முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வாயுச்சகன் முதல் - வாரக்காரன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வாயுச்சகன் முதல் - வாரக்காரன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வாயுச்சகன் | த . |
| வாயுசகன் | த . |
| வாயுசன் | காண்க : வளிமகன் . |
| வாயுத்தம்பம் | காற்றை இயங்காமல் நிறுத்தும் வித்தை . |
| வாயுத்தம்பனம் | காற்றை இயங்காமல் நிறுத்தும் வித்தை . |
| வாயுதவி | காண்க : வாயுபகாரம் . |
| வாயுதாரணை | காண்க : வாயுத்தம்பம் . |
| வாயுதாரு | முகில் ; மூங்கில் . |
| வாயுப்பறிதல் | அபானவாயு வெளியேறுகை . |
| வாயுப்பிடிப்பு | வாதத்தால் ஏற்படும் உடற்பிடிப்பு . |
| வாயுபகாரம் | வாயாற் செய்யும் உதவி . |
| வாயுபசாரம் | வாயளவிற் காட்டும் மரியாதை ; வாயுபகாரம் . |
| வாயுபலம் | மழை ; வானவில் . |
| வாயுமண்டலம் | காற்றுமண்டலம் . |
| வாயுமலடு | உடற்சதை மிகுதியால் பெண்களுக்கு அமையும் மலட்டுத்தன்மை . |
| வாயுமானி | காற்றின் அழுத்தத்தை அளந்தறியுங் கருவிவகை . |
| வாயுமூலை | வடமேற்கு . |
| வாயுமைந்தன் | அனுமன் ; வீமன் . |
| வாயுவிளக்கம் | கொடிவகை ; வாயுவிளங்கத்தின் அரிசிபோன்ற மணி . |
| வாயுவிளங்கம் | ஒரு கொடிவகை . |
| வாயுவேகம் | காற்றின் வேகம்போன்ற விரைவு . |
| வாயுள்ளவன் | கேட்டு அறிந்துகொள்ளக் கூடியவன் . |
| வாயுறுத்தல் | வாக்கினால் மெய்ம்மையை அறிவுறுத்துதல் ; வாயிலூட்டுதல் . |
| வாயுறை | உண்கை ; உணவு ; அறுகம்புல் ; அன்னப்பிராசனம் ; கவளம் ; மருந்து ; உறுதிமொழி ; மகளிர் காதணி . |
| வாயுறைவாழ்த்து | தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதிமொழிகளைச் சான்றோர் கூறும் புறத்துறை ; ஒரு நூல்வகை . |
| வாயூறுதல் | வாயில் நீர் ஊறுதல் ; விரும்பல் . |
| வாயெடுத்தல் | பேசத்தொடங்கல் ; குரலெடுத்தல் . |
| வாயைக்கட்டுதல் | உணவிற் பத்தியமாக இருத்தல் ; காண்க : வாய்க்கட்டு ; வாயை மூடுதல் . |
| வாயொடுங்குதல் | பேச்சடங்குதல் . |
| வாயொலி | பாடல் . |
| வாயோடு | உடைந்த பானையின் வாய்ச்சில்லு ; குற்றும் அரிசி முதலியன சிதறாதபடி உரலின் மேல் வைக்கும் பானைக்கழுத்துப்போன்ற கருவி . |
| வார் | நெடுமை ; கடைகயிறு ; தோல்வார் ; நுண்மை ; நேர்மை ; வரிசை ; உயர்ச்சி ; நீர் ; தோல் ; முலைக்கச்சு ; துண்டு . |
| வார்க்கட்டு | வாராற் கட்டப்பட்டது ; யாழ்த்தந்தியுள்ள நரம்புக்கட்டு . |
| வார்க்குத்தி | நீர்ப்பெருக்குச் சுழித்தோடும் இடம் . |
| வார்க்குத்து | நீர்ப்பெருக்குச் சுழித்தோடும் இடம் . |
