முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வாய்த்துடுக்கு முதல் - வாய்வடம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வாய்த்துடுக்கு முதல் - வாய்வடம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வாய்த்துடுக்கு | பேச்சிற்காட்டும் ஆத்திரம் ; செருக்கு . |
| வாய்தடுமாறுதல் | வாய் பதறுதல் ; பேசுவதிற் பிழைபடுதல் . |
| வாய்தல் | காண்க : வாய்த்தல் . |
| வாய்தற்படி | கதவின் நிலைப்படி . |
| வாய்தா | தவணை ; கெடு ; கெடுவைத் தள்ளிப் போடுகை ; வரி . |
| வாய்திறத்தல் | வாயை அகலவிரித்தல் ; மலர்தல் ; புண்கட்டி உடைதல் ; வெள்ளம் கரையை உடைத்தல் ; மலர்த்துதல் ; பேசுதல் . |
| வாய்தீட்டுதல் | ஆயுதம் முதலியவற்றின் முனை தீட்டுதல் . |
| வாய்ந்துகொள்ளுதல் | வென்று கைப்பற்றுதல் . |
| வாய்நாற்றம் | வாயின் மணம் ; வாயிலிருந்து தோன்றுந் தீநாற்றம் . |
| வாய்நீர் | உமிழ்நீர் . |
| வாய்நீளம் | குறைகூறுந் தன்மை . |
| வாய்நெகிழ்தல் | பூ மலர்தல் . |
| வாய்நேர்தல் | பேச்சால் உடன்படுதல் ; நேர்த்திக் கடனைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் ; தருவதாக வாக்களித்தல் . |
| வாய்ப்பக்காட்டுதல் | விளங்கவுணர்த்துதல் . |
| வாய்ப்பட்சி | காக்கை . |
| வாய்ப்பட்டி | வாய்க்கு வந்தபடி பேசுவோர் ; கண்டதைத் தின்பவர் . |
| வாய்ப்படுதல் | வழிப்படுதல் ; சுவைபடுதல் . |
| வாய்ப்பந்தல் | பயனற்ற பேச்சு . |
| வாய்ப்பலி | காண்க : வாய்க்கரிசி . |
| வாய்ப்பறையறைதல் | பலரும் அறிய வெளியிடுதல் . |
| வாய்ப்பாட்டு | வாயினால் பாடும் பாட்டு . |
| வாய்ப்பாடம் | ஏடு பாராமற் சொல்லும் பாடம் ; புத்தகமின்றிக் கேள்வியாற் படித்த பாடம் . |
| வாய்ப்பிணி | வாயிலுண்டாகும் நோய் . |
| வாய்ப்பிறப்பு | வாயிலிருந்துவரும் மொழி . |
| வாய்ப்பு | ஆதாயம் ; கைகூடுநிலை ; நேர்பாடு ; நன்கமைந்தது ; பொருத்தம் ; அழகு ; சிறப்பு ; செழிப்பு ; பேறு . |
| வாய்ப்புண் | உள் வாயில் தோன்றும் புண் ; நாக்குப் புண் ; வைதலால் உண்டாகும் மனநோவு . |
| வாய்ப்புள் | நற்சொல்லாகிய நிமித்தம் . |
| வாய்ப்புற்று | வாயிலுண்டாகும் நோய்வகை . |
| வாய்ப்புறம் | உதடு . |
| வாய்ப்பூச்சு | வாயை நீரால் துடைக்கை ; காண்க : ஆசமனம் ; வார்த்தையால் மழுப்புகை . |
| வாய்ப்பூட்டு | தாடையெலும்பின் பொருத்து ; விலங்கின் வாயின்மேல் இடும் கூடு ; பேசாமல் தடுக்கை ; வாயில் சுழியுள்ள மாட்டுக்குற்றவகை ; இலஞ்சம் . |
| வாய்ப்பூட்டுச்சட்டம் | பொதுக்கூட்டங்களில் பேசுவதைத் தடுக்கும் சட்டம் . |
