முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » விளக்குமாறு முதல் - விளைபுலம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - விளக்குமாறு முதல் - விளைபுலம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விளக்குமாறு | துடைப்பம் . |
| விளக்குறுத்தல் | ஒளிபெறச் செய்தல் . |
| விளக்கெண்ணெய் | விளக்கிடுவதற்கு உதவும் ஆமணக்கெண்ணெய் ; மருந்தாக உதவும் ஆமணக்கெண்ணெய் ; வேப்பெண்ணெய் . |
| விளக்கேற்றிவைத்தல் | விளக்கேற்றுதல் ; கலியாணஞ் செய்துவைத்தல் ; நிலைநிறுத்துதல் . |
| விளக்கைக்குளிரவைத்தல் | விளக்கணைத்தல் . |
| விளங்கவைத்தல் | தெளிவாக்குதல் ; விளக்கேற்றி வைத்தல் ; புகழ்பெறச் செய்தல் . |
| விளங்கு | அரத்தைவகை . |
| விளங்குதல் | ஒளிர்தல் ; தெளிவாதல் ; விளக்கமாதல் ; பளபளப்பாதல் ; பெருகுதல் ; மிகுதல் ; அறிதல் . |
| விளங்குதிங்கள் | சுக்கிரன் . |
| விளங்குபொன் | உலோகத்தாற் செய்த கண்ணாடி . |
| விளங்கொளி | அருகன் . |
| விளத்தம் | விவரம் . |
| விளத்தாரு | வெண்கடம்பு . |
| விளத்துதல் | விவரித்தல் ; விலக்குதல் . |
| விளப்பு | சொல்லுகை ; புகழாதல் . |
| விளம் | அடம் ; அகங்காரம் ; விளாமரம் ; இயற்சீரின் இறுதி நிரை வாய்பாடு . |
| விளம்பம் | தாமதம் ; இலயவகை . |
| விளம்பரம் | அறிக்கை . |
| விளம்பனம் | பழங்கால மக்களின் பழக்கத்தைப் பாடியும் ஆடியும் காட்டுதல் . |
| விளம்பி | கள் ; அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்திரண்டாம் ஆண்டு . |
| விளம்பிதம் | காண்க : விளம்பம் . |
| விளம்பு | சொல் . |
| விளம்புதல் | சொல்லுதல் ; வெளிப்படக் கூறுதல் ; பரப்புதல் ; பரிமாறுதல் ; விசாரித்தல் ; பழகுதற்காகப் பிள்ளைகள் எழுத்தின்மேல் எழுதுதல் . |
| விளர் | வெண்மை ; நிணம் ; முற்றாதது ; நேர்மை ; பெருஞ்சினம் ; வெறுப்பு ; கொழுமை ; இளமை . |
| விளர்த்தல் | வெளுத்தல் ; வெட்குதல் ; நிறம் வேறுபடுதல் . |
| விளர்தல் | வெளுத்தல் ; முதிராதிருத்தல் ; கூப்பிடுதல் . |
| விளர்ப்பு | வெளுப்பு . |
| விளரி | இளமை ; வேட்கைப்பெருக்கம் ; மிகுதி ; நெய்தல்நிலத்து யாழ் ; விளாமரம் ; ஏழிசையுள் ஒன்று . |
| விளவு | காண்க : அகில் ; விளாமரம் ; நிலப்பிளவு ; இளமை . |
| விளவுதல் | கலத்தல் ; தழுவிக்கொள்ளுதல் ; அடித்தல் ; மனத்தில் உறுத்தப் பேசுதல் . |
| விளா | விளாமரம் ; உழவில்வருஞ் சுற்று . |
| விளாக்குலைகொள்ளுதல் | பரவுதல் ; உட்கொள்ளுதல் . |
| விளாக்கைத்தல் | உழுதல் . |
| விளாக்கொள்ளுதல் | பரவுதல் . |
| விளாகம் | போர்க்களம் ; சூழ்ந்தவிடம் . |
| விளாசுதல் | அடித்தல் ; மனத்தில் உறுத்தப் பேசுதல் . |
| விளாப்பு | பிறர்க்குப் பங்கில்லாதது . |
| விளாப்பூசை | சிவன்கோயிலில் விடியற்காலத்தில் நடக்கும் பூசை . |
| விளாம்பூச்சு | சித்திரப்பூச்சுவகை . |
| விளாவுதல் | கலத்தல் ; தழுவிக்கொள்ளுதல் ; சுற்றுதல் ; சுற்றிச்சுற்றி வருதல் ; காண்க : விளாசுதல் . |
| விளி | ஓசை ; இசைப்பாட்டு ; கொக்கரிப்பு ; சொல் ; அழைப்பு ; எட்டாம் வேற்றுமை . |
| விளிக்கூத்து | சீழ்க்கைக்கூத்து . |
| விளித்தல் | அழைத்தல் ; சொல்லுதல் ; பாடுதல் ; அழித்தல் ; கொல்லுதல் ; பேராரவாரஞ் செய்தல் . |
| விளிதல் | இறத்தல் ; அழிதல் ; குறைதல் ; கழிதல் ; ஓய்தல் ; சினத்தல் ; நாணமடைதல் ; அவமானமடைதல் ; வருத்தப்படல் ; மறிதல் ; சொல்லுதல் . |
| விளிந்தார் | இறந்தார் . |
| விளிப்பு | ஓசை ; சத்தமிடுகை . |
| விளிம்பு | ஓரம் ; கரை ; கண்ணிமை ; எயிறு . |
| விளிவித்தல் | அழைப்பித்தல் ; கொல்லல் . |
| விளிவு | சாவு ; கேடு ; உறக்கம் ; இடையறவு ; நாணம் ; கடுஞ்சினம் ; வீரர் ; ஆர்ப்பு . |
| விளை | விளைகை ; விளைபொருள் ; புன்செய்க்காடு ; நுகர்வு ; நீர் ஏறாத மேட்டுநிலம் ; நகர்சூழ் காவற்காடு ; காக்கட்டான் ; நரம்பு ; மீன்வகை . |
| விளைகரி | நிலக்கரி . |
| விளைச்சல் | விளைபொருள் ; முற்றிவரும் பயிர் ; விளைகை ; இளமையில் முதிர்ந்த அறிவு . |
| விளைஞர் | மருதநில மக்கள் . |
| விளைத்தல் | பயிர் முதலியன வளரச்செய்தல் ; உண்டாக்குதல் ; புரிதல் . |
| விளைதல் | தானியம் முதலியன உற்பத்தியாதல் ; பயன்தருதல் ; உண்டாதல் ; முதிர்தல் ; நிகழ்தல் . |
| விளைநிலம் | பயிரிடக்கூடிய நிலம் . |
| விளைநீர் | பாசனத்துக்குரிய நீர் . |
| விளைபுலம் | காண்க : விளைநிலம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 985 | 986 | 987 | 988 | 989 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விளக்குமாறு முதல் - விளைபுலம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், விளாமரம், காண்க, சொல், இளமை, சொல்லுதல், செய்தல், விளைகை, விளாசுதல், பரவுதல், விளைபொருள், நீர், முதலியன, பேசுதல், விளைநிலம், பயிர், தழுவிக்கொள்ளுதல், விளம்பம், ஆமணக்கெண்ணெய், உதவும், வெளுத்தல், கலத்தல், மனத்தில், அடித்தல், உறுத்தப்

