தமிழ் - தமிழ் அகரமுதலி - வைசயந்தம் முதல் - வௌவுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வைசயந்தம் | இந்திரன் மாளிகை ; இந்திரன் கொடி . |
| வைசயந்தி | திருமால் அணியும் மாலை ; மாளிகை முன் கட்டடம் ; தழுதாழை ; முன்னை ; ஒரு நகரம் . |
| வைசயந்திகை | கொடி . |
| வைசாகம் | சாந்திரமான மாதத்துள் இரண்டாவதான வைகாசி ; கூத்துநிலையுள் ஒன்று . |
| வைசித்திரி | புதுமை . |
| வைசியன் | வணிகன் ; தனவைசியர் அல்லது வணிகர் ; பூவைசியர் அல்லது உழவர் ; கோவைசியர் அல்லது இடையர் என்னும் மூன்று வகுப்பினர் . |
| வைசூரி | அம்மைநோய் . |
| வைசேடிகம் | கணாதரால் நிறுவப்பட்ட மதம் . |
| வைடம்மியம் | பகை ; மாறுபாடு . |
| வைடாலம் | பூனை ; மாய்மாலம் . |
| வைடூரியம் | ஒன்பதுவகை மணியுள் ஒன்று . |
| வைணவம் | ஒரு சமயம் ; மாலியம் ; திருமாலை வழிபடும் சமயம் ; பதினெண் புராணத்துள் ஒன்று ; மூங்கிலரிசி ; புல்லாங்குழல் . |
| வைணவர் | திருமாலை வழிபடுஞ் சமயத்தினர் . |
| வைணவி | அன்னையர் எழுவருள் ஒருத்தி ; மூங்கிற்குழல் . |
| வைணவிகன் | வீணை வாசிப்போன் ; வேய்ங்குழலூதுவோன் . |
| வைணிகன் | வீணை வாசிப்போன் . |
| வைணுகம் | யானைத்தோட்டி . |
| வைத்தல் | இடுதல் ; அளித்தல் ; இருக்கச் செய்தல் ; பள்ளிக்கு அனுப்புதல் ; வேலை முதலியவற்றில் அமர்த்துதல் ; சேமித்தல் ; பாதுகாத்தல் ; தனியாக ஒதுக்குதல் ; சிறையிலிடுதல் ; உடைத்தாயிருத்தல் ; அமைதல் ; வைப்பாட்டியாகக் கொள்ளுதல் ; தயாரித்தல் ; நடத்துதல் ; மதித்துப் போற்றுதல் ; வரையறுத்தல் ; எடுத்துச் சொல்லுதல் ; மனத்திற் கொள்ளுதல் ; தியானித்தல் ; உண்மை என்று கொள்ளுதல் ; நிலை மாறாதபடி செய்தல் . |
| வைத்தியசாலை | மருத்துவமனை . |
| வைத்தியநாதன் | சிவபிரான் ; ஒரு நூலாசிரியர் . |
| வைத்தியம் | மருத்துவம் . |
| வைத்தியன் | மருத்துவன் ; வேதப்பயிற்சி செய்பவன் . |
| வைத்து | ஓர் அசைச்சொல் . |
| வைத்துக்கொள்ளுதல் | உரிமையாகக் கொள்ளுதல் ; வைப்பாட்டியாகக் கொள்ளுதல் ; மணவிலக்குக்காக உண்மைபோல ஒப்புக்கொள்ளுதல் . |
| வைத்தூறு | வைக்கோற்போர் . |
| வைதருப்பநெறி | செறிவு ; தெளிவு முதலிய பத்துக்குணங்களும் அமையப் பாடுமுறை . |
| வைதருப்பம் | செறிவு ; தெளிவு முதலிய பத்துக்குணங்களும் அமையப் பாடுமுறை . |
| வைதல் | திட்டல் , சபித்தல் ; வஞ்சித்தல் ; பழித்துரைத்தல் . |
| வைதவியம் | கைம்மை . |
| வைதனிகம் | அற்றைக்கூலி . |
| வைதாளி | புகழ்ந்து பாடும் பாட்டு . |
| வைதாளிகர் | அரசரைப் புகழ்ந்து பாடுவோர் . |
| வைதாளியாடுவார் | அரசரைப் புகழ்ந்து பாடுவோர் . |
| வைதிகச்சொல் | வேத வழக்கான சொல் . |
| வைதிகசைவம் | வேதநெறிப்பட்ட சைவமதம் . |
| வைதிகம் | வேதநெறிப்பட்டது ; காலத்தோடு ஒத்த நாகரிகமற்றது ; சமயவொழுக்கங்களை அக்கறையோடு கடைப்பிடித்தொழுகுதல் . |
| வைதிகமார்க்கம் | வேதநெறிப்பட்ட சமயம் . |
| வைதிகன் | வேதமுணர்ந்த பார்ப்பான் ; வேதநெறியில் நடப்பவன் ; காலத்தோடு ஒத்த நாகரிகமற்றவன் . |
| வைதேகி | காண்க : வைதேவி ; திப்பிலி . |
| வைதேயம் | அறிவின்மை . |
| வைதேயன் | அறிவற்றவன் . |
| வைதேவி | சீதாதேவி . |
| வைந்தவம் | குதிரை ; சுத்தமாயை . |
| வைந்நுதி | கூரியநுனி . |
| வைப்பகம் | வங்கி ; நகை முதலானவற்றைக் காப்பாக வைக்குமிடம் . |
| வைப்பாட்டி | கூத்தியாள் . |
| வைப்பிடம் | பண்டம் முதலியன வைக்குமிடம் . |