| வாய்ப்பெய்தல் | வாயிலிட்டுத் தின்னுதல் . |
| வாய்ப்பேச்சு | வாயினாற் பேசுகை ; வெறும் பேச்சு . |
| வாய்ப்பை | கடன் . |
| வாய்ப்பொய் | மெய்ம்மையின்பாற்படும் பொய் . |
| வாய்ப்பொன் | கடிவாளத்தின் ஓர் உறுப்பு . |
| வாய்பாடு | குறயீடு ; மரபுச்சொல் ; பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை ; வழக்கம் ; சொல்வன்மை ; வாயில் ஆட்சிப்பட்டுவரும் பேச்சு . |
| வாய்பாறுதல் | அலப்புதல் ; பிதற்றுதல் . |
| வாய்பிதற்றுதல் | நாக்குழறிப்பேசுதல் . |
| வாய்பிளத்தல் | அங்காத்தல் ; திகைத்தல் ; முடியாதென்று கைவிடுதல் ; இறத்தல் . |
| வாய்பினற்றுதல் | காண்க : வாய்பிதற்றுதல் . |
| வாய்புதைத்தல் | வாய்மூடுதல் . |
| வாய்புலற்றுதல் | பலகாற் சொல்லுதல் ; காண்க : வாய்பிதற்றுதல் . |
| வாய்பூசுதல் | வாய்கழுவுதல் ; இரகசியத்தை வெளியிடாதிருக்குமாறு இலஞ்சம் கொடுத்தல் ; புகழ்ந்துபேசுதல் . |
| வாய்பேசுதல் | தற்பெருமைபடப் பேசுதல் . |
| வாய்பொத்துதல் | காண்க : வாய்புதைத்தல் . |
| வாய்போக்குதல் | எளிதில் வாக்குக்கொடுத்தல் . |
| வாய்மடிதல் | கூர்மழுங்குதல் . |
| வாய்மடுத்தல் | வாயினுட் கொள்ளுதல் . |
| வாய்மடை | செய்வரம்பில் நீர்பாயும் வழி . |
| வாய்மண்போடுதல் | பிழைப்பைக் கெடுத்தல் ; கொடுமைசெய்தல் . |
| வாய்மணியம் | வாங்கத் திறமையின்றி வாயாற் செய்யும் அதிகாரம் ; செல்வாக்கு . |
| வாய்மதம் | மதியாது பேசுகை . |
| வாய்மலர்தல் | பேசுதல் . |
| வாய்முத்தம் | முத்தம் ; பல் . |
| வாய்முத்து | முத்தம் ; பல் . |
| வாய்மூடுதல் | வாய்பொத்தல் ; பேச்சு , அழுகை முதலியன நிறுத்துதல் ; குவிதல் . |
| வாய்மூப்பன் | பேச்சிற் சிறந்தவன் ; பிறர்வழக்கையெடுத்து வாதாடுவோன் . |
| வாய்மூழ்த்தல் | வாய்மூடுதல் . |
| வாய்மை | உண்மை ; சொல் ; தவறாச்சொல் ; பௌத்தசமய உண்மைகள் ; வலி . |
| வாய்மொழி | சொல் ; உண்மையான மொழி ; வாயினாற் சொல்வது ; வேதம் ; காண்க : திருவாய்மொழி . |
| வாய்மொழிதல் | கூறுதல் ; மந்திரத்தால் ஆற்றலுண்டாக்கல் . |
| வாய்வடம் | குதிரையின் வாய்க்கயிறு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 958 | 959 | 960 | 961 | 962 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாய்த்துடுக்கு முதல் - வாய்வடம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பேச்சு, வாய்பிதற்றுதல், வாயில், வாய்மூடுதல், பேசுதல், சொல், பேசுகை, வாய்புதைத்தல், முத்தம், வாயினாற், முதலியன, மொழி, மலர்தல், வாயை, சொல்லுதல், பாடம், புண், வாயிலுண்டாகும், இலஞ்சம்