| வார்காது | தொங்கும் துளைச்செவி . |
| வார்த்தல் | ஊற்றுதல் ; உலோகத்தையுருக்கி அச்சில் ஊற்றி உருவஞ்செய்தல் ; அம்மை நோயில் முத்து வெளிப்படுதல் ; தோசை முதலியன சுடுதல் . |
| வார்த்தாகம் | கத்தரிச்செடி . |
| வார்த்திகம் | வாணிகம் ; வாழ்க்கை ; சூத்திரக் கருத்தை விளக்கும் ஓர் உரைவகை ; நான்கு மாத்திரைகூடிய களை ; கிழத்தன்மை . |
| வார்த்திகன் | தூதன் ; வணிகன் . |
| வார்த்தை | சொல் ; மறுமொழி ; வாக்குத்தத்தம் ; செய்தி ; அணிவகை ; உழவு ; பசுக்காவல் ; வாணிகம் என்னும் வணிகர் தொழில் ; ஒரு நூல் . |
| வார்த்தைகொடுத்தல் | பேசுதல் ; உறுதிமொழி தருதல் ; பேச இடங்கொடுத்தல் . |
| வார்த்தைத்தொழிலோர் | உழவர் . |
| வார்த்தைதடித்தல் | பேச்சுக் கடுமையாய் வளர்தல் . |
| வார்த்தைநாணயம் | சொல் தவறாமை . |
| வார்த்தைப்பாடு | உறுதிமொழி ; திருமணத்தில் மணமக்கள் சொல்லும் உறுதிமொழி ; பொருள்முக்கியம் இன்றி வாக்கியத்தில் விழுஞ் சொல் ; பேச்சுறுதி ; நயமொழி . |
| வார்த்தையாடுதல் | உரையாடுதல் . |
| வார்த்தையெடுத்தல் | பேச்சுத் தொடங்கல் ; உரையாடல் . |
| வார்தல் | ஒழுகுதல் ; வெளிவிடுதல் ; நெடுமையாதல் ; நேராதல் ; உயர்தல் ; ஒழுங்குபடுதல் ; நென்மணி முதலியன பால்கட்டுதல் ; உரிதல் ; மயிர்கோதுதல் ; தெரிதல் ; யாழில் சுட்டு விரலால் செய்யும் தொழில் . |
| வார்ப்படம் | உருக்கிவார்க்கும் தொழில் . |
| வார்ப்பு | ஒழுக்குகை ; உலோகங்களை உருக்கி வார்த்தல் ; உருக்கி வார்க்கப்பட்டது ; அகன்ற பாண்டவகை ; கைவளை ; மாணிக்கத்தில் ஏற்றிய மேற்பூச்சு . |
| வார்ப்புவேலை | உருக்கிவார்த்தல் வேலை ; உருக்கி வார்க்கப்பட்டது . |
| வார்பு | நீளவாக்கில் சீவப்படுகை . |
| வார்மை | ஒழுக்கம் ; நேர்மை ; மரியாதை . |
| வாரக்கம் | உழவர்கட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம் ; படைவீரனாகப் பதிந்துகொள்வோர்க்குக் கொடுக்கும் முன்பணம் . |
| வாரக்காரன் | உழுங் குடியானவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 960 | 961 | 962 | 963 | 964 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயுச்சகன் முதல் - வாரக்காரன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சொல், உறுதிமொழி, காண்க, வாயுபகாரம், முதலியன, உருக்கி, தொழில், கொடுக்கும், சுழித்தோடும், முன்பணம், இடம், வார்த்தல், நீர்ப்பெருக்குச், வாணிகம், வார்க்கப்பட்டது, நீர், வித்தை, நிறுத்தும், இயங்காமல், காற்றை, செய்யும், மரியாதை, வாயுத்தம்பம், கொடிவகை, காற்றின், நேர்மை