| வைப்பிருக்கை | பண்டசாலை . |
| வைப்பு | வைக்கை ; பாதுகாப்பு நிதி ; புதையல் ; இடம் ; நிலப்பகுதி ; ஊர் ; உலகம் ; செயற்கையானது ; செயற்கைச் சரக்கு ; வைப்பாட்டி ; கலிப்பாவகையின் இறுதியுறுப்பு . |
| வைப்புக்கட்டு | பொய்க்கதை . |
| வைப்புச்சரக்கு | செயற்கை மருந்து . |
| வைப்புச்செப்பு | பண்டங்கள் வைக்குமிடம் ; நகை , பாண்டம் முதலிய உடைமைகள் . |
| வைப்புமுத்து | செயற்கை முத்து . |
| வைப்புவைத்தல் | சூனியம் வைத்தல் ; வைப்பாட்டியாக ஒருத்தியைக் கொள்ளுதல் . |
| வைப்புழி | பொருள் முதலியன சேமித்து வைக்கும் இடம் . |
| வைபவம் | பெருமை ; பெரியோர் வரலாறு . |
| வைபோகம் | மகிழ்ச்சி ; அறிவுக்கூர்மை ; சிற்றின்பக் களிப்பு ; சீர்மை ; வயணம் . |
| வைபோகி | விவேகி . |
| வைமாத்திரேயன் | சக்களத்தி மகன் . |
| வைமானிகர் | விமானத்திற் செல்லும் தேவர் . |
| வையகம் | மண்ணுலகம் ; விலங்கு இழுக்கும் வண்டி ; கூடாரவண்டி ; சிவிகை ; ஊர்தி ; உரோகிணிநாள் . |
| வையம் | பூமி ; குதிரை இழுக்கும் வண்டி ; தேர் ; ஊர்தி ; கூடாரவண்டி ; சிவிகை ; எருது ; உரோகிணிநாள் ; விளக்கு ; யாழ் . |
| வையமகள் | நிலமகள் . |
| வையாகரணன் | இலக்கணம்வல்லவன . |
| வையாபுரி | பழனிமலை . |
| வையாளி | குதிரை செல்லும் வழி ; குதிரையேற்றம் . |
| வையாளிவீதி | குதிரை செல்லும் வீதி . |
| வையை | மதுரையில் உள்ள ஆறு . |
| வையைத்துறைவன் | பாண்டியன் . |
| வைரக்கடுக்கன் | வயிரமணியிட்டமைந்த காதணி . |
| வைரக்கல் | வயிரமணி . |
| வைரம் | ஒன்பதுவகை மணியுள் ஒன்று ; கடினமானது ; மரக்காழ் ; செற்றம் ; பகை ; வீரத்தின் தன்மை ; வாச்சியப்பொது . |
| வைரவனூர்தி | நாய் . |
| வைராக்கியஞ்சொல்லுதல் | தான் துறவுபூணத் துணிந்துள்ளதை ஆசிரியன்முன் தெரிவித்துக்கொள்ளுதல் . |
| வைராக்கியம் | விடாப்பிடி ; வெறுப்பு ; உலகப் பற்றின்மை ; மதவெறி ; பகை . |
| வைராகம் | பற்றின்மை . |
| வைராகி | மனவுறுதியுள்ளவன் ; துறவி . |
| வைராவி | மனவுறுதியுள்ளவன் ; துறவி . |
| வைரி | பகைவன் ; மனவுறுதியுள்ளவன் . |
| வைரியம் | வீரியம் ; வெறுப்பு ; பகை . |
| வைரியர் | கூத்தர் ; பாணர் . |
| வைரோசனன் | விரோசனன் மகனாகிய மாவலி ; கதிரவன் ; வாலி . |
| வைலட்சணம் | அழகற்றது . |
| வைவு | ஏச்சு ; இகழ்வு ; சாபம் . |
| வைனதேயன் | கருடன் . |
| வைனன் | கருடன் . |
| வௌவால் | ஒரு பறவைவகை . |
| வௌவானத்தி | மண்டபத்தின் மேல்முகடு . |
| வௌவியம் | அரைத்த மஞ்சள் . |
| வௌவுதல் | கைப்பற்றுதல் ; ஆறலைத்தல் ; திருடுதல் ; கவர்தல் ; பாவம் , பேய் முதலியன பற்றிக்கொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் . |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வைசயந்தம் முதல் - வௌவுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கொள்ளுதல், ஒன்று, குதிரை, சமயம், முதலியன, முதலிய, செல்லும், புகழ்ந்து, மனவுறுதியுள்ளவன், வைக்குமிடம், அல்லது, வைதேவி, செயற்கை, இடம், வைப்பாட்டி, கூடாரவண்டி, வெறுப்பு, பற்றின்மை, துறவி, கருடன், உரோகிணிநாள், ஊர்தி, வண்டி, ஒத்த, சிவிகை, இழுக்கும், அரசரைப், திருமாலை, வீணை, வாசிப்போன், வைத்தல், மணியுள், ஒன்பதுவகை, இந்திரன், மாளிகை, கொடி, செய்தல், வைப்பாட்டியாகக், சொல், பாடுவோர், வேதநெறிப்பட்ட, பாடுமுறை, அமையப், செறிவு, தெளிவு, பத்துக்குணங்களும், காலத்தோடு

