; சுக்கிலம் ; மூளை ; காண்க : பீசகணிதம் ; பீசாட்சரம் ; நெல்லெடைப் பொன் . |
| வீசல் | எறிதல் ; வரையாது கொடுத்தல் . |
| வீசனம் | சிற்றாலவட்டம் ; விசிறி ; நூல் சுற்றுங்கருவி . |
| வீசாட்சரம் | காண்க : பீசாட்சரம் . |
| வீசி | அலை ; இன்பம் ; புல்லிது . |
| வீசிக்கட்டுதல் | விரிவாகக் கட்டுதல் . |
| வீசிநடத்தல் | காலை யெட்டிவைத்து வேகமாக நடத்தல் ; வெகுதொலைவு செல்லுதல் . |
| வீசிமாலி | கடல் . |
| வீசிவில்லிடுதல் | தேர் முதலியவற்றை நெம்பத் தடிபோடுதல் . |
| வீசுகாலேணி | தாங்குகால்கள் இரண்டுள்ள ஏணிவகை . |
| வீசுதல் | எறிதல் ; சிறகடித்தல் ; ஆட்டுதல் ; இரட்டுதல் ; சுழற்றுதல் ; அடித்தல் ; விரித்து நீட்டுதல் ; மிகுத்திடுதல் ; வரையாது கொடுத்தல் ; சிந்துதல் ; சிதறுதல் ; களைதல் ; செய்யாதொழிதல் ; காற்று முதலியன அடித்தல் ; பரவுதல் ; தீநாற்றம் அடித்தல் . |
| வீசுவில் | துறப்பணம் இழுக்க உதவும் வில் . |
| வீசுவிற்குடம் | துறப்பணக் கூடு . |
| வீசேறுதல் | மேலேறுதல . |
| வீசை | நாற்பது பலங்கொண்ட எடுத்தலளவை ; உதட்டின் மேற்புறத்து மயிர் . |
| வீஞ்சுதல் | சொல்வதற்கு ஒவ்வாமல் போதல் ; மிகுந்தவிலை கேட்டல் . |
| வீட்சணம் | பார்வை . |
| வீட்சணை | பார்வை . |
| வீட்டாள் | மனைவி . |
| வீட்டிறப்பு | மேற்கூரையின் தாழ்ந்த பக்கம் . |
| வீட்டுக்காரர் | கணவர் . |
| வீட்டுக்காரன் | வீட்டுக்குரியவன் ; கணவன் . |
| வீட்டுக்காரி | வீட்டுக்குடையவள் ; மனைவி . |
| வீட்டுக்காரியம் | குடும்பவேலை . |
| வீட்டுக்குடையவன் | வீட்டுக்குரியவன் ; குடும்பத்தலைவன் ; இராசிக்குரிய அதிபதி . |
| வீட்டுக்குத்தூரம் | மகளிர் மாதவிடாய் . |
| வீட்டுக்குவிலக்கு | மகளிர் மாதவிடாய் . |
| வீட்டுத்தெய்வம் | குடும்பதேவதை ; காண்க : மங்கலியப்பெண்டுகள் . |
| வீட்டுதல் | கொல்லுதல் ; அழித்தல் ; நீக்குதல் ; தள்ளுதல் . |
| வீட்டுநெறி | வீடுபேற்றுக்குரிய வழி . |
| வீட்டுப்பெண் | குடும்பத்திலே பிறந்த பெண் ; மகன் மனைவி , மருமகள் . |
| வீட்டுமம் | மனவுறுதி , அச்சம் . |
| வீட்டுலகம் | மேலுலகம் . |
| வீட்டுவாசல் | வீட்டின் முன்புற வாயில் . |
| வீட்டுவீரன் | வீட்டிலிருந்து வீரம்பேசி வெளியில் அஞ்சுவோன் . |
| வீட்டுவேலை | குடும்பவேலை ; வீடுகட்டுந்தொழில் ; வீட்டில் செய்து கொணருமாறு இடப்படும் வேலை . |
| வீடடைத்தல் | சாவு முதலியவற்றால் மரபற்று வீடு மூடிக்கிடக்கை . |
| வீடல் | காண்க : வீடுதல் . |
| வீடறுத்தல் | வழக்கு முதலியன தீர்த்தல் . |
| வீடாரம் | பாசறை ; வீடு . |
| வீடாவழி | வீடுவீடாக . |
| வீடி | தாம்பூலம் ; காண்க : கொற்றான் . |
| வீடிகை | வெற்றிலை ; வெற்றிலைச்சுருள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 989 | 990 | 991 | 992 | 993 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீக்கு முதல் - வீடிகை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அடித்தல், எறிதல், மனைவி, பார்வை, கொடுத்தல், வரையாது, முதலியன, வீட்டுக்குரியவன், வீடு, மாதவிடாய், மகளிர், குடும்பவேலை, பீசாட்சரம், நீளம், காற்று, அழித்தல், கட்டுதல், மிகுதி, ஏக்கங்கொள்ளுதல், வீங்கி, பெருமை, தீநாற்றம், செல்லுதல், தூங்குதல், பீசகணிதம்

