முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வினைத்தொடர்ச்சி முதல் - வீக்கமிறங்குதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வினைத்தொடர்ச்சி முதல் - வீக்கமிறங்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வினைத்தொடர்ச்சி | தீவினையின் பயன் . |
| வினைதீயோர் | தீவினையோர் . |
| வினைதீர்த்தல் | முன்னை வினையைப் போக்குதல் ; இடையூறு நீக்குதல் . |
| வினைதீர்த்தான் | விநாயகன் . |
| வினைநர் | தொழில்வல்லோர் . |
| வினைப்பகாப்பதம் | ' செய் ' யென்னும் வாய்பாட்டால் வரும் முதனிலை . |
| வினைப்பகுதி | பகுபதத்தில் வினைச்சொல்லாகிய பகுதி ; செயற்கூறு . |
| வினைப்பகுபதம் | பகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்கத்தக்க வினைச்சொல் . |
| வினைப்பயன் | முன்வினைப்படி வந்த பலன் . |
| வினைப்பெயர் | தொழிற்பெயர் ; காண்க : வினையாலணையும் பெயர் ; செய்தொழிலினால் ஒருவனுக்கு வரும் பெயர் . |
| வினைமாற்று | முன்சொன்ன தொழில் ஒழிய இனி வேறொன்று என்பதைக் காட்டுவதாகிய பொருண்மை . |
| வினைமுதல் | கருத்தா . |
| வினைமுதற்றொழில் | செயப்படுபொருள் . |
| வினைமூளுதல் | ஊழ்வினை முதிர்ந்து பயன் தரும் நிலையில் அமைதல் . |
| வினையம் | செய்தொழில் ; முன்னை வினை ; சூழ்ச்சி ; வஞ்சகம் ; வஞ்சக வேலைப்பாடு ; நிகழ்ச்சி ; கொடுஞ்செயல் . |
| வினையன் | தொழில் செய்பவன் ; வஞ்சகன் . |
| வினையாட்டி | ஏவல்வேலை செய்பவள் ; தீவினையுடையவள் . |
| வினையாண்மை | தொழிலைச் செய்துமுடிக்குந் திறமை . |
| வினையாலணையும்பெயர் | வினைமுற்றுப் பெயர்த்தன்மை பெற்றுவருவது . |
| வினையாள் | ஏவல்செய்வோன் ; தொழில் இயற்றுவோன் ; தீவினையுடையவன் . |
| வினையாளன் | ஏவல்செய்வோன் ; தொழில் இயற்றுவோன் ; தீவினையுடையவன் . |
| வினையிடைச்சொல் | வினைத்தன்மை பெற்று வரும் இடைச்சொல்வகை . |
| வினையியற்சொல் | உலகவழக்கிலுள்ள வினைச்சொல் . |
| வினையிலி | கடவுள் . |
| வினையின்மை | வினைப்பயன் இன்மையாகிய குணம் . |
| வினையுருபு | வினைச்சொல்லின் உறுப்பான இடைநிலை , விகுதி முதலியன . |
| வினையுரைப்போர் | தூதர் . |
| வினையுவமம் | தொழில்பற்றி வரும் ஒப்புமை . |
| வினையுவமை | தொழில்பற்றி வரும் ஒப்புமை . |
| வினையெச்சக்குறிப்பு | காண்க : குறிப்புவினையெச்சம் . |
| வினையெச்சம் | வினையைக்கொண்டு முடியும் குறைவினை . |
| வினையெஞ்சணி | வினை எஞ்சி நிற்பதாகிய ஓரணி . |
| வினையெஞ்சுகிளவி | காண்க : வினையெச்சம் . |
| வினைவயிற்பிரிதல் | தலைவன் தலைவியை நீங்கி வேந்தன் ஆணையாற் பகைமேற் பிரியும் பிரிவைக் கூறும் அகத்துறை . |
| வினைவர் | தொழிலினர் ; சந்து செய்விப்பவர் ; அமைச்சர் . |
| வினைவலம்படுத்தல் | எடுத்துக்கொண்ட செயலை வெற்றிபெறச் செய்தல் . |
| வினைவலர் | பிறர் சொன்ன செயல்களைச் செய்வோர் ; தொழில்செய்வதில் வல்லமையுள்ளோர் . |
| வினைவலி | செய்யக் கருதும் தொழிலின் வலிமை ; காண்க : வினைத்திட்பம் ; ஊழ்வினையின் வலிமை . |
| வினைவளர்த்தல் | பகைவிளைத்தல் . |
| வினைவாங்குதல் | செயலைப் புலப்படுத்தல் . |
| வினைவிநாசன் | தீவினையை ஒழிப்பவனாகிய கடவுள் . |
| வினைவிளைத்தல் | பொல்லாங்கு செய்தல் . |
| வினோதக்கூத்து | அரசர்முன்பு நடிக்கும் வெற்றிக் கொண்டாட்டக் கூத்து . |
| வினோதம் | அவா ; இயற்கைக்கு மாறானது ; விநோதம் . |
| வினோதன் | ஒன்றில் ஈடுபட்டு அதிலேயே பொழுது கழிப்போன் ; உற்சாகி . |
| வினோதி | ஒன்றில் ஈடுபட்டு அதிலேயே பொழுது கழிப்போன் ; உற்சாகி . |
| வினோதித்தல் | விளையாடுதல் . |
| வீ | ஓர் உயிர்மெய்யெழுத்து ( வ் + ஈ ) ; அழிவு ; சாவு ; நீக்கம் ; மடிவு ; மலர் ; பூந்தாது ; பறவை . |
| வீக்கம் | உடலுறுப்பு வீங்குதல் ; புண் முதலியவற்றின் புடைப்பு ; நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய் ; தோல் முதலியன பூரிக்கை ; மிகுதி ; பெருமை ; கூட்டம் ; செருக்கு ; ஆசை ; கட்டு ; இடையூறு ; மூடுகை ; இறுக்கம் ; வேகம் . |
| வீக்கமிறங்குதல் | உடலின் மேற்பகுதியிலிருந்த வீக்கங் குறைந்து மெல்லமெல்லக் கீழ்நோக்கி இறங்குகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 988 | 989 | 990 | 991 | 992 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வினைத்தொடர்ச்சி முதல் - வீக்கமிறங்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வரும், தொழில், காண்க, செய்தல், வலிமை, வினையெச்சம், ஒப்புமை, தொழில்பற்றி, உற்சாகி, ஒன்றில், பொழுது, அதிலேயே, ஈடுபட்டு, முதலியன, கழிப்போன், தீவினையுடையவன், வினைச்சொல், பகுதி, இடையூறு, முன்னை, வினைப்பயன், பெயர், பயன், இயற்றுவோன், ஏவல்செய்வோன், வினை, கடவுள்

