தமிழ் - தமிழ் அகரமுதலி - வியமம் முதல் - விரட்டுதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
வியமம் | பாராட்டத்தக்கது . |
வியயம் | பயணச்செலவு . |
வியர் | உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி ; இளைப்பு . |
வியர்த்தம் | பயனின்மை ; பொருளின்மை . |
வியர்த்தல் | பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல் ; கோபித்தல் ; உடலின் மேற்புறத்துத் தோன்றும் நீர்த்துளி . |
வியர்ப்பு | வியர்வை ; சினம் ; சினக்குறிப்பு . |
வியர்வு | உடலின்மீது நீர்த்துளி உண்டாதல் ; சினக்குறிப்பு . |
வியர்வை | உடலின்மீது நீர்த்துளி உண்டாதல் ; சினக்குறிப்பு . |
வியல் | பெருமை ; அகலம் ; மிகுதி ; பொன் ; காடு ; மரத்தட்டு ; பலதிறப்படுகை . |
வியல்பூதி | வில்வம் . |
வியலகம் | பூமி . |
வியலிகை | பெருமை . |
வியலிடம் | பூமி ; அகலம் . |
வியலுள் | அகன்ற இடம் . |
வியவகரித்தல் | பேசுதல் ; வாதம்செய்தல் . |
வியவன் | ஏவல் செய்வோன் ; ஏவுவோன் ; தலைவன் ; திண்ணியன் ; வழிச்செல்வோன் . |
வியவு | வேறுபாடு . |
வியன் | வானம் ; பெருமை ; சிறப்பு ; வியப்பு ; அகலம் ; எண்ணின் ஒற்றை . |
வியனிலைவஞ்சி | மூச்சீரடி வஞ்சிப்பா . |
வியனுலகம் | பரந்த உலகம் ; தேவலோகம் . |
வியாக்கியானம் | உரை . |
வியாக்கியானி | உரையாசிரியன் . |
வியாக்கிரம் | புலி . |
வியாக்கிராசனம் | புலித்தோலால் ஆன இருக்கை . |
வியாக்கினம் | விளக்கவுரை . |
வியாகரணம் | கலைஞானம் அறுபத்து நான்கனுள் ஒன்றான இலக்கணம் ; வேதாங்கம் ஆறனுள் ஒன்றான வடமொழியிலக்கணம் . |
வியாகுலம் | வருத்தம் ; துக்கம் ; கவலை ; மயக்கம் . |
வியாகுலித்தல் | துயரப்படுதல் . |
வியாத்தி | எங்கும் நிறைந்திருத்தல் ; பரந்திருத்தல் ; முறையான உடனிகழ்ச்சி . |
வியாத்திரன் | தொழில்நடத்துவோன் . |
வியாத்துவம் | எங்கும் இருக்குந்தன்மை . |
வியாதம் | வேறுபாடு . |
வியாதன் | வேடன் ; கீழ்மகன் ; வியாசன் . |
வியாதி | நோய் ; பெருநோய் . |
வியாப்தம் | பரந்திருக்கப்பட்டது . |
வியாப்தி | எங்குமிருக்கை ; பரந்திருக்கை ; முறையான உடனிகழ்ச்சி . |
வியாபகத்துவம் | நிறைந்திருத்தல் . |
வியாபகம் | எங்கும் நிறைந்த தன்மை ; பரவியிருக்குந் தன்மை . |
வியாபகன் | எங்கும் இருப்பவனாகிய கடவுள் ; எங்கும் அறியப்பட்டவன் . |
வியாபகி | எங்கும் வியாபிக்குஞ் சிவசத்தி . |
வியாபரித்தல் | தொழிற்படுதல் ; சொல்லுதல் ; நன்கொடை திரட்டுதல் . |
வியாபாதம் | நன்கொடை திரட்டுதல் ; வஞ்சகம் . |
வியாபாரம் | வாணிகம் ; தொழில் . |
வியாபாரி | வாணிகன் . |
வியாபி | எங்கும் நிறைந்தது . |
வியாபித்தல் | எங்கும் பரந்து நிறைந்திருத்தல் . |
வியாமம் | நான்குமுழ அளவு . |
வியாமோகம் | பெருமோகம் . |
வியாயாமம் | உடற்பயிற்சி . |
வியாழக்குறிஞ்சி | குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று . |
வியாழம் | காண்க : வியாழன் . |
வியாழவட்டம் | வானமண்டலத்தில் குருவின் பன்னிரு ஆண்டுச் சுற்று ; வியாழக்கிழமை தோறும் . |
வியாழன் | தேவகுரு ; ஒரு கோள் ; வியாழக்கிழமை . |
வியாளம் | புலி ; பாம்பு ; கெட்ட குணமுள்ள யானை ; ஒரு விலங்கு . |
வியானன் | உடல் வாயுக்களில் ஒன்றான இரத்த ஒட்டத்தை உண்டாக்கும் வாயு . |
வியூகபேதம் | படை அணி முறிதல் . |
வியூகம் | படைவகுப்பு ; திரள் ; விலங்கின் கூட்டம் . |
வியோகம் | சாவு ; பிறவிநீக்கம் ; பிரிவு . |
வியோமம் | வானம் . |
விரக்தி | காண்க : விரத்தி ; துறவு ; வெறுப்பு . |
விரகநோய் | காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் துன்பம் . |
விரகம் | பிரிவு ; உலர்த்துகை ; காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் துன்பம் ; காமம் . |
விரகவேதனை | காண்க : விரகநோய் . |
விரகன் | திறமைமிக்கவன் ; வல்லவன் ; அறிஞன் ; சுற்றத்தான் . |
விரகு | வழிவகை ; திறமை ; தந்திரம் ; சூழ்ச்சி ; விவேகம் ; ஊக்கம் ; தின்பண்டம் . |
விரசம் | வெறுப்பு ; நிந்தை . |
விரசுதல் | செறிதல் ; பொருந்துதல் ; மிகவும் விரைவுபடுத்துதல் ; சொல்லால் கடிந்து வெருட்டுதல் . |
விரசை | வைகுண்டலோகத்திலுள்ள ஆறு ; தருப்பை ; மாட்டுத்தொழுவம் . |
விரட்டுதல் | அச்சுறுத்துதல் ; துரத்துதல் ; விரைவுபடுத்துதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 977 | 978 | 979 | 980 | 981 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வியமம் முதல் - விரட்டுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், எங்கும், நீர்த்துளி, அகலம், ஒன்றான, பெருமை, காண்க, நிறைந்திருத்தல், சினக்குறிப்பு, வியாழக்கிழமை, பிரிவு, வியாழன், தோன்றும், திரட்டுதல், வெறுப்பு, விரகநோய், விரைவுபடுத்துதல், துன்பம், பிரிவாலுண்டாகும், காதலர்க்குப், நன்கொடை, தன்மை, வானம், வேறுபாடு, பூமி, உடலின்மீது, புலி, வியர்வை, உடனிகழ்ச்சி, முறையான, மேற்புறத்துத், உடலின், உண்டாதல்