தமிழ் - தமிழ் அகரமுதலி - வாய்வது முதல் - வாயுகோணம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வாய்வது | உண்மை ; கிட்டுவது . |
| வாய்வலம் | சொல்வன்மை . |
| வாய்வலி | காண்க : வாய்வலம் ; அம்பு முதலிய ஆயுதங்களின் முனை உறுதி . |
| வாய்வழங்குதல் | உண்ணுதல் ; பேசுதல் . |
| வாய்வாயெனல் | அச்சுறுத்தற்குறிப்பு ; அளவுக்கு மிஞ்சிப் பேசுதல் . |
| வாய்வார்த்தை | வாய்ப்பேச்சு ; நயம்பொருந்திய சொல் . |
| வாய்வாள் | குறிதப்பாத வாள் . |
| வாய்வாளாமை | பேசாதிருக்கை . |
| வாய்வாளார் | வாய்பேசாதார் . |
| வாய்விட்டுப்பேசுதல் | வெளிவிட்டுத் தெளிவாகப் பேசுதல் . |
| வாய்விடு | வஞ்சினம் ; ஆரவாரம் . |
| வாய்விடுதல் | பேசுதல் ; வெளிவிட்டுத் தெளிவாகச் சொல்லுதல் ; வெளிப்படுத்துதல் ; மலர்தல் ; உரக்கச் சத்தமிடுதல் ; வஞ்சினங்கொள்ளுதல் ; கொட்டாவிவிடுதல் ; ஒலித்தல் . |
| வாய்விரிதல் | அங்காத்தல் ; அலப்புதல் ; கொட்டாவிவிடுதல் . |
| வாய்விள்ளுதல் | மலர்தல் ; வாயைத் திறத்தல் . |
| வாய்விளங்கம் | ஒரு கொடிவகை . |
| வாய்வு | காண்க : வாயு . |
| வாய்வெருவுதல் | தூக்கத்தில் கனவு முதலியவற்றால் வாய்குழறுதல் ; வாய்பிதற்றுதல் . |
| வாய்வைத்தல் | உண்ணுதல் ; ஊதுதல் ; சுவை பார்த்தல் ; தலையிடுதல் ; சிறிது பயிலுதல் ; கடித்தல் ; கேட்டல் . |
| வாயகம் | கூட்டம் . |
| வாயசம் | காக்கை ; காக்கைக்கிடும் சோற்றுத்திரளை . |
| வாயசி | பெண்காகம் ; செம்மணித்தக்காளி . |
| வாயடித்தல் | வாய்ப்பேச்சால் மருட்டி வெல்லுதல் ; மருட்டிப்பேசுதல் ; வாயிலே அடித்துக் கொள்ளுதல் ; அலப்புதல் . |
| வாயடை | உணவு ; பற்கிட்டிநோய் . |
| வாயடைத்தல் | பேசவிடாமற்செய்தல் . |
| வாயதம் | காண்க : வாயசம் . |
| வாயம் | நீர் ; பெய்குதல் . |
| வாயல் | வாயில் ; பக்கம் . |
| வாயலம்புதல் | உண்டபின் வாயைத் தூய்மை பண்ணல் . |
| வாயவி | வடமேற்குத்திசை . |
| வாயவியம் | வாயு சம்பந்தமானது ; ஒரு புராணம் ; வடமேற்றிசை ; முகூர்த்தத்துள் பதினைந்தாவது ; வாயுதேவனை அதிதேவதையாகக்கொண்ட அம்பு . |
| வாயன் | தூதன் ; ஆயன் . |
| வாயாகுதல் | உண்மையாதல் . |
| வாயாடி | வாய்வல்லவர் ; அதிகமாகப் பேசுவோர் . |
| வாயாடுதல் | வீண்பேச்சுப் பேசுதல் ; அதிகமாகப் பேசுதல் ; ஓயாது மென்றுகொண்டிருத்தல் . |
| வாயார | முழுக் குரலோடு ; வாய்நிரம்ப . |
| வாயாலெடுத்தல் | கக்குதல் ; வாந்தியெடுத்தல் . |
| வாயாவி | கொட்டாவி ; மூச்சு . |
| வாயிதா | வரி . |
| வாயில் | வழி ; கட்டடத்துள் நுழையும் வாசல் ; ஐம்பொறி ; ஐம்புலன் ; துளை ; இடம் ; காரணம் ; கழுவாய் ; அரசவை ; வாயில் காப்போன் ; தூதன் ; தலைவனையும் தலைவியையும் இடைநின்று கூட்டுந் தூது ; திறம் ; கதவு ; வரலாறு . |
| வாயில்மண்போடுதல் | கேடுவிளைத்தல் . |
| வாயில்விழைச்சு | உமிழ்நீர் . |
| வாயில்வேண்டல் | தலைவனுக்கு முகங்கொடுக்குமாறு தலைவியைப் பாணன் முதலிய தூதுவர் வேண்டிக்கொள்வதைக் கூறும் அகப்பொருள் துறை . |
| வாயிலடித்தல் | முற்றுங்கெடுத்தல் . |
| வாயிலாச்சீவன் | விலங்கு . |
| வாயிலாளன் | வாயில்காப்போன் . |
| வாயிலேபோடுதல் | பேசவொட்டாது குறுக்கிட்டுப் பேசித் தடைசெய்தல் ; கவர்தல் . |
| வாயிலோர் | வாயில்காப்போர் ; தமிழ்க்கூத்தர் ; தூதுவர் . |
| வாயிற்காட்சி | ஐம்பொறிகளாற் காணுதல் . |
| வாயிற்கூட்டம் | பாணன் முதலியோரால் கூடும் தலைவன் தலைவியரின் சேர்க்கை ; வாயிலின்கண் தொழிலாளர் கூடும் கூட்டம் . |
| வாயிற்கூத்து | கூத்துவகை . |
| வாயிற்படி | வீட்டுவாசலின் படி . |
| வாயின்மறுத்தல் | தூதுவந்த பாணன் முதலியவர்க்குத் தலைவி முகங்கொடுக்க மறுத்தலைக் கூறும் அகத்துறை . |
| வாயின்மாடம் | கோபுரம் . |
| வாயினிலை | அரசனிடத்தில் தன் வரவு கூறுமாறு வாயில்காப்போனுக்குப் புலவன் சொல்வதாகக் கூறும் புறத்துறை . |
| வாயினேர்வித்தல் | தலைவியிடம் தூதுசெல்லுமாறு தலைவன் தூதுவரை உடன்படுத்துவதைக் கூறும் அகத்துறை . |
| வாயு | காற்று ; ஐவகை பூதத்துள் ஒன்று ; வாதம் ; வடமேற்கு மூலைக்குத் தலைவனான தேவன் ; அபானவாயு ; வயிற்றுப்பொருமல் ; காற்றுவகை . |
| வாயுகுமாரன் | காண்க : வளிமகன் . |
| வாயுகோணம் | வடமேற்குமூலை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 959 | 960 | 961 | 962 | 963 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாய்வது முதல் - வாயுகோணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பேசுதல், கூறும், காண்க, பாணன், வாயில், வாயு, அதிகமாகப், தூதன், வாயசம், தலைவன், கூடும், அகத்துறை, தூதுவர், வாயைத், உண்ணுதல், முதலிய, அம்பு, வாய்வலம், வெளிவிட்டுத், மலர்தல், சொல், அலப்புதல், கொட்டாவிவிடுதல், கூட்டம்

