தமிழ் - தமிழ் அகரமுதலி - வாணிகச்சாத்து முதல் - வாமன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வாணிகச்சாத்து | வாணிகர் கூட்டம் . |
| வாணிகம் | வியாபாரம் ; ஊதியம் . |
| வாணிகன் | வியாபாரி ; வைசியன் ; துலாக்கோல் ; துலாராசி . |
| வாணிகேள்வன் | பிரமன் . |
| வாணிச்சி | காண்க : வாணியச்சி ; வணிகச்சாதிப்பெண் . |
| வாணிச்சியம் | காண்க : வாணியம் . |
| வாணிதம் | கள் . |
| வாணிதி | காண்க : வாணினி . |
| வாணிபம் | காண்க : வாணிகம் . |
| வாணிமலர் | வெண்டாமரை . |
| வாணிமன் | காண்க : வாணிகேள்வன் . |
| வாணியச்சி | செக்கார்சாதிப் பெண் . |
| வாணியம் | காண்க : வாணிகம் . |
| வாணியன் | காண்க : செக்கான் . |
| வாணினி | நாடகக்கணிகை ; நாணமற்றவள் . |
| வாணீசன் | பிரமன் . |
| வாணுதல் | ஒளிபொருந்திய நெற்றி ; ஒள்ளிய நெற்றியுள்ள பெண் . |
| வாத்தி | ஆசிரியன் . |
| வாத்தியப்பெட்டி | ஆர்மோனியப்பெட்டி ; இசையெழுப்பும் இயந்திரப்பெட்டி . |
| வாத்தியம் | இசைக்கருவி . |
| வாத்தியாயர் | ஆசிரியர் . |
| வாத்தியார் | ஆசிரியர் ; புரோகிதன் ; நாடகம் , கூத்து முதலியன பயிற்றுவிப்போன் . |
| வாத்து | தாரா ; பெருந்தாரா ; மரக்கொம்பு ; மனை ; இல்லுறைதெய்வம் . |
| வாதக்குடைச்சல் | சந்துவாதத்தால் உண்டாகும் வலி ; நரம்புநோய்வகை . |
| வாதகம் | இடையூறு . |
| வாதகேது | புழுதி . |
| வாதசுரம் | வாதத்தைப்பற்றியெழுந்த காய்ச்சல் . |
| வாதசெபம் | வாயுவேகம் . |
| வாதநாசனம் | காண்க : ஆமணக்கு . |
| வாதநாடி | நாடி மூன்றனுள் வாதநிலையை அறிவிக்கும் நாடி . |
| வாதநீர் | உடலில் திமிர் உண்டாக்கும் கெட்ட நீர் . |
| வாதநோய் | உடலுறுப்புகளில் வலியை உண்டுபண்ணும் நோய்வகை . |
| வாதப்பிடிப்பு | வாயுப்பிடிப்பு . |
| வாதபாடணர் | கோட்சொல்பவர் . |
| வாதம் | உடலில் வாயு மிகுதலாகிய பிணிக்கூறு ; காண்க : வாதநோய் ; வாதநாடி ; பத்துவகை வாயு ; காற்று ; சொல் ; வாதம் முதலியவற்றால் ஒரு பக்கத்தை எடுத்துக்கூறுகை ; தருக்கம் ; உரையாடல் இரசவாதவித்தை ; வில்வமரம் . |
| வாதமடக்கி | வாதநோய் போக்கும் மருந்துமரவகை ; செடிவகை . |
| வாதலம் | செடிவகை . |
| வாதவூரர் | மதுரைமாநகரடுத்த திருவாதவூரில் பிறந்தவரான மாணிக்கவாசகர் . |
| வாதனம் | சீலை . |
| வாதனை | நறுமணம் ; செயற்கைக்குணம் ; இம்மையில் உண்டாகும் பற்று ; துன்பம் . |
| வாதாசனம் | காற்றை உண்ணுவதான பாம்பு . |
| வாதாட்டம் | சொற்போர் . |
| வாதாட்டுதல் | சொற்போருக்கழைத்தல் ; வருத்துதல் . |
| வாதாடுதல் | தர்க்கம்செய்தல் ; வழக்காடுதல் . |
| வாதாயனம் | பலகணி , சாளரம் ; மண்டபம் . |
| வாதாரி | காண்க : ஆமணக்கு ; வேம்பு . |
| வாதானுவாதம் | தருக்கத்தில் நிகழும் வினாவிடைகள் . |
| வாதி | வழக்காடுபவன் ; எடுத்துப் பேசுபவன் ; தருக்கம் செய்பவன் ; வழக்குத்தொடுப்போன் ; தன் கொள்கையை நிலைநிறுத்துவோன் ; இரசவாதி ; வருத்துபவன் ; பண்ணின் முக்கிய சுரம் . |
| வாதிகன் | நறுமணப்பொருள்கள் கூட்டுவோன் . |
| வாதித்தல் | வாதாடுதல் ; வருத்துதல் ; தடுத்தல் . |
| வாதிப்பு | துன்பம் . |
| வாது | தருக்கம் ; சண்டை ; நியாயத்தல வழக்கு ; சூளுரை ; மரக்கிளை . |
| வாதுகை | மனைவி . |
| வாதுதல் | அறுத்தல் . |
| வாதுமை | மரவகை . |
| வாதுவன் | யானைப்பாகன் ; குதிரைப்பாகன் . |
| வாதூகம் | செம்பு . |
| வாதை | துன்பம் ; வேதனைசெய்யும் நோய் . |
| வாந்தி | வாயாலெடுத்தல் . |
| வாந்தியெடுத்தல் | வாயாலெடுத்தல் . |
| வாபம் | மயிர்கழிக்கை ; நெய்கை ; வித்து . |
| வாம்பல் | மூங்கில் ; கழை . |
| வாமதேவன் | சிவபிரான் ; ஒரு முனிவன் . |
| வாமம் | அழகு ; ஒளி ; இடப்பக்கம் ; நேர்மையின்மை ; எதிரிடை ; தீமை ; சத்தியே தெய்வம் எனக் கூறும் மதம் ; பாம்புவகை ; முலை ; செல்வம் ; சிவன் ஐம்முகத்துள் ஒன்று ; குறள் வடிவம் ; துடை . |
| வாமல் | கற்றாழை . |
| வாமலோசனன் | திருமால் . |
| வாமலோசனை | அழகிய கண்ணுடையாள் ; திருமகள் . |
| வாமலோசிகம் | காண்க : வாமல் . |
| வாமன் | அருகன் ; புத்தன் ; சிவன் ; திருமால் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 956 | 957 | 958 | 959 | 960 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாணிகச்சாத்து முதல் - வாமன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, துன்பம், வாதநோய், வாணிகம், தருக்கம், செடிவகை, வாயு, வாதம், வாயாலெடுத்தல், திருமால், வாமல், சிவன், வாதாடுதல், வருத்துதல், நாடி, வாணியம், வாணினி, வாணியச்சி, பிரமன், வாணிகேள்வன், பெண், ஆசிரியர், சொல், வாதநாடி, ஆமணக்கு, உண்டாகும், உடலில்

