தமிழ் - தமிழ் அகரமுதலி - விரணம் முதல் - விரியுவமம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விரணம் | புண் ; காயம் ; புண்கட்டி ; சிலந்திப்புண் ; பகைமை ; முரிவு ; புல்வகை . |
| விரத்தம் | துறவு ; வெறுப்பு . |
| விரத்தன் | உலகப்பற்றில்லாதவன் ; வெறுப்புள்ளவன் ; தவசி ; மணமின்றி யிருப்பதாக உறுதி செய்துகொண்டவன் . |
| விரக்தி | உலகப்பற்றில்லாதவள் ; தவத்தி ; வெறுப்பு ; பற்றின்மை ; மணமின்றியிருப்பதாக உறுதி செய்துகொண்டவள் . |
| விரதங்காத்தல் | நோன்பு மேற்கொண்டொழுகுதல் . |
| விரதம் | நோன்பு ; உறுதி ; தவம் ; அருவருப்பு ; ஒழிகை . |
| விரதம்பிடித்தல் | பட்டினிகிடத்தல் . |
| விரதன் | நோன்பு மேற்கொண்டோன் ; பிரமசாரி ; துறவி . |
| விரதி | நோன்பு மேற்கொண்டோன் ; பிரமசாரி ; துறவி . |
| விரயம் | செலவு ; மிகுசெலவு ; பேதியாதல் . |
| விரல் | கைகால்களின் இறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு ; விரல் அகலமுள்ள அளவு . |
| விரல்நொடி | விரலைச் சொடுக்குகை . |
| விரலணி | மோதிரம் . |
| விரலம் | காண்க : விரளம் . |
| விரலாழி | மோதிரம் . |
| விரலி | மஞ்சள் ; வெள்ளரி . |
| விரலேறு | ஒரு தோற்கருவி . |
| விரவல் | கலத்தல் . |
| விரவலர் | பகைவர் . |
| விரவார் | பகைவர் . |
| விரவு | கலப்பு . |
| விரவுத்திணை | உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகவருஞ் சொல்லின் திணை . |
| விரவுதல் | கலத்தல் ; அடைதல் ; ஒத்தல் ; பொருந்துதல் ; நட்புக்கொள்ளுதல் . |
| விரவுப்பெயர் | பொதுப்பெயர் . |
| விரளம் | செறிவின்மை ; இடைவெளி ; அவகாசம் ; அருமை . |
| விரளல் | நெருக்கம் . |
| விரற்கடை | ஒரு விரல் அகலமுள்ள அளவு . |
| விரற்கிடை | ஒரு விரல் அகலமுள்ள அளவு . |
| விரற்சாடு | விரலுறை . |
| விரற்செறி | நெளிமோதிரம் . |
| விரற்புட்டில் | விரலுறை . |
| விரற்பூண் | காண்க : விரலாழி . |
| விரனெரித்தல் | பெருந்துயரத்தால் விரல்களை நெரித்தல் . |
| விராகம் | பற்றின்மை . |
| விராகன் | பற்றில்லாதவன் ; அருகன் ; கடவுள் . |
| விராகு | காண்க : விராகம் . |
| விராட்டு | பரப்பிரமம் ; ஓரடியுள் இரண்டெழுத்துக் குறைந்து சீரொத்துவரும் செய்யுள் ; புள்ளரசு ; ஓர் அரசன் . |
| விராட்புருடன் | பிரபஞ்ச ரூபமான பரப்பிரமம் . |
| விராதம் | கைவேலை ; தடை ; நாட்கூலிவேலை . |
| விராதனன் | கொலைஞன் . |
| விராமம் | முடிவு ; தூக்கு ; ஒற்றெழுத்து ; இளைப்பாறுகை ; ஓய்வுநாள் . |
| விராய் | விறகு ; பூச்செடிவகை ; தளவாடம் . |
| விரால் | காண்க : வரால் . |
