தமிழ் - தமிழ் அகரமுதலி - வீடு முதல் - வீரங்காட்டுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வீடு | மனை ; விடுகை : விடுதலை ; வினைநீக்கம் ; முடிவு ; அழித்தல் ; படைப்பு ; வீடுபேறு ; துறக்கம் ; இராசி ; சதுரங்கத்தில் காய்கள் இருத்தற்குரிய இடம் ; தேற்றாமரம் ; ஒன்றைக் குறிக்கும் குழூஉக்குறி . |
| வீடுகொள்ளுதல் | மீண்டும் பெறுதல் . |
| வீடுசெய்தல் | துறத்தல் ; விடுதலைசெய்தல் ; வரி முதலியன விட்டுக்கொடுத்தல் ; படைத்தல் . |
| வீடுசேர்தல் | அழிதல் . |
| வீடுதல் | கெடுதல் ; ஒழிதல் ; சாதல் ; விடுதல் . |
| வீடுதூங்கி | பிறனை அடுத்து மதிப்பிழந்து வாழ்வோன் . |
| வீடுநர் | இறப்பவர் . |
| வீடுபெயர்தல் | இருப்பிடம் விட்டு வேறிடஞ்செல்லுதல் . |
| வீடுபேறு | முத்திநிலை . |
| வீடுவாசல் | வீடும் அதைச் சார்ந்த பொருளும் . |
| வீடுவித்தல் | அழிவுசெய்தல் . |
| வீடெடுத்தல் | வீடுகட்டுதல் . |
| வீண் | பயனின்மை ; பயனற்றது ; தேவையற்றது . |
| வீண்காரியம் | பயனற்ற செயல் . |
| வீண்காலம் | பயனின்றிப் போக்குங் காலம் . |
| வீண்செயல் | காண்க : வீண்காரியம் . |
| வீண்செலவு | பயனற்ற பணச்செலவு . |
| வீண்சொல் | பயனில்சொல் . |
| வீண்டம்பம் | பயனற்ற பகட்டு . |
| வீண்நியாயம் | சாக்கு ; பயனற்ற விவாதம் . |
| வீண்பாடு | பயனற்ற வேலை ; பயனற்ற முயற்சி . |
| வீண்பொழுதுபோக்குதல் | காலத்தை வீணேகழித்தல் . |
| வீண்வம்பு | தகாத பேச்சு அல்லது செயல் ; பயனற்ற வம்பளப்பு . |
| வீணன் | சோம்பேறி ; பயனற்றவன் ; தீநெறி நடப்போன் . |
| வீணாகரணம் | வீணைவாசித்தல் . |
| வீணாத்தண்டு | வீணைக்காம்பு . |
| வீணாதண்டம் | காண்க : வீணாத்தண்டு ; முதுகெலும்பு . |
| வீணாவாதன் | வீணைவாசிப்போன் . |
| வீணை | இருபத்திரண்டு வகையுள்ள யாழ் போன்ற நரம்புக் கருவிவகை . |
| வீணைமீட்டுதல் | நரம்பை நயமுணர்ந்து சுருதி சேர்த்தல் . |
| வீணையியக்கல் | வீணையிலே பாடுதல் . |
| வீணைவல்லவர் | வீணைவாசிப்பதில் வல்லவர் ; கந்தருவர் . |
| வீணைவல்லோர் | வீணைவாசிப்பதில் வல்லவர் ; கந்தருவர் . |
| வீணைவலிக்கட்டு | யாழின் வார்க்கட்டு . |
| வீத்து | அடிக்கை ; நீளம் . |
| வீதசோகம் | அசோகமரம் . |
| வீதம் | அளவுமுறை ; பங்கு ; விடுகை ; விடப்பட்டது ; விழுக்காடு ; அமைதி . |
| வீதராகம் | பற்றின்மை . |
| வீதராகன் | பற்றற்றவன் . |
| வீதல் | வறுமை ; சாதல் . |
| வீதன் | சாந்தன் . |
| வீதா | பயனின்மை . |
| வீதாசாரம் | பங்கு . |
| வீதி | தெரு ; கடைவீதி ; சூரியன் முதலிய கோள்கள் செல்லும் வழி ; வழி ; முறை ; ஒழுங்கு ; நாடகவகை ; அகலம் ; நேரோட்டம் ; காண்க : வையாளிவீதி ; ஒளி , மேடை ; அச்சம் ; குதிரை . |
| வீதிகுத்துதல் | தீமை பயக்குமாறு தெருவுக்கு நேராக வீடு அமைந்திருக்கும் நிலை . |
| வீதிகோத்திரம் | அக்கினி . |
| வீதித்தல் | பங்கிடுதல் ; பகுத்து ஆராய்தல் . |
| வீதிப்போக்கு | இசையின் நேர்செலவு . |
| வீதியிலேவிடுதல் | குழந்தை முதலியவற்றைத் திக்கற்ற நிலையில் விட்டுவிடுதல் . |
| வீதிவண்ணச்சேலை | ஒரு புடைவைவகை . |
| வீப்பகழி | காமனின் மலரம்பு . |
| வீபணி | கடைவீதி , அங்காடி . |
| வீபத்து | சந்திரன் . |
| வீம்பன் | வீண்பெருமைக்காரன் ; செருக்குடையோன் ; பிடிவாதக்காரன் . |
| வீம்பு | வீண்பெருமை ; தற்புகழ்ச்சி ; பிடிவாதம் . |
| வீம்புப்பேச்சு | தற்புகழ்ச்சி . |
| வீமம் | அச்சம் ; அச்சந்தருவது ; நரகவகை ; பருமன் . |
| வீயம் | வித்து ; அரிசி . |
| வீர்வீரெனல் | கத்துதற்குறிப்பு . |
| வீரக்கல் | காண்க : நடுகல் . |
| வீரக்கழல் | வீரர்கள் காலில் அணியும் அணி , கொடையாலும் வீரத்தாலும் கட்டும் கழல் . |
| வீரக்குட்டி | வீரரிற் சிறந்தோன் . |
| வீரக்குழல் | முன்கையில் அணியும் இருப்புக்கவசம் . |
| வீரக்கொடி | வெற்றிக்கொடி . |
| வீரக்கொம்பு | படையெழுச்சியில் ஊதுங்கொம்பு . |
| வீரகடகம் | வீரர் அணியும் கைவளை . |
| வீரகண்டாமணி | வீரக்குறியாக அணியும் மணிகட்டிய கழல் . |
| வீரகத்தி | வீரரைக் கொன்ற பழி . |
| வீரகவசம் | வீரர் அணியும் காப்புச்சட்டை . |
| வீரகேயூரம் | வீரர்அணிவதற்குரிய இருப்புத்தோளணி . |
| வீரங்காட்டுதல் | சூரங்காண்பித்தல் , தன் வலிமை காட்டுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 990 | 991 | 992 | 993 | 994 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீடு முதல் - வீரங்காட்டுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பயனற்ற, அணியும், காண்க, கடைவீதி, பங்கு, கந்தருவர், அச்சம், வீரர், கழல், தற்புகழ்ச்சி, வல்லவர், வீணாத்தண்டு, சாதல், வீடுபேறு, விடுகை, பயனின்மை, வீண்காரியம், வீடு, செயல், வீணைவாசிப்பதில்

