முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வாமனக்கல் முதல் - வாய்த்தீர்த்தம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வாமனக்கல் முதல் - வாய்த்தீர்த்தம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வாமனக்கல் | வாமனாவதார உருவமைந்த எல்லைக்கல் . |
| வாமனம் | குறள்வடிவம் ; காண்க : வாமனாவதாரம் ; பதினெண்புராணத்துள் ஒன்று ; தென்திசையைக் காக்கும் யானை ; எண்பத்து நான்கு அங்குல உயரமுள்ள உருவம் . |
| வாமனன் | குறள்வடிவைக்கொண்ட திருமால் . |
| வாமனாவதாரம் | குறள்வடிவான திருமால் பிறப்பு . |
| வாமா | ஒரு சிவசத்தி ; திருமகள் ; கலைமகள் ; பெண் . |
| வாமாசாரம் | வாமதந்திர மார்க்கப்படி செய்யுஞ் சத்திவழிபாடு . |
| வாமாட்சி | காண்க : வாமலோசனை . |
| வாமான் | குதிரை . |
| வாமி | துர்க்கை ; பார்வதி ; சத்தி வழிபாட்டின்படி நடப்போன் . |
| வாமை | பெண் ; ஒரு சிவசத்தி ; திருமகள் ; கலைமகள் . |
| வாய் | உதடு அல்லது அலகு இவற்றினிடையிலுள்ள உறுப்பு ; பாண்டம் முதலியவற்றின் திறந்த மேற்பாகம் ; வாய்கொண்ட அளவு ; உதடு ; விளிம்பு ; ஆயுதத்தின் முனை ; மொழி ; வாக்கு ; குரல் ; மெய்ம்மை ; சிறப்பு ; சிறப்புடைய பொருள் ; வாசல் ; வழி ; மூலம் ; இடம் ; துலாக்கோலின் வரை ; தழும்பு ; துளை ; வாத்தியக்குழல் ; ஏழுனுருபு ; ஓர் உவமஉருபு . |
| வாய்க்கட்டு | கண்டதைத் தின்னாமலிருக்கை ; மந்திரத்தால் பேசமுடியாமலும் வாயைத் திறக்க முடியாமலுஞ் செய்கை . |
| வாய்க்கட்டை | சிறுவர்க்குரிய திண்பண்டம் ; இலஞ்சம் . |
| வாய்க்கணக்கு | வாயால் சொல்லுங் கணக்கு ; மனக்கணிதம் . |
| வாய்க்கயிறு | கடிவாளக்கயிறு . |
| வாய்க்கரிசி | பிணத்தைக் கொளுத்தும்முன் அல்லது புதைக்குமுன் அதன் வாயில் இடும் அரிசி ; இலஞ்சம் ; மனமில்லாமற் கொடுப்பது . |
| வாய்க்கருவி | கடிவாளம் ; விளையாட்டு ஊதுகோல் . |
| வாய்க்கரை | கிணறு முதலியவற்றின் விளிம்பு ; உதடு . |
| வாய்க்கரைப்பற்று | நீர்நிலைக்கருகிலுள்ள வயல் ; உதடு . |
| வாய்க்காரன் | பேச்சில் வல்லவன் ; செருக்கால் மிதமிஞ்சிப் பேசுவோன் ; பிறரைத் திட்டும் இயல்புள்ளவன் ; பள்ளருள் ஒருவகையார் . |
| வாய்க்கால் | கால்வாய் ; மகநாள் . |
| வாய்க்கிரந்தி | வாய்ப்புண் . |
| வாய்க்கிலைகெட்டவன் | பெரும்வறிஞன் ; பயனற்றவன் . |
| வாய்க்குட்பேசுதல் | முணுமுணுத்தல் . |
| வாய்க்குற்றம் | தன்னை அறியாமற் பேச்சில் நேரும் பிழை ; பேச்சுக்குற்றம் . |
| வாய்க்கூடு | விலங்கின் வாயின்மே லிடுங் கூடு . |
| வாய்க்கூலி | இலஞ்சம் . |
| வாய்க்கேள்வி | அரசனின் கட்டளை ; பிறர் சொல்லக் கேட்ட செய்தி . |
| வாய்க்கேள்வியர் | அரசனின் கட்டளைகளை நிறைவேற்றுவோர் . |
| வாய்க்கொழுப்பு | மதியாப்பேச்சு . |
| வாய்க்கோணல் | நோய்வகை . |
| வாய்க்கோமாரி | மாட்டுக்கு வாயில்வரும் நோய்வகை . |
| வாய்கட்டுதல் | மந்திரத்தால் வாய்திறவாமற் பண்ணல் ; பேசாதிருக்கச் செய்தல் ; பிணத்தின் வாயை ஆடையாற் கட்டுதல் ; உணவில் பத்தியமாக இருத்தல் ; சிக்கனமாக உணவுகொள்ளுதல் . |
| வாய்கரை | இறங்குதுறை . |
| வாய்கரையர் | ஆழ்ந்தறியாது மேலெழுந்த அறிவுள்ளவர்கள் . |
| வாய்கனத்தல் | தெளிவின்றிப் பேசுதல் . |
| வாய்காட்டுதல் | அதிகப்பேச்சுப் பேசுதல் ; கெஞ்சுதல் . |
| வாய்குமட்டல் | வாயாலெடுக்கவருகை . |
| வாய்குளிரப்பேசுதல் | மேலுக்கு இனிமையாகப் பேசுதல் . |
| வாய்கூப்புதல் | புகழ்தல் . |
| வாய்கூம்புதல் | குவிதல் . |
| வாய்கொடுத்தல் | வாக்குத்தத்தஞ் செய்தல் ; பேச்சுக்கொடுத்தல் ; வாய்ச்சண்டை வளர்த்தல் . |
| வாய்ச்சி | மரஞ்செதுக்குங் கருவி ; செங்கல் செதுக்குங் கருவி . |
| வாய்ச்சொல் | வாயினின்று வருஞ்சொல் ; வெறுஞ்சொல் ; துணைச்சொல் . |
| வாய்சலித்தல் | பேசி வாய் அயர்தல் . |
| வாய்சோர்தல் | வாய் பிதற்றுதல் ; பேசி வாய் அயர்தல் ; வாய் தடுமாறுதல் ; பேசுவதில் பிழைபடுதல் . |
| வாய்த்தல் | சித்தித்தல் ; உறுதியாய் நிகழ்தல் ; ஏற்றதாதல் ; சிறத்தல் ; நன்கமைதல் ; செழித்தல் ; மதர்த்தல் ; சேர்தல் ; திரட்டுதல் . |
| வாய்த்தலை | வாய்க்காலின் தலைப்பு ; தொடங்குமிடம் . |
| வாய்த்தீர்த்தம் | காண்க : வாய் நீர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 957 | 958 | 959 | 960 | 961 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமனக்கல் முதல் - வாய்த்தீர்த்தம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வாய், உதடு, பேசுதல், காண்க, இலஞ்சம், அரசனின், பேச்சில், செய்தல், அயர்தல், பேசி, கருவி, நோய்வகை, முதலியவற்றின், சிவசத்தி, திருமால், வாமனாவதாரம், திருமகள், கலைமகள், விளிம்பு, அல்லது, பெண், மந்திரத்தால்