| விராலம் | பூனை . |
| விராவுதல் | காண்க : விரவுதல் . |
| விரி | விரிந்த அளவு ; விரித்தல் ; பொதியெருதின் மேலிடுஞ் சேணம் ; திரை ; விரியன்பாம்பு ; காட்டுப்புன்னை ; விரிக்கும் கம்பளம் முதலியன . |
| விரிகாங்கூலம் | நிருத்தக்கைவகை . |
| விரிகுளம்பு | பிளவுபட்ட காற்குளம்பு . |
| விரிகொம்பு | விலங்கின் பரந்த கொம்பு . |
| விரிச்சி | வாய்ச்சொல்லாகிய நன்னிமித்தம் . |
| விரிச்சிகன் | கதிரவன் ; நிமித்தங் கூறுவோன் . |
| விரிச்சிநிற்றல் | நற்சொற் கேட்க விரும்பி நிற்றல் . |
| விரிச்சியோர்த்தல் | நற்சொற் கேட்க விரும்பி நிற்றல் . |
| விரிசல் | பிளவு ; அலை ; காண்க : விரியல் . |
| விரிசிகை | முப்பத்திரண்டு கோவையுள்ள மாதர் இடையணி . |
| விரிஞ்சன் | பிரமன் . |
| விரிஞ்சனன் | பிரமன் . |
| விரிஞ்சி | பிரமன் ; சித்திரான்னவகை . |
| விரித்தல் | விரியச்செய்தல் ; விளக்கியுரைத்தல் ; பரப்புதல் ; கூந்தல் முதலியவற்றை அவிழ்த்து நெகிழவிடுதல் ; செய்யுள்விகாரம் ஒன்பதனுள் சொல்லிடையே எழுத்துத் தோன்றுவது ; நூல் யாப்பு நான்கனுள் முன்னூலில் தொகுத்துக் கூறப்பட்டதனை விளங்குமாறு விரித்துக் கூறுவது . |
| விரித்துரை | அகலவுரை . |
| விரிதல் | மலர்தல் ; முற்றுதல் ; அவிழ்தல் ; பிளவு கொள்ளுதல் ; பரத்தல் ; தொக்க வேற்றுமை உருபு முதலியன வெளிப்பட விரிதல் . |
| விரிதூறு | புதர் . |
| விரிநூல் | தொகுத்துக் கூறாது விரித்துக் கூறும் நூல் ; ஆகமங்கள் . |
| விரிப்பு | விரித்தல் ; விரிக்கும் கம்பளம் முதலியன ; மலர்த்துகை ; மாட்டுக் காய்ச்சல் வகை ; பிளப்பு . |
| விரிபம் | சிறுதுகில் . |
| விரிமுரண் | இசைப்பாவகையுள் ஒன்று . |
| விரியல் | பரப்பு ; ஒளி ; மலர்ச்சி ; பூமாலை ; தென்னோலையால் முடைந்த தட்டிவகை . |
| விரியன் | ஒரு பாம்புவகை ; சிறுமரவகை . |
| விரியாப்பு | களைப்பால் வரும் மயக்கம் . |
| விரியுவமம் | பொதுத்தன்மை விரிந்து நிற்றலுடைய உவமம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 978 | 979 | 980 | 981 | 982 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விரணம் முதல் - விரியுவமம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அளவு, விரல், நோன்பு, அகலமுள்ள, விரித்தல், முதலியன, பிரமன், உறுதி, கேட்க, நற்சொற், கம்பளம், விரும்பி, விரிதல், நிற்றல், விரிக்கும், தொகுத்துக், விரித்துக், விரியல், பிளவு, நூல், விரலுறை, துறவி, மோதிரம், பிரமசாரி, மேற்கொண்டோன், பற்றின்மை, விரளம், விரலாழி, வெறுப்பு, விராகம், விரவுதல், பகைவர், கலத்தல், பரப்பிரமம்

