தமிழ் - தமிழ் அகரமுதலி - வாசை முதல் - வாணி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வாசை | காண்க : ஆடாதோடை . |
| வாஞ்சனம் | காண்க : வாஞ்சை . |
| வாஞ்சனை | காண்க : வாஞ்சை . |
| வாஞ்சித்தல் | விரும்புதல் . |
| வாஞ்சிதம் | விரும்பியது . |
| வாஞ்சை | விருப்பம் . |
| வாட்குடி | மறக்குடி . |
| வாட்கூத்து | வாளைப் பிடித்து ஆடுங் கூத்து . |
| வாட்கை | காண்க : வாழ்க்கை . |
| வாட்கோரை | கோரைவகை . |
| வாட்செலவு | எதிர்த்துவந்த அரசனது பொருபடையிடத்து எதிரூன்றும் வேந்தன் தன் அரசவாளை முன்னதாக விடுத்தலைக் கூறும் புறத்துறை . |
| வாட்டசாட்டம் | தோற்றப்பொலிவு . |
| வாட்டம் | வாடுதல் ; உலர்ச்சி ; மெலிவு ; வருத்தம் ; ஒழுங்கான சாய்வு ; வடிவழகு ; அதிகமாய் ; காண்க : வாட்டசாட்டம் ; நீட்டம் ; நிறைவு ; அனுகூலம் ; தோட்டம் ; தெரு ; வழி . |
| வாட்டரவு | சோர்வு ; உலர்கை . |
| வாட்டல் | வாட்டப்பட்ட பொருள் . |
| வாட்டானை | அறுவகைத் தானைகளுள் ஒன்றான வாட்படை . |
| வாட்டி | தடவை ; வயிரமண் ; களம் அடிக்கும் கடைசிப் பிணையல் மாடு . |
| வாட்டியபுட்பம் | சந்தனம் ; மஞ்சள் . |
| வாட்டியம் | தோட்டம் ; வீடு . |
| வாட்டு | பொரியல் ; தொல்லை ; ஒழுங்கான சாய்வு ; அழகானது ; தகுதியானது ; சார்பு ; மலிவு . |
| வாட்டுதல் | வருத்துதல் ; வதக்குதல் ; உலர்த்துதல் ; கெடுத்தல் ; ஆடைவெளுத்தல் . |
| வாட்படை | வாள் தரித்த வீரர் கூட்டம் . |
| வாட்படையாள் | துர்க்கை . |
| வாட்போர் | வாளால் செய்யும் சண்டை . |
| வாடகை | கூலி ; குடிக்கூலி ; சுற்றுவட்டம் ; தெரு ; வாகனசாலை ; மண்சுவர் . |
| வாடல் | வாடுகை ; வாடினபொருள் ; உலர்ந்த பூ . |
| வாடாமல்லிகை | ஒரு பூச்செடிவகை . |
| வாடாமாலை | பூமாலைபோன்று வாடாததான பொன்னரிமாலை ; கிழி , கிடை முதலியவற்றால் செய்யப்படும் மாலை . |
| வாடாவஞ்சி | சேரர் தலைநகரமான கருவூர் . |
| வாடாவள்ளி | ஒரு கூத்துவகை ; ஓவியம் . |
| வாடி | செடிவகை ; தோட்டம் ; மதில் ; முற்றம் ; வீடு ; மீன் உலர்த்தும் இடம் ; பட்டி ; சாவடி ; அடைப்புள்ள இடம் ; மரம் விற்குமிடம் . |
| வாடிக்கை | வழக்கம் ; வழக்கமாகப் பற்றுவரவு செய்கை ; முறை ; காண்க : வாடிக்கைக்காரன் . |
| வாடிக்கைக்காரன் | வழக்கமாக ஓரிடத்துப் பற்றுவரவு செய்வோன் ; பண்டங்களை வழக்கமாக ஓரிடத்து விலைக்கு வாங்குவோன் . |
| வாடு | வாடற்பூ . |
| வாடுதல் | உலர்தல் ; மெலிதல் ; பொலிவழிதல் ; மனமழிதல் ; தோல்வியடைதல் ; கெடுதல் ; நீங்குதல் ; குறைதல் ; நிறைகுறைதல் . |
| வாடூன் | உப்புக்கண்டம் . |
