முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » விதலையாப்பு முதல் - விதையடித்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - விதலையாப்பு முதல் - விதையடித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| விதலையாப்பு | செய்யுளின் முதலும் இடையும் கடையும் பொருள்கொள்ளும் முறை . |
| விதவிடுதல் | சிறப்பித்துரைத்தல் . |
| விதவை | கைம்பெண் ; சோறு ; கூழ் ; குழம்பு ; குழைகை ; கைம்மணி . |
| விதறு | நடுக்கம் . |
| விதறுதல் | நடுங்குதல் ; பதறுதல் . |
| விதனம் | துன்பம் ; மனத்துயர் ; ஏழுவகைக் குற்றம் ; களைப்பு ; உடல்நோவு . |
| விதனித்தல் | துயருறுதல் . |
| விதாகம் | உறைப்பு ; வெப்பம் . |
| விதாதா | பிரமன் ; அருகன் . |
| விதாதிரு | பிரமன் ; விதி ; காமன் . |
| விதாயகம் | விதிப்பது ; முடிவு . |
| விதாரகம் | கிணறு . |
| விதாரணம் | பிளத்தல் ; கிழித்தல் ; கொல்லல் ; போர் . |
| விதாரம் | காண்க : முள்ளிலவு ; சூழ்தல் ; ஆராய்ச்சி ; கவலை . |
| விதாவிதம் | பலவிதம் . |
| விதானம் | மேற்கட்டி ; தொகுதி ; வேள்வி ; மந்தம் ; பயனின்மை ; ஓய்வு ; விரிவு ; சட்டம் ; விதிக்கை ; ஏற்பாடு ; கற்பித்துக்கொள்ளுகை ; செய்கை ; ஒழுங்கு ; மாதிரி ; ஊழ் ; பேறு ; செல்வம் ; விரகு ; வணக்கம் ; வன்மம் ; ஒரு பண் ; யானை ; உணவு . |
| விதி | சட்டம் ; தீர்ப்பு ; விதித்தன செய்க என்னும் ஆணை ; கட்டளை ; கடமை ; ஒழுக்கமுறை ; அமைக்குமுறை ; நீதி ; ஊழ் ; பிரமன் ; காசிபன் ; திருமால் ; காலம் ; நல்வினைப்பயன் ; பயன் ; பேறு ; செல்வம் ; இயல்பு ; உண்மை ; அறிவு ; செய்தொழில் ; குதிரை முதலியவற்றின் உணவு . |
| விதிக்கு | கோணத்திசை . |
| விதிச்சூத்திரம் | இன்னதற்கு இது என்று முன்னில்லாததை மொழியும் சூத்திரம் . |
| விதித்தல் | செய்யுமாறு ஏவுதல் ; தண்டம் முதலியன அமைத்தல் ; உண்டாக்குதல் ; செய்தல் ; உறுதிப்படுத்தல் . |
| விதித்தோன் | நான்முகன் ; கடவுள் . |
| விதிதம் | வெளிப்படை . |
| விதிப்பு | விதிக்கை ; நூலில் விதித்துள்ள முறை . |
| விதிபாதம் | யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
| விதிமுறை | நெறிப்படி ; நியமம் . |
| விதியர் | அமைச்சர் ; தந்திரிகள் ; கணக்கர் . |
| விதியுளி | வேள்வி ; திருமணம் ; தூதர் ; முறைப்படி . |
| விதிர்த்தல் | நடுங்குதல் ; அஞ்சுதல் ; சிதறுதல் ; தெறித்தல் ; அசைத்தல் ; உதறுதல் ; பலவாகப் போகவிடுதல் ; சொரிதல் . |
| விதிர்தல் | நடுங்குதல் . |
| விதிர்ப்பு | அச்சம் ; நடுக்கம் ; மிகுதி . |
| விதிர்விதிர்த்தல் | நடுங்குதல் ; விருப்பங்கொள்ளுதல் . |
| விதிரேகம் | வேறுபாடு ; எதிர்மறை ; வேற்றுமையணி . |
| விதிவசம் | ஊழ்வலி . |
| விதிவத்து | முறைப்படி ; முறையுடையது . |
| விதிவிலக்கு | விதித்தலும் விலக்கலும் ; விதிக்கு விலக்கைக் கூறுஞ் சூத்திரம் . |
| விதிவினை | உடன்பாட்டால் முடியும் வினை ; ஊழ் . |
| விது | சந்திரன் ; திருமால் ; பிரமன் ; குபேரன் ; வாயு ; கருப்பூரம் ; பாவம்நீக்கச் செய்யும் பலி . |
| விதுடன் | கற்றறிந்தவன் . |
| விதுடி | கற்றவன் ; அறிவாளி . |
| விதுதமுகம் | முக அபிநயம் பதினான்கனுள் வேண்டாமைக் குறிப்பாகத் தலையசைக்கும் அபிநயம் . |
| விதுப்பு | நடுக்கம் ; விரைவு ; பரபரப்பு ; வேட்கை . |
| விதும்பு | நடுக்கம் . |
| விதும்புதல் | நடுங்குதல் ; விரைதல் ; விரும்புதல் . |
| விதுரம் | கலக்கம் ; காதலர்பிரிவு . |
| விதுரன் | அறிஞன் ; திண்ணியன் ; மனைவியை இழந்தவன் ; திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி . |
| விதுலம் | ஒப்பின்மை . |
| விதுலன் | ஒப்பில்லாதவன் . |
| விதுவிதுத்தல் | மகிழ்ச்சியுறுதல் . |
| விதுவிதுப்பு | குத்துநோய் ; நடுக்கம் ; விருப்பம் . |
| விதூடகக்கூத்து | நகைவிளைக்கும் ஒரு கூத்து வகை . |
| விதூடகன் | நகைச்சுவை விளைவிப்போன் . |
| விதூடணம் | பெருநிந்தை . |
| விதூரசம் | வைடூரியம் . |
| விதை | மரஞ்செடிகொடிகள் முளைப்பதற்குக் காரணமாயிருக்கும் வித்து ; பீசம் ; தன் மாத்திரை ; அறிவு ; பெருமை . |
| விதைத்தல் | விதை தெளித்தல் ; பரப்புதல் ; செலுத்துதல் . |
| விதைநெல் | விதைப்பதற்காக வைக்கப்பட்ட நெல்மணி . |
| விதைப்புக்காலம் | விதை தெளிக்கும் பருவம் . |
| விதைப்புனம் | சமன்செய்த புதிய நிலம் . |
| விதைமணி | விதைப்பதற்குரிய தானியம் . |
| விதையடித்தல் | மாடு முதலியவற்றின் விதையை நசுக்குதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 974 | 975 | 976 | 977 | 978 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விதலையாப்பு முதல் - விதையடித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நடுக்கம், நடுங்குதல், பிரமன், விதை, முதலியவற்றின், அறிவு, விதிக்கு, அபிநயம், திருமால், முறைப்படி, சூத்திரம், செல்வம், வேள்வி, விதி, சட்டம், விதிக்கை, முறை, பேறு, உணவு

