தமிழ் - தமிழ் அகரமுதலி - அக்காரை முதல் - அகங்கரிப்பு வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
அக்குரு | விரல் ; கைந்நுனி . |
அக்குரோணி | பெரும்படையின் ஒரு கூறு ; 21,870 தேரும் , 21,870 யானையும் , 65 ,610 குதிரையும் , 1 ,09 ,350 காலாளும் கொண்ட படைத்தொகுப்பு . |
அக்குல்லி | காண்க : அஃகுல்லி . |
அக்குவடம் | சங்குமணிமாலை . |
அக்குள் | கக்கம் , கமுக்கட்டு , தோளின் பொருத்து உள்ளிடம் . |
அக்குளு | அக்குள் ; கூச்சம் . |
அக்குளுத்தல் | கூச்சமுண்டாக்குதல் . |
அக்கை | காண்க : அக்கா ( ள் ) . |
அக்கோ | வியப்பு இரக்கச் சொல் . |
அக்கோடம் | கடுக்காய் . |
அக்கோலம் | தேற்றாங்கொட்டை . |
அகக்கண் | உள்ளறிவு ; ஞானம் . |
அகக்கரணம் | உள்ளம் , மனம் . |
அகக்களி | மனமகிழ்ச்சி . |
அகக்காழ் | மரத்தின் உள்வயிரம் ; ஆண்மரம் . |
அகக்கூத்து | முக்குணம் சார்ந்த நடிப்பு . |
அகங்கரித்தல் | செருக்குக்கொள்ளுதல் . |
அகங்கரிப்பு | செருக்கு , அகங்காரம் . |
அக்காரை | ஒருவகைச் சிற்றுண்டி . |
அக்கானி | பதநீர் . |
அக்கி | அக்கினி ; வெப்பு ; அக்கினிக்கரப்பான் என்னும் நோய் ; கொப்புளம் ; பூச்சி வகையுள் ஒன்று ; கண் ; தேர் . |
அக்கிக்கல் | மாணிக்கத்துள் ஒன்று ; படிகவகையுள் ஒன்று . |
அக்கிச்சூர் | கண்நோய் . |
அக்கிப்படலம் | கண்நோய் . |
அக்கியாதம் | காண்க : அஞ்ஞாதம் . |
அக்கியாதவாசம் | காண்க : அஞ்ஞாதவாசம் . |
அக்கியானம் | காண்க : அஞ்ஞானம் . |
அக்கியெழுதுதல் | அக்கிப்புண் ஆறும்பொருட்டுச் செங்காவிக் கல்லாலான குழம்பினால் சிங்கம் நாய் போன்ற உருவங்களை எழுதுதல் . |
அக்கிரகண்ணியன் | அவையில் முதல்வனாக மதிக்கத்தக்கவன் . |
அக்கிரகாரம் | பார்ப்பனர் கூடிவாழும் இடம் . |
அக்கிரசந்தானி | உயிர்களின் நன்மை தீமைகள் எழுதிவைக்கப்படும் எமனுடைய குறிப்பேடு . |
அக்கிரசம்பாவனை | முதல் மரியாதை ; முதல் வரவேற்பு . |
அக்கிரதாம்பூலம் | முதல் தாம்பூலம் . |
அக்கிரபூசனை | முதலில செய்யும் வழிபாடு . |
அக்கிரபூசை | முதலில செய்யும் வழிபாடு . |
அக்கிரசன் | முதலில் பிறந்தோன் , மூத்த தமையன் . |
அக்கிரசன்மன் | முதலில் பிறந்தோன் , மூத்த தமையன் . |
அக்கிரம் | நுனி ; உச்சி ; முதன்மை ; தொடக்கம் . |
அக்கிரமம் | முறையின்மை , வரம்புமீறிய செய்கை ; ஒழுங்கின்மை ; கொடுமை . |
அக்கிராசனம் | அவைத்தலைமை . |
அக்கிலிப்பிக்கிலி | குழப்பம் . |
அக்கினி | தீ ; தீக்கடவுள் ; செங்கொடிவேலி ; நவச்சாரம் ; மூத்திரம் ; வெடியுப்பு . |
அக்கினிக்கட்டு | நெருப்புச் சுடாமல் செய்யும் வித்தை . |
அக்கினிக்கருப்பன் | நெருப்பிலிருந்து தோன்றியவன் , முருகன் . |
அக்கினிகாரியம் | ஓமத்தீ வளர்த்துச் செய்யும் சடங்கு . |
அக்கினிகோணம் | தென்கிழக்கு மூலை . |
அக்கினிகோத்திரம் | நாள்தோறும் செய்யும் தீவேள்வி . |
அக்கினிசகன் | அக்கினி நண்பன் , காற்று . |
அக்கினிசகாயன் | அக்கினி நண்பன் , காற்று . |
அக்கினிசாந்தி | வேள்வி , ஓமம் . |
அக்கினிட்டி | நெருப்பிடு கலம் . |
அக்கினிட்டோமம் | சோமவேள்வி ; தேவர் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்விவகை . |
அக்கினித்தம்பனம் | நெருப்புச்சுடாமல் செய்யும் வித்தை . |
அக்கினித்திராவகம் | தீப் போலப் பட்ட இடத்தை வேகச் செய்யும் ஒருவகை நீர்மப் பொருள் , நைட்ரிக் அமிலம் . |
அக்கினிதிசை | தென்கிழக்கு . |
அக்கினிதேவன் | தீக் கடவுள் . |
அக்கினிநட்சத்திரம் | கார்த்திகை நட்சத்திரம் ; சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி . |
அக்கினிநாள் | கார்த்திகை நட்சத்திரம் ; சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி . |
அக்கினிப்பிரவேசம் | தீப் பாய்தல் ; உடன்கட்டையேறுதல் . |
அக்கினிப்பிழம்பு | நெருப்புச்சுடர் , தீக்கொழுந்து , தீத்திரள் . |
அக்கினிபாதை | தீயால் விளையும் கேடு . |
அக்கினிமணி | காண்க : சூரியகாந்தக்கல் . |
அக்கினிமரம் | காட்டுப்பலா . |
அக்கினிமாந்தம் | ஒருவகை நோய் . |
அக்கினிமுகம் | சேங்கொட்டை . |
அக்கினிமூலை | காண்க : அக்கினிதிசை . |
அக்கீம் | முகம்மதிய மருத்துவன் . |
அக்கு | எலும்பு ; சங்குமணி ; எருதின் திமில் ; பலகறை ; கண் ; உருத்திராக்கம் ; உரிமை ; எட்டிமரம் . |
அக்குசை | சமணக் கைம்பெண் துறவி . |
அக்குத்தொக்கு | ஒட்டுப்பற்று , தொடர்பு . |
அக்குதார் | உரிமையாளன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்காரை முதல் - அகங்கரிப்பு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செய்யும், காண்க, அக்கினி, ஒன்று, நட்சத்திரம், கார்த்திகை, ஒருவகை, தீப், சித்திரை, அக்கினிதிசை, மாதங்களில், பகுதி, காலப், வெப்பம்மிகுந்த, காற்று, வைகாசி, வித்தை, முதலில, வழிபாடு, கண்நோய், நோய், அக்குள், முதலில், பிறந்தோன், தென்கிழக்கு, சொல், தமையன், மூத்த, நண்பன்