தமிழ் - தமிழ் அகரமுதலி - விறிசு முதல் - வினைத்தொகை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விறிசு | ஒரு வாணவகை . |
| விறிசுவிடுதல் | விறிசுவாணத்தை மேலெழவிடுதல் ; பொய்யுரைகட்டிப் பேசுதல் . |
| விறுவிறுத்தல் | மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறென் றிழுத்தல் ; காரம் உறைத்தல் ; சினம் பொங்குதல் ; விரைதல் ; புண் குத்தெடுத்தல் . |
| விறுவிறுப்பு | மேற்பூச்சு உலர்ந்ததனால் விறுவிறுவென்று இழுக்கை ; மிகுசினம் ; சுறுசுறுப்பு ; உறைப்பு ; புண் முதலியன குத்தெடுக்கை . |
| விறுவிறெனல் | விறுவிறென்றிழுத்தற்குறிப்பு ; உறைத்தற்குறிப்பு ; குத்தற்குறிப்பு ; சினத்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு . |
| விறைத்தல் | மரத்துப்போதல் ; குளிர் முதலியவற்றால் நடுங்குதல் ; திகைத்தல் ; திமிர்கொள்ளல் . |
| விறைப்பு | விறைத்துப்போகை ; நடுக்கம் ; திகைப்பு ; செருக்குக்காட்டுகை . |
| வின்மை | விற்றொழில் ; வில்வன்மை . |
| வின்னப்படுதல் | சிதைதல் ; காயப்படுதல் ; பின்னப்படுதல் . |
| வின்னம் | மாறுபாடு ; வேறுபாடு ; சிதைவு ; பிளவு ; உறுப்புக்கோணல் ; தடை ; கேடு . |
| வின்னாண் | வில்லை வளைத்துப் பூட்டுங் கயிறு . |
| வின்னியாசம் | வைக்கை ; பேச்சுத்திறமை ; அம்புதொடுக்கை . |
| வினகம் | சேங்கொட்டைமரம் . |
| வினயம் | செய்தொழில் ; வஞ்சகம் ; வஞ்சக வேலைப்பாடு ; சூழ்ச்சி ; கொடுஞ்செயல் ; வணக்கவொடுக்கம் ; அடக்கம் ; காண்க : தேவபாணி . |
| வினவுதல் | உசாவுதல் ; விசாரணை செய்தல் ; பிறர்சொல்லக் கேட்டல் ; கேள்விப்படுதல் ; நினைதல் . |
| வினவுநர் | உசாவுவோர் ; செவியேற்பவர் . |
| வினா | கேள்வி ; சொல் ; விவேகம் ; நினைவு ; கவனிப்பு ; அன்றி ; இலக்கண நூல்களில் கூறப்படும் கேள்விகள் . |
| வினாசம் | கேடு . |
| வினாதல் | காண்க : வினவுதல் . |
| வினாதலிறை | வினாவடிவமான பதில் . |
| வினாப்பெயர் | வினாவெழுத்தினடியாகப் பிறந்த பெயர்ச்சொல் . |
| வினாபூதகற்பனை | தெளிவில்லாத நீதி வாக்கியம் . |
| வினாயகத்தாளம் | நாட்டியத் தொடக்கத்தில் விநாயகர்துதி பாடற்குக் கொட்டும் தாள விசேடம் . |
| வினாவழு | வினாவைப் பொருளியைபில்லாதபடி வழங்குகை . |
| வினாவழுவமைதி | வினாவழுவை ஆமென்று அமைத்துக்கொள்வது . |
| வினாவறிதல் | அறியுந்திறமை உண்டாதல் . |
| வினாவிடை | வினாவடிவான விடைவகை ; கேள்வியும் பதிலும் ; வினாவும் விடையுமாக அமைந்த நூல் . |
| வினாவுதல் | காண்க : வினவுதல் . |
| வினாவுள்ளவன் | நிதானபுத்தியுள்ளவன் . |
| வினாவெழுத்து | சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வந்து வினாப்பொருள் தரும் எழுத்துகளான எ , யா , ஆ , ஓ , ஏ என்பன . |
| வினிதை | அயோத்தி . |
| வினியோகக்காரன் | கொடையாளன் . |
| வினியோகம் | செலவிடுகை ; பகிர்ந்துகொடுத்தல் ; பயன்பாடு ; ஆலயத்தில் பிரசாதம் வழங்குகை . |
| வினை | தொழில் ; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னைவினை ; வினைச்சொல் ; செய்தற்குரியது ; பரிகாரச்செயல் ; முயற்சி ; போர் ; வஞ்சகம் ; தந்திரம் ; கருத்து ; தொந்தரவு ; சீழ் ; இரண்டைக் குறிக்கும் குழூஉக்குறி . |
| வினைக்கட்டு | கன்மபந்தம் . |
| வினைக்களம் | போர்க்களம் . |
| வினைக்கீடு | செய்த வினையின் பயன் . |
| வினைக்குறிப்பு | குறிப்புவினை . |
| வினைக்குறிப்புமுற்று | குறிப்புவினைமுற்றாய் வருவது . |
| வினைக்கேடன் | முன்னை வினையை ஒழிப்பவன் ; வேலையைத் தடைசெய்து கெடுப்போன் . |
| வினைக்கேடு | வீணானது ; செயலறுகை ; தாமதம் . |
| வினைச்செவ்வெண் | தொடர்ந்துவரும் வினையெச்சங்களில் எண்ணிடைச்சொல் தொக்கு வருவது . |
| வினைச்சொல் | பொருளின் புடைபெயர்ச்சியைத் தெரிவிக்கும் சொல் . |
| வினைசெயல்வகை | வினையைச் செய்யுந் திறம் . |
| வினைஞர் | தொழில் செய்வோர் ; மருதநில மக்கள் ; கம்மாளர் ; கூத்தர் ; வணிகர் ; வேளாளர் . |
| வினைத்தலை | போர்க்களம் . |
| வினைத்திட்பம் | தொழில்செய்வதில் மனவலிமை . |
| வினைத்திரிசொல் | திரிந்த வினைச்சொல் ; வழக்கிலின்றி அரிதிற் பொருளுணர்தற்குரிய வினைச்சொல் . |
| வினைத்தூய்மை | செயலின் தூய்மை . |
| வினைத்தொகை | காலங்கரந்த பெயரெச்சத் தொடர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 987 | 988 | 989 | 990 | 991 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விறிசு முதல் - வினைத்தொகை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வினைச்சொல், வினவுதல், சொல், காண்க, மேற்பூச்சு, போர்க்களம், வருவது, தொழில், வழங்குகை, வஞ்சகம், புண், உலர்ந்ததனால், கேடு

