தமிழ் - தமிழ் அகரமுதலி - விபுத்துவம் முதல் - வியம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விபுத்துவம் | எங்கும் பரவுந்தன்மை . |
| விபுதன் | அறிஞன் ; தேவன் ; சந்திரன் . |
| விபுலம் | விரிவு ; அகலம் ; பெருமை ; மேரு ; இமயமலை ; பூமி . |
| விபுலை | பூமி . |
| விபூடணம் | அணிகலன் . |
| விபூதி | திருநீறு ; எண்வகை சித்தி ; சாம்பல் ; செல்வம் ; பெருமை ; கேடுற்ற தசை ; ஒரு நரகம் ; கொடுமை ; குற்றம் ; வரிவகை . |
| விபூதிபோடுதல் | திருநீறு பூசுதல் ; மந்திரித்துத் திருநீறு கொடுத்தல் . |
| விபூதியிடுதல் | திருநீறு பூசுதல் ; மந்திரித்துத் திருநீறு கொடுத்தல் . |
| விபோதம் | அறிவு . |
| விம்பம் | வடிவம் ; நிழல் ; எதிரொளி ; வட்டம் ; விக்கிரகம் ; உடல் ; ஒளி ; கொவ்வைக்கொடி ; பாடாணவகை . |
| விம்பிகை | கொவ்வைக்கொடி . |
| விம்பித்தல் | எதிரொளித்தல் . |
| விம்மம் | தேம்பியழுகை ; துன்பம் . |
| விம்மல் | காண்க : விம்மம் ; ஏக்கம் ; வீங்குகை ; உள்ளப்பூரிப்பு ; கலக்கம் ; ஒலிக்கை ; யாழ்நரம்போசை . |
| விம்மாத்தல் | தேம்பியழுதல் ; வருந்துதல் ; மகிழ்வுறுதல் . |
| விம்மிதம் | உடல் ; அச்சம் ; வியப்பு ; உவகை . |
| விம்மு | கனம் . |
| விம்முதல் | காண்க : விம்மாத்தல் ; நிறைதல் ; பருத்தல் ; மிகுதல் ; மலர்தல் ; ஒலித்தல் ; ஈனுதல் . |
| விம்முயிர்த்தல் | பெருமூச்சுவிடுதல் . |
| விம்முறவு | வருத்தம் . |
| விம்முறுதல் | வருந்துதல் . |
| விம்மெனல் | இறுகியதாதற்குறிப்பு . |
| விமர்த்தனம் | அரைத்துப் பொடிசெய்கை ; இடிக்கை ; அழிக்கை ; பிசைகை ; கிரகணம் . |
| விமரிசம் | திறனாய்வு , ஆராய்ச்சி ; மனனம் ; புத்தித்தெளிவு . |
| விமரிசனம் | திறனாய்வு , ஆராய்ச்சி ; மனனம் ; புத்தித்தெளிவு . |
| விமரிசை | காண்க : விமரிசம் ; பகட்டு ; சிறப்பு ; பார்வதி . |
| விமலம் | அழுக்கின்மை ; வெண்மை ; தூய்மை ; தெளிவு ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று . |
| விமலன் | கடவுள் ; குற்றமற்றவன் ; தூயன் ; சிவபிரான் ; அருகன் ; தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் . |
| விமலி | பார்வதி ; காண்க : குப்பைமேனி . |
| விமலை | தூய்மையுடையவள் ; திருமகள் ; கலைமகள் ; பார்வதி ; துர்க்கை ; குற்றமற்றவள் ; கங்கை ; கோதாவரி . |
| விமார்க்கம் | தீயொழுக்கம் ; விளக்குமாறு . |
| விமானம் | வானூர்தி ; சந்திரன்ஊர்தி ; ஊர்தி ; தூண் ; ஏழடுக்கு மெத்தையுள்ள மாளிகை ; அரண்மனை ; தேவர்கோயில் ; தேவலோகம் ; உரோகிணிநாள் . |
| விமானவாயில் | கோயில்வாயில் . |
| விமோசனம் | நீங்குகை . |
| விய | அறுபதாண்டுக் கணக்கில் இருபதாம் ஆண்டு . |
| வியக்கம் | பெருமை . |
| வியக்களை | குடிக்கூலி . |
| வியங்கம் | இயற்கையான குற்றம் ; பிறவிக்குறை ; தவளை . |
| வியங்கியம் | குறிப்புப்பொருள் ; குத்தலான பேச்சு . |
| வியங்கொள்ளுதல் | ஏவலைக் கொள்ளுதல் ; செலுத்துதல் . |
| வியங்கோள் | ஏவல் ; வினைமுற்றுவகை . |
| வியஞ்சகம் | விளங்கும்படி செய்கை ; விளக்குங் கருவி ; குறிப்புப்பொருள் ; அபிநயம் . |
| வியஞ்சனம் | மெய்யெழுத்து ; உணவுக்குரிய கறிகள் ; அடையாளம் ; கறிக்குதவும் பொருள்கள் ; குறிப்பில் பொருளுணர்த்தும் சொல்லினது ஆற்றல் . |
| வியட்டி | தனிப்பட்டது . |
| வியட்டிரூபம் | பருவுடல் . |
| வியத்தம் | வெளிப்படை ; புலன்களுக்குத் தெரிவது . |
| வியத்தல் | செருக்குறுதல் ; அதிசயப்படல் ; நன்குமதித்தல் ; பாராட்டுதல் ; கொடுத்தல் ; கடத்தல் . |
| வியத்திகை | பெருமை . |
| வியதிபாதம் | யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
| வியதிரேகம் | வேறுபாடு ; எதிர்மறை ; உடனில்லாத நிலை ; வேற்றுமையணி . |
| வியந்தம் | பண்வகை . |
| வியந்தரம் | பிசாசு . |
| வியநெறி | பெரும்பாதை . |
| வியப்ப | ஓர் உவம வாய்பாடு . |
| வியப்பணி | ஒரு பயனைக் கருதி அதற்கு மாறாகிய முயற்சிசெய்வதாகக் கூறும் அணி . |
| வியப்பம் | வியப்பு . |
| வியப்பு | அதிசயம் ; வியப்பணி ; பாராட்டு ; மேம்பாடு ; அளவு ; சினம் ; சினக்குறிப்பு . |
| வியபிசாரம் | கற்புநெறி தவறுதல் ; சாத்தியமில்லாதவிடத்து ஏது விருப்பதாகிய ஏதுப்போலி . |
| வியபிசாரி | கற்புநெறி தவறியவள் . |
| வியம் | ஏவல் ; உடல் ; போக்கு ; வழி ; ஒற்றைப்படை எண் ; சமமற்றது ; முருட்டுத்தன்மை ; வேறுபாடு ; விரிவு ; உயரம் ; பறவை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 976 | 977 | 978 | 979 | 980 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விபுத்துவம் முதல் - வியம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், திருநீறு, காண்க, பெருமை, பார்வதி, வியப்பு, உடல், கொடுத்தல், புத்தித்தெளிவு, கற்புநெறி, மனனம், வியப்பணி, வேறுபாடு, ஏவல், குறிப்புப்பொருள், ஒன்று, ஆராய்ச்சி, வருந்துதல், மந்திரித்துத், பூசுதல், குற்றம், பூமி, கொவ்வைக்கொடி, விம்மம், விமரிசம், விரிவு, விம்மாத்தல், திறனாய்வு

