தமிழ் - தமிழ் அகரமுதலி - வாசகஞ்செய்தல் முதல் - வாசுரை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
வாசகஞ்செய்தல் | தோத்திரஞ்செய்தல் ; புகழ்தல் . |
வாசகதாட்டி | பேச்சுவன்மை . |
வாசகம் | சொல் ; செய்தி ; சொற்றொடர் ; செய்யுள் ; பிறர் கேட்கச் செபிக்கை ; உரைநடை ; வாய்பாடு ; கடிதம் ; தோத்திரம் ; குரு சீடனுக்கு உபதேசிக்கும் தீட்சை ; காண்க : திருவாசகம் . |
வாசகன் | பேசுவோன் ; அரசர் திருமுன் கடிதம் படிப்போன் ; தூதன் . |
வாசஞ்செய்தல் | வாழ்தல் . |
வாசத்தானம் | வாழுமிடம் . |
வாசந்தம் | தென்றல் ; ஒட்டகம் ; குயில் ; விலங்கின் இளங்கன்று . |
வாசந்தி | காண்க : குருக்கத்தி ; ஆடாதோடை ; திப்பிலி ; சண்பகம் . |
வாசநெய் | புழுகு ; மணவெண்ணெய் . |
வாசபதி | காண்க : வாக்குபதி . |
வாசம் | வாழ்கை ; இருப்பிடம் ; ஊர் ; மணம் ; மணப்பண்டம் ; காண்க : இலாமிச்சு(சை) ; ஆடை ; இறகு ; வாக்கியம் ; அம்பு ; நெய் ; அரிசி ; நீர் ; மந்திரவகை ; பேச்சு ; வேகம் ; கைமரம் ; கலைமகள் . |
வாசரம் | நாள் . |
வாசரி | வாக்கால் கண்டிக்கை . |
வாசல் | கட்டடத்தின் முகப்புவழி ; வீட்டின் உள்முற்றம் ; அரசன்மண்டபம் . |
வாசல்வித்துவான் | அரசவைப் புலவன் . |
வாசவன் | இந்திரன் ; மணப்பொருள் விற்பவன் . |
வாசவன்மருகோன் | இந்திரன் மருமகனான முருகக்கடவுள் . |
வாசவுண்டை | மணப்பண்டங்களைத் திரட்டியமைத்த உருண்டை . |
வாசவெண்ணெய் | காண்க : வாசநெய் . |
வாசற்கதவு | வீட்டின் முகப்புநிலைக் கதவு . |
வாசற்காவல் | வாயில்காப்பு ; காண்க : வாசற்காவலாளன் . |
வாசற்காவலாளன் | வீட்டுவாயிலிற் காவல் புரிபவன் . |
வாசற்படி | வாசல் ; வாயில்நிலையின் அடிப்பாகம் ; வாயில்நிலையின் மேற்பாகம் . |
வாசன் | வசிப்பவன் ; பன்னிரு சூரியருள் ஒருவன் . |
வாசனம் | மணம் ; அறிவு ; புடைவை ; வாசிப்பு ; குரல் . |
வாசனி | மேற்கட்டி . |
வாசனை | நன்மணம் ; பிறர் பழக்கத்தால் உண்டாகும் செயற்கைக் குணம் ; பற்று ; குரல் ; வாசிப்பு . |
வாசனைகட்டுதல் | பண்டங்களுக்கு நறுமணங் கூட்டுதல் . |
வாசனைத்திரவியம் | நறுமணப்பண்டம் . |
வாசனைதட்டுதல் | மணம்வீசுதல் ; புலனுக்குத் தெரிதல் . |
வாசனைப்பண்டம் | காண்க : வாசனைத்திரவியம் . |
வாசனைப்பொடி | மணப்பொடி ; மணமுள்ள மூக்குத்தூள் . |
வாசாகயிங்கர்யம் | வெறும்பேச்சு ; வாயினாற் செய்யும் பணி . |
வாசாகாரம் | அந்தப்புரம் . |
வாசாஞானம் | அனுபவமில்லாமல் ஞானம் பேசுதல் ; போலி ஞானப்பேச்சு . |
வாசாதி | காண்க : ஆடாதோடை . |
வாசாமகோசரம் | வாக்கிற்கெட்டாதது . |
வாசாலகம் | சொல்வன்மை . |
வாசாலகன் | பேச்சில் வல்லவன் . |
வாசாலன் | பேச்சில் வல்லவன் . |
வாசாலை | வாக்கில் வல்லவள் . |
வாசி | வேறுபாடு ; இயல்பு ; குணம் , தன்மை ; தகுதி ; நல்ல நிலைமை ; நிமித்தம் ; வீதம் ; நாணயவட்டம் ; இசைக்குழல் ; இசைப்பாட்டு ; குதிரை ; அசுவினி ; பறவை ; அம்பு ; மூச்சு ; நியாயம் ; வசிப்பவன் ; குறியீட்டுச்சொல் ; வாகனப்பிரபை ; இருப்பிடம் . |
வாசிக்கோவை | குதிரைக் கிண்கிணிமாலை . |
வாசிகம் | வாக்காற் செய்யப்படுவது ; வாய்ச்செய்தி ; செய்தி . |
வாசிகன் | தூதன் . |
வாசிகை | செறியுமாறு கோத்த மாலை ; சிகைமாலை ; மாலை ; வாகனப்பிரபை ; வணிகர் வாழும் சேரி . |
வாசித்தல் | படித்தல் ; கற்றல் ; வீணை முதலியன இசைக்க ஒலிப்பித்தல் ; மணத்தல் . |
வாசிதம் | அறிவு ; குடியேற்றுதல் ; பறவை முதலியவற்றின் குரல் . |
வாசிப்பு | கல்வியறிவு ; படிப்பு ; தேசிக்கூத்துக்குரிய கால் அமைப்புவகை . |
வாசிமேதம் | காண்க : அசுவமேதம் . |
வாசிரம் | நாற்சந்தி ; வீடு ; பகல் . |
வாசிவாரியன் | குதிரையைப் பழக்குவதில் வல்லவன் . |
வாசினி | பெண்குதிரை ; குடியிருப்பவள் . |
வாசினை | படித்தல் ; யாழ் முதலியன இசைத்தல் . |
வாசு | கடவுள் ; திருமால் ; இருவேலிப்புல் . |
வாசுகி | திருவள்ளுவரின் மனைவி ; எண்வகை நாகத்துள் பூமியைக் கிழக்குப்புறத்துத் தாங்கும் நாகம் ; விந்து . |
வாசுரை | இரவு ; பூமி ; பெண் ; பெண்யானை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 954 | 955 | 956 | 957 | 958 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாசகஞ்செய்தல் முதல் - வாசுரை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, குரல், வாசிப்பு, வல்லவன், படித்தல், முதலியன, அறிவு, வசிப்பவன், குணம், வாசனைத்திரவியம், வாகனப்பிரபை, பறவை, வாயில்நிலையின், பேச்சில், மாலை, வாசற்காவலாளன், தூதன், ஆடாதோடை, கடிதம், பிறர், செய்தி, வாசநெய், இருப்பிடம், வீட்டின், இந்திரன், வாசல், அம்பு, மணம், சொல்