முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வீரச்சங்கிலி முதல் - வீராதனம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வீரச்சங்கிலி முதல் - வீராதனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வீரச்சங்கிலி | வீரத்திற்கு அறிகுறியாகக் கையிலணியும் பொன்னணி ; மகளிர் கழுத்தணிவகை . |
| வீரச்சலங்கை | வீரர் காலிலணியும் பொற்சலங்கை . |
| வீரச்சுவை | வீரத்தை விளக்கும் சுவை . |
| வீரச்செல்வி | கொற்றவை . |
| வீரசயந்திகை | போர் ; போர்வீரரது கூத்துவகை . |
| வீரசயனம் | திருமாலின் படுக்கைநிலைவகை . |
| வீரசாசனம் | வீரர்க்குக் கொடுக்கும் நிலம் முதலிய . |
| வீரசிங்காசனம் | வீரர்கள் இருத்தற்குரிய அரியணை . |
| வீரசின்னம் | வீரர் விருதுகளுள் ஒன்றான ஊதுகொம்பு . |
| வீரசுவர்க்கம் | இறந்த வீரர் அடையும் துறக்கப் பதவி . |
| வீரசூரம் | பேராண்மை . |
| வீரசூரன் | அதிவீரன் ; பேராண்மையுடையோன் . |
| வீரசைவன் | இலிங்கதாரிகளாகிய வீரசைவ மதத்தினன் . |
| வீரட்டம் | சிவபிரானது வீரம் விளங்கிய தலம் ; கூத்துவகை . |
| வீரட்டானம் | சிவபிரானது வீரம் விளங்கிய தலம் ; கூத்துவகை . |
| வீரணம் | காண்க : இலாமிச்சு(சை) . |
| வீரணன் | வீரமுள்ளவன் . |
| வீரணி | மிளகு ; காண்க : இலாமிச்சு(சை) . |
| வீரத்துவம் | வீரத்தன்மை . |
| வீரதச்சுவன் | மன்மதன் . |
| வீரதத்துவம் | காண்க : வீரத்துவம் . |
| வீரதரன் | வீரருள் மிக்கான் . |
| வீரதீரன் | துணிவுமிக்க வீரன் ; ஒன்பதுவகை வீரருள் ஒருவன் . |
| வீரதுரந்தரன் | வீரருள் தலைவன் ; பேராற்றலுள்ள வீரன் . |
| வீரதை | வீரம் ; வலிமை . |
| வீரப்பட்டயம் | வெற்றிபெற்ற வீரர் நெற்றியில் அணியும் பொற்றகடு . |
| வீரப்பாடு | வெற்றி ; பேராண்மை . |
| வீரப்பேர் | வீரம்பற்றிப் புனையும் பெயர் . |
| வீரப்போர் | வீரர்களின் நெறிதவறாத சண்டை . |
| வீரபட்டம் | காண்க : வீரப்பட்டயம் ; தெய்வ மூர்த்தங்கட்கு அணியும் நெற்றியணிவகை . |
| வீரபட்டிகை | காண்க : வீரப்பட்டயம் . |
| வீரபத்திரம் | அசுவமேதக் குதிரை . |
| வீரபத்திரன் | உருத்திரமூர்த்திகளுள் ஒருவன் . |
| வீரபத்தினி | மறக் கற்புடையாள் ; வீரனின் மனைவி . |
| வீரபானம் | வீரர் அருந்தும் மது . |
| வீரம் | பேராண்மை ; பெருஞ்செயல் ; பெருமிதச்சுவை ; வலிமை ; மேன்மை ; வரிக்கூத்துவகை ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; காண்க : வீராசனம் ; மிளகு ; கஞ்சி ; அத்திவகை ; முதுகு ; மலை ; சவ்வீரம் ; மருந்துவகை ; இஞ்சி . |
| வீரம்பேசுதல் | தன் வல்லமையைத் தானே புகழ்தல் ; ஆண்மைத்திறங் கூறுதல் . |
| வீரமகரம் | கடல் கடந்து பகைவர் ஊரைக் கைப்பற்றிய தேர்வேந்தர் முன்பாகப் பிடிக்கும் விருது ; கோயில்மூர்த்தியின்முன் எடுக்கும் விருதுவகை . |
| வீரமகள் | காண்க : வீரலட்சுமி . |
| வீரமங்கை | காண்க : வீரலட்சுமி . |
| வீரமந்திரம் | வேண்டும்போது நிற்கவும் பறந்து செல்லவும் குதிரையின் காதில் ஓதும் மந்திரம் . |
| வீரமாகாளன் | ஐயனாரின் படைத்தலைவரான ஊர்த்தேவதை . |
| வீரமாகாளி | துர்க்காதேவி . |
| வீரமார்த்தாண்டன் | பெருவீரன் ; ஒன்பான் வீரருள் ஒருவன் . |
| வீரமாலை | வீரனைப் பாடும் பாடல்வகை ; வெற்றிமாலை . |
| வீரமுடி | வீரர் அணியும் அணிவகை . |
| வீரமுந்திரிகை | காலின் நடுவிரலணி . |
| வீரமுரசு | மும்முரசுகளுள் வீரத்தின் அறிகுறியாக முழக்கும் முரசு . |
| வீரமுழவு | முரசு , நிசானம் , துடுமை , திமிலை என நால்வகையான போர்ப்பறை . |
| வீரமொழி | வீரர் உரத்துக் கூறும் ஆண்மைப் பேச்சு . |
| வீரரசம் | வீரத்தை விளக்கும் சுவை . |
| வீரலட்சுமி | வெற்றிக்குரிய தெய்வம் ; வீரத்திற்குரிய தெய்வம் ; வீரமாகிய செல்வம் . |
| வீரவளை | வீரர் அணியும் கடகம் . |
| வீரவாதம் | காண்க : வீரமொழி . |
| வீரவாரம் | வீரர் அணியும் வெட்சிமாலை ; பேராரவாரம் . |
| வீரவிரதம் | வீரன் பயிலுங் கொடிய நோன்பு . |
| வீரவிருட்சம் | ஒரு மரவகை . |
| வீரவெண்டயம் | காண்க : வீரக்கழல் ; திருவாரூர்த் தியாகராசரது பட்டாக்கத்தி . |
| வீரவெறி | வீரத்தாலான மதர்ப்பு . |
| வீரன் | விரமுள்ளவன் ; திண்ணியன் ; காண்க : வீரபத்திரன் ; அருகன் ; படைத்தலைவன் ; வீடுமன் ; தீ ; ஓர் ஊர்த்தேவதை ; ஓமாக்கினி ; கூத்தாடி . |
| வீராகரன் | வீரமிக்கோன் . |
| வீராங்கனை | மறத்தி ; வீரப்பெண் . |
| வீராசனம் | யோகாசனவகை ; போர்க்களம் . |
| வீராணம் | ஒரு பெரும்பறைவகை . |
| வீராதனம் | காண்க : வீராசனம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 991 | 992 | 993 | 994 | 995 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீரச்சங்கிலி முதல் - வீராதனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வீரர், அணியும், வீரம், வீரருள், வீரன், ஒருவன், வீராசனம், வீரலட்சுமி, கூத்துவகை, வீரப்பட்டயம், பேராண்மை, தெய்வம், வீரமொழி, முரசு, ஊர்த்தேவதை, வீரபத்திரன், வீரத்துவம், சுவை, விளக்கும், வீரத்தை, சிவபிரானது, விளங்கிய, மிளகு, இலாமிச்சு, தலம், வலிமை