| வாடை | வடகாற்று ; குளிர்காற்று ; காற்று ; மணம் ; காண்க : வடவைத்தீ ; தெருச்சிறகு ; தெரு ; இடையர் அல்லது வேடர் வாழும் வீதி ; சிற்றூர் ; மருந்து ; கூலி . |
| வாடைக்கச்சான் | வடமேல்காற்று . |
| வாடைக்காற்று | வடகாற்று . |
| வாடைக்கொண்டல் | வடகீழ்காற்று . |
| வாடைப்பாசறை | பாசறைக்கண் வீரர் தம் காதன்மகளிரை நினைந்து துயருறும்படி செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறும் புறத்துறை . |
| வாடைப்பொடி | மணத்தூள் ; வசியப்படுத்தும் பொடி . |
| வாடையாலோடுதல் | வடகாற்றின் உதவியால் மரக்கலம் பாய்விரித்துச் செல்லுதல் . |
| வாடையிலோடுதல் | வடகாற்றின் உதவியால் மரக்கலம் பாய்விரித்துச் செல்லுதல் . |
| வாண்மங்கலம் | பகையரசை வென்ற வேந்தன் தன் வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலைக் கூறும் புறத்துறை ; வீரனது வாள்வெற்றியால் பசிப்பிணி தீர்ந்த பேய்ச் சுற்றம் அவன் வாளினை வாழ்த்துதலைக் கூறும் புறத்துறை . |
| வாண்மண்ணுநிலை | நன்னீரில் ஆட்டிய அரசவாளின் வீரம் குறிக்கும் புறத்துறை . |
| வாண்முகம் | வாளின் வாய் . |
| வாண்முட்டி | வாளின் பிடி . |
| வாணக்கந்தகம் | பொறிவாணம் முதலியன செய்தற்குரிய கந்தகவகை . |
| வாணக்கல் | வீடு முதலியவற்றின் அடிப்படைக்கல் . |
| வாணகம் | அம்பு ; தீ ; தனிமை ; பசுவின் மடி ; வேய்ங்குழல் . |
| வாணகன் | திருமால் . |
| வாணம் | அம்பு ; தீ ; மத்தாப்பு முதலியன ; அடிப்படைக் குழி . |
| வாணம்பறித்தல் | அடிப்படை தோண்டுதல் . |
| வாணன் | வாழ்பவன் ; ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன் ; நல்வாழ்வுள்ளவன் ; ஓரசுரன் ; கார்த்திகைநாள் ; நெல்வகை . |
| வாணாத்தடி | சிலம்பக்கோல் . |
| வாணாள் | வாழ்நாள் ; உயிர் . |
| வாணாளளப்போன் | சூரியன் . |
| வாணி | கலைமகள் ; நாதந்தோன்றுமிடம் ; ஒரு கூத்து ; சொல் ; கல்வி ; சரசுவதிநதி ; அம்பு ; ஓமம் ; நீர் ; இந்துப்பு ; காண்க : மனோசிலை ; ஆடுமாடுகளின் தலைக்கறி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 955 | 956 | 957 | 958 | 959 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாசை முதல் - வாணி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, புறத்துறை, கூறும், வாஞ்சை, தோட்டம், தெரு, அம்பு, வீடு, உதவியால், வடகாற்று, வழக்கமாக, மரக்கலம், வடகாற்றின், செல்லுதல், வாழ்பவன், முதலியன, வாளின், வாடிக்கைக்காரன், பாய்விரித்துச், வீரர், வாடுதல், வாட்டசாட்டம், வேந்தன், கூத்து, ஒழுங்கான, சாய்வு, இடம், கூலி, சொல், வாட்படை, பற்றுவரவு

