தமிழ் - தமிழ் அகரமுதலி - விளைபொருள் முதல் - விறாய் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விளைபொருள் | நிலத்திலுண்டாகும் பொருள் . |
| விளையவைத்தல் | முதிரச்செய்தல் ; பயன்படச்செய்தல் ; விளைவுண்டாகச் செய்தல் ; இறுகக்கட்டியாகும்படி செய்தல் ; அவுரிச்சரக்கை அழுகவைத்தல் ; பிணஞ்சுட நெருப்பு மூட்டுதல் . |
| விளையாட்டம் | காண்க : விளையாட்டு ; விளைநிலம் . |
| விளையாட்டம்மை | மணல்வாரியம்மை ; சின்னம்மை . |
| விளையாட்டு | பொழுதுபோக்குக்குரிய மகிழ்ச்சிச் செயல் ; எளிதாகச் செய்யுந் தொழில் ; வேடிக்கை ; காதல்விளையாட்டு ; பாடநினைத்த வண்ணத்திற் சந்தத்தை விடுகை . |
| விளையாட்டுக்காட்டுதல் | குழந்தைகட்குப் போக்குக்காட்டுதல் ; வேடிக்கைகாட்டுதல் ; சாலவித்தை முதலியன காட்டுதல் . |
| விளையாட்டுப்பிள்ளை | சிறுபிள்ளை ; அறிவீனமாய் நடப்பவர் ; கவலையின்றி இருப்பவர் . |
| விளையாடுதல் | பொழுதுபோக்குதல் ; துள்ளிக்குதித்தல் ; உடற்பயிற்சி செய்தல் ; வேடிக்கையாய் செய்தல் ; ஏளனம் செய்தல் . |
| விளையாநிலம் | களர்நிலம் , பயிர்விளையாத நிலம் . |
| விளையுங்காலம் | அறுவடைக்காலம் . |
| விளையுள் | விளைச்சல் ; முதிர்கை ; வயல் ; உள்ளம் . |
| விளைவித்தல் | விளையச்செய்தல் ; செயற்கை வழியாகப் பயிர் முதலியன வளர்த்தல் ; பயன்தருதல் . |
| விளைவு | நிகழ்ச்சி ; விளைகை ; முதுமை ; விளைபொருள் ; பழம் ; பயன் ; கைகூடுகை ; ஆக்கம் ; விளையுமிடம் ; வயல் ; மேகம் ; நாடகச்சந்தி ஐந்தனுள் ஒன்று . |
| விளைவுகாலம் | தானியம் வளர்ந்திருக்கும் காலம் ; காண்க : விளையுங்காலம் . |
| விற்காரன் | விற்றொழிலில் வல்லவன் . |
| விற்கிடை | நான்குமுழ அளவு . |
| விற்குன்று | சிவபிரானது வில்லான மேருமலை . |
| விற்கோடி | தனுஷ்கோடி ; ஒரு பேரெண்வகை . |
| விற்படை | வில்லாயுதம் ; காண்க : விற்றானை ; அம்பு . |
| விற்பத்தி | கல்விவன்மை ; மொழிப்பொருட்காரணம் . |
| விற்பத்திமான் | கல்வியிற் சிறந்தோன் . |
| விற்பன்னம் | காண்க : விற்பனம் . |
| விற்பன்னன் | கல்வியிற் சிறந்தோன் ; புலவன் ; புதுமைச் செயல்புரியும் ஆற்றலுள்ளவன் . |
| விற்பன்னித்தல் | சிறப்பித்தல் ; விளக்குதல் . |
| விற்பனம் | கல்வி ; அறிவு ; அறிவுக்கூர்மை ; புதுமை ; நுட்பம் ; விந்தை ; சொற்பொழிவு . |
| விற்பனவு | விற்றல் . |
| விற்பனை | விற்றல் . |
| விற்பனைப்பத்திரம் | விலையாவணம் , கிரயப்பத்திரம் . |
| விற்பாட்டு | வில்லுப்பாட்டு . |
| விற்பிடி | வில்லைப் பிடிக்குங் கையினுள்ளளவு ; அபிநயவகை . |
| விற்பிடித்தல் | வில்வித்தை பயிலத் தொடங்குதல் . |
| விற்பிடிமாணிக்கம் | சிறந்த மாணிக்கம் . |
| விற்புட்டில் | விரலுறை . |
| விற்பூட்டு | காண்க : பூட்டுவிற்பொருள்கோள் . கத்தரிவகை . |
| விற்பொறி | சேரவரசரது வில்லிலாஞ்சனை . |
| விற்றல் | பண்டங்களை விலைக்குக் கொடுத்தல் . |
| விற்றானை | படைகளுள் வில்வீரர்களாலான படை . |
| விற்றூண் | விற்று உண்ணற்குரிய சில்லறைப் பண்டங்கள் . |
| விறகாள் | விறகுசுமந்து விற்போன் . |
| விறகு | எரிக்கும் கட்டை ; காண்க : சமிதை . |
| விறகுகட்டு | கட்டிய விறகின் தொகுதி . |
| விறகுகட்டை | எரிக்க உதவும் மரத்துண்டு . |
| விறகுகாடு | விறகின் தொகுதி ; விறகுக்காக ஒதுக்கப்பட்ட காடு . |
| விறகுதலையன் | விறகுசுமந்து விற்போன் ; காண்க : விறகுவெட்டி ; மூடன் . |
| விறகுவெட்டி | விறகு தறிப்பவன் . |
| விறத்தல் | செறிதல் ; மிகுதல் ; வெற்றிபெறுதல் ; போர்செய்தல் ; வெருவுதல் . |
| விறப்ப | ஓர் உவமவாய்பாடு . |
| விறப்பு | செறிவு ; பெருக்கம் ; வலிமை ; வெற்றி ; போர் ; அச்சம் . |
| விறல் | வெற்றி ; பெருமை ; வலிமை ; வீரம் ; சிறப்பு ; உடல்வேறுபாடு . |
| விறல்கோளணி | பகை அல்லது அதன் துணையின்மேற் செலுத்தும் பேராற்றலைக் கூறும் அணிவகை . |
| விறல்வென்றி | போர்வீரத்தா லுண்டாகிய வெற்றி . |
| விறலி | உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள் ; பாணர்குலப் பெண் ; பதினாறு அகவைப் பெண் . |
| விறலுதல் | சினத்தோடு எதிர்த்துச் செல்லுதல் . |
| விறலோன் | திண்ணியன் ; வீரன் ; அருகன் . |
| விறாட்டி | காண்க : வறட்டி . |
| விறாண்டுதல் | காண்க : பிறாண்டுதல் . |
| விறாய் | செருக்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 986 | 987 | 988 | 989 | 990 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விளைபொருள் முதல் - விறாய் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, செய்தல், வெற்றி, விற்றல், விறகு, விற்போன், விறகின், வலிமை, பெண், விறகுசுமந்து, விறகுவெட்டி, தொகுதி, விற்பனம், விளையுங்காலம், முதலியன, விளையாட்டு, வயல், விற்றானை, சிறந்தோன், கல்வியிற், விளைபொருள்

