தமிழ் - தமிழ் அகரமுதலி - விந்தம் முதல் - விபுணன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விந்தம் | விந்தியமலை ; குருவிந்தம் ; தாமரை ; ஒரு பேரெண் ; காடு ; பச்சைக்கருப்பூரம் ; மேலோர் ; மரவகை ; பாடாணவகை ; செம்புளிப்பச்சை . |
| விந்தமட்டோன் | அகத்தியன் . |
| விந்தன் | இடையன் . |
| விந்தியம் | விந்தியமலை . |
| விந்தியவாசி | துர்க்கை . |
| விந்தியவாசினி | துர்க்கை . |
| விந்து | புள்ளி ; துளி ; நீர்த்துளி அளவு ; சுக்கிலம் ; பாதரசம் ; வயிரக்குற்றம் ; குறி ; நெற்றித் திலகம் ; நெல்மூக்கு ; புருவநடு ; வட்டம் ; சிவதத்துவம் ; சுத்தமாயை ; பதினாறு கலையுள் ஒன்று . |
| விந்துத்தீ | காண்க : காமத்தீ . |
| விந்துவழி | பிறவிமுறை . |
| விந்தை | சாலவித்தை ; கல்வி ; துர்க்கை ; வெற்றித்திருமகள் ; பார்வதி ; திருமகள் ; அழகு ; வியப்பு ; ஓரகத்தி ; விந்தியமலை . |
| விந்தைக்காரன் | சிற்பி . |
| விந்தைமகள் | திருமகள் . |
| விநயம் | வணக்கம் ; மரியாதை ; ஒழுக்கம் ; நயமொழி ; பணிவு ; அவையடக்கம் ; காண்க : தேவபாணி ; கட்டளை ; விரகு ; நன்னடை ; தருமம் . |
| விநாடி | ஒரு காலநுட்பம் . |
| விநாடிகை | ஒரு காலநுட்பம் . |
| விநாயகசதுர்த்தி | பிள்ளையாருக்குத் திருவிழாச் செய்யும் ஆவணி மாதத்து வளர்பிறை நாலாம் நாள் விழா . |
| விநாயகன் | கணபதி ; அருகன் ; புத்தன் ; கருடன் ; குரு . |
| விநாழிகை | காண்க : விநாடிகை . |
| விப்பிரகாரம் | எதிரிடை ; தீங்கு ; நிந்தை . |
| விப்பிரநாராயணர் | தொண்டரடிப்பொடியாழ்வார் . |
| விப்பிரம் | அழகு ; ஐயம் ; சுழலுதல் ; தவறு . |
| விப்பிரமம் | சுழற்சி ; மயக்கம் ; மனக்குழப்பம் ; குற்றம் ; அழகு ; மோகல¦லை ; காமப்பிணக்கு . |
| விப்பிரயோகம் | காதலரின் பிரிவு ; வெய்துயிர்த்து இரங்கல் . |
| விப்பிரலம்பம் | வஞ்சகம் ; சண்டை ; தாமசம் ; காதலர் பிரிவு . |
| விப்பிரன் | பார்ப்பனன் . |
| விப்பிரியம் | விருப்பமின்மை . |
| விப்பிலவம் | அநியாயப் போர் ; தொல்லை ; கலகம் ; பொல்லாங்கு . |
| விப்புருதி | புண் . |
| விப்புருதிக்கட்டி | குழந்தைகட்கு அக்குளில் வரும் ஒரு புண்கட்டிவகை . |
| விபக்கம் | எதிர்க்கட்சி ; எதிரிடையான கொள்கை ; அனுமான உறுப்புள் துணிபொருள் இல்லா இடம் . |
| விபக்கன் | பகைவன் . |
| விபகரித்தல் | வழக்குச்சொல்லல் . |
| விபகலிதம் | கழித்தல் . |
| விபகாரம் | காண்க : விவகாரம் . |
| விபசாரம் | தீயநடத்தை ; சோரம்போகை . |
| விபசாரி | விலைமகள் ; சோரம்போனவள் . |
| விபஞ்சி | வீணைவகை ; குறிஞ்சியாழ்த்திறத்துள் ஒன்று . |
| விபஞ்சிகம் | வீணைவகை . |
| விபஞ்சிகை | வீணைவகை . |
| விபத்தம் | எட்டிமரம் . |
| விபத்தன் | குடும்பத்தினின்றும் பிரிந்தவன் . |
| விபத்தி | வேறுபாடு ; வேற்றுமை ; வேற்றுமையுருபு ; காண்க : விபத்து . |
| விபத்து | நற்பேறின்மை ; வேதனை ; சாவு ; ஆபத்து ; வறுமை ; அழிவு . |
| விபரம் | காண்க : விவரம் . |
| விபரியாசம் | எதிரிடை ; வேறுபாடு . |
| விபரீதகாலம் | கேடு விளைக்குங் காலம் . |
| விபரீதஞானம் | திரிபுணர்ச்சி . |
| விபரீதம் | மாறுபாடு ; கைகூடாமை ; திரிபுணர்ச்சி ; வியப்பு ; மிகுதி . |
| விபரீதலட்சணை | காண்க : எதிர்மறையிலக்கணை . |
| விபரீதவுவமை | தொன்றுதொட்டு வழங்கும் உவமையைப் பொருளாக்கியும் பொருளை உவமையாக்கியும் உரைக்கும் அணிவகை . |
| விபவ | அறுபதாண்டுக் கணக்கில் இரண்டாம் ஆண்டு . |
| விபவம் | பெருமை ; செல்வம் ; வாழ்வு ; வீடுபேறு ; திருமாலின் அவதாரநிலை . |
| விபன்னம் | குற்றம் ; மெலிவு . |
| விபன்னன் | துன்பப்பட்டவன் . |
| விபாகம் | பிரிவு ; குடும்பச் சொத்தைப் பிரிக்கை ; வரையறை செய்த பகுதி . |
| விபாகரன் | சூரியன் . |
| விபாடம் | பிளத்தல் . |
| விபாதம் | உதயகாலம் . |
| விபாவரி | இரவு ; பார்வதி . |
| விபாவனம் | ஆராய்ச்சி ; தூய்மையின்மை . |
| விபாவனை | காரணமின்றிக் காரியம் பிறந்ததாகச் சொல்லும் அணிவகை ; பார்வதி . |
| விபினம் | காடு . |
| விபீதகம் | தான்றிமரம் . |
| விபு | எங்கும் பரவியுள்ளது ; கடவுள் ; தலைவன் . |
| விபுணன் | வல்லுநன் ; சிறந்தோன் ; வெற்றியையுடையோன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 975 | 976 | 977 | 978 | 979 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விந்தம் முதல் - விபுணன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, விந்தியமலை, வீணைவகை, பிரிவு, அழகு, பார்வதி, துர்க்கை, அணிவகை, திரிபுணர்ச்சி, வேறுபாடு, குற்றம், விபத்து, காலநுட்பம், ஒன்று, காடு, திருமகள், வியப்பு, விநாடிகை, எதிரிடை

