தமிழ் - தமிழ் அகரமுதலி - விரியோலை முதல் - விருப்பன் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
விரியோலை | குருத்து விரிந்து முதிரும் பனையோலை ; தென்னோலையால் முடைந்த தட்டிவகை ; ஓலைப்பாய் . |
விரிவாக | தெளிவாக ; நிறைய . |
விரிவு | அகற்சி ; நூலின் விரிவானவுரை ; பிளவு . |
விரிவுரை | சொற்பொழிவு ; நூலின் விரிவானவுரை . |
விரீஇ | நெல் . |
விரீகி | நெல் ; அரிசி ; காரேலம் . |
விரீடம் | வெட்கம் . |
விருக்கநாதன் | அரசமரம் . |
விருக்கம் | மரம் . |
விருகம் | செந்நாய் ; விலங்கு . |
விருகற்பதி | வியாழன் . |
விருச்சி | சிற்றாமணக்கு . |
விருச்சிகம் | தேள் ; இராசி மண்டலத்தின் எட்டாம் பகுதி ; கார்த்திகை மாதம் ; நண்டு ; காண்க : சாரணை . |
விருச்சிகன் | சூரியன் . |
விருசம் | இஞ்சி ; எலி ; நறுவிலிமரம் . |
விருசு | ஆகாயவாணம் ; நறுவிலிமரம் . |
விருட்சநாதம் | காண்க : விருக்கநாதன் . |
விருட்சம் | காண்க : விருக்கம் . |
விருட்டி | மழை . |
விருட்டிணி | கண்ணபிரான் . |
விருடபம் | எருது . |
விருடம் | எருது ; எலி ; தருமம் ; மேன்மை . |
விருடலம் | உள்ளி ; குதிரை . |
விருடாங்கம் | தாமிரபரணிப் பகுதி . |
விருடியம் | பருத்திருக்கை . |
விருத்தகங்கை | பழமையாய ஆறான கோதாவரி . |
விருத்தகிரி | திருமுதுகுன்றம் ; ஒரு சிவதலம் . |
விருத்தசேதனம் | காண்க : சுன்னத்துச்செய்தல் . |
விருத்தம் | வட்டம் ; சொக்கட்டான் ஆட்டத்தில் விழும் தாயவகை ; பாவினம் மூன்றனுள் ஒன்று ; ஒழுக்கம் ; செய்தி ; தொழில் ; ஒரு சிற்ப நூல் ; நிலக்கடம்புச்செடி ; ஆமை ; வெள்ளெருக்கு ; மூப்புப்பருவம் ; பழைமை ; அறிவு ; முரண் ; பகைமை ; குற்றம் ; பொல்லாவொழுக்கம் ; இடையூறு ; ஏதுப்போலிகளுள் ஒன்று ; கூட்டம் . |
விருத்தன் | முதுமையோன் ; மேலோன் ; அதிகாரி . |
விருத்தாந்தம் | வரலாறு ; கதை ; நிகழ்ச்சி ; செய்தி ; இயல்பு ; விதம் ; முழுமை ; இளைப்பாறுகை . |
விருத்தாப்பியம் | முதுமை . |
விருத்தி | ஒழுக்கம் ; இயல்பு ; தொழில் ; தொண்டு ; பிழைப்பு ; பிழைப்புக்காக விடப்பட்ட நிலம் ; அடிமை ; விரிவுரை ; உரியபொருள் ; உரிய சொல் ; சாத்துவதி ; ஆரபடி , கைசிகி , பாரதி என நான்குவகைப்பட்ட நாடக நூலின் நடை ; இருக்கை ; தூய்மை ; வட்டம் ; தாயவகை ; வளர்ச்சி ; இலாபம் ; வட்டி ; செல்வம் ; பெருக்கம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; விவரம் ; அபராதம் ; வடமொழிச் சந்தி ; கருமருதமரம் . |
விருத்திக்கடன் | வட்டிக்கு வாங்குங் கடன் . |
விருத்திசந்திரன் | வளர்பிறை . |
விருத்தியன் | வேலையாள் . |
விருத்தியுரை | விரிவுரை . |
விருத்திராரி | விருத்திராசுரனைக் கொன்ற இந்திரன் . |
விருத்தூண் | புதிய உணவு . |
விருத்தை | ஐம்பத்தைந்து அகவை கடந்தவள் ; கிழவி . |
விருதம் | வெள்ளெருக்கு . |
விருதர் | படைவீரர் . |
விருதா | பயனின்மை ; வீணாய் . |
விருதாவன் | பயனற்றவன் . |
விருது | பட்டம் ; கொடி ; வெற்றிச்சின்னம் ; மரபுவழி ; நோன்பு . |
விருதுகட்டுதல் | முடிவெடுத்துக்கொள்ளுதல் . |
விருந்தம் | பூ , பழம் முதலியவற்றை காம்பு ; வேம்பு ; பானை முதலியவற்றை வைக்கும் பாதம் ; பந்துவர்க்கம் ; விலங்கின் கூட்டம் ; குவியல் ; மனைவி . |
விருந்தனை | மனைவி . |
விருந்தாட்டு | விருந்தளிக்கை ; ஆண்டுவிழா . |
விருந்தாடி | காண்க : விருந்தாளி . |
விருந்தாரம் | அழகு ; மேன்மை . |
விருந்தாளி | விருந்தினர் ; அதிதி . |
விருந்தாற்றுதல் | நண்பர்க்கு உணவளித்துப் போற்றுதல் . |
விருந்திடுதல் | நண்பர்க்கு உணவளித்துப் போற்றுதல் . |
விருந்தினன் | புதியவன் ; அதிதி . |
விருந்து | புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல் ; காண்க : விருந்தினன் ; புதுமை ; நூலுக்குரிய எண்வகை வனப்புகளுள் ஒன்று . |
விருந்துக்கூடம் | விருந்தினரைப் போற்றும் மாளிகைப் பகுதி . |
விருந்துசொல்லுதல் | விருந்துக்கழைத்தல் . |
விருந்துவைத்தல் | விருந்தூண் அளித்தல் . |
விருந்தை | துளசிச்செடி . |
விருந்தோம்பல் | புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் போற்றுதல் . |
விருந்தோர் | புதியவர் . |
விருப்பம் | ஆசை ; அன்பு ; பற்று . |
விருப்பன் | ஆசையுள்ளவன் ; அன்புள்ளவன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 979 | 980 | 981 | 982 | 983 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விரியோலை முதல் - விருப்பன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, போற்றுதல், ஒன்று, உணவளித்துப், பகுதி, நூலின், விரிவுரை, முதலியவற்றை, இயல்பு, மனைவி, கூட்டம், நண்பர்க்கு, வருபவரை, விருந்தினன், வெள்ளெருக்கு, அதிதி, விருந்தாளி, செய்தி, விரிவானவுரை, நறுவிலிமரம், விருக்கம், விருக்கநாதன், நெல், எருது, மேன்மை, ஒழுக்கம், சொல், தாயவகை, வட்டம், தொழில்