தமிழ் - தமிழ் அகரமுதலி - வலுத்தல் முதல் - வழாறு வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
வலுத்தல் | வன்மையாதல் ; திடப்படுதல் . |
வலுமை | பலம் ; வலாற்காரம் . |
வலுவந்தம் | வலாற்காரம் ; வன்மை . |
வலுவன் | திறமைமிக்கவன் . |
வலூகம் | தாமரைக்கிழங்கு . |
வலை | உயிர்களை அகப்படுத்துதற்குரிய கருவி ; சூழ்ச்சி ; யாகபத்தினி நெற்றியில் அணிந்து கொள்ளும் அணிவகை . |
வலைக்கண் | வலையின் சிறுதுளை . |
வலைக்குணுக்கு | வலையை நீருள் தாழச் செய்யும் உலோக உருண்டை . |
வலைகாரன் | மீன்பிடிப்போன் . |
வலைகொள்ளுதல் | சூழ்தல் . |
வலைச்சி | நெய்தல்நிலப் பெண் ; செம்படவப் பெண் . |
வலைப்படுதல் | வலையில் அகப்படுதல் ; சூழ்ச்சிக்குட்படுதல் . |
வலைப்பை | வலைபோற் கண்களுள்ள பை . |
வலையச்சேரி | நெய்தல்நிலம் ; வலைஞர் வாழிடம் . |
வலையம் | காண்க : வலயம் . |
வலையன் | நெய்தல்நிலத்தான் ; சாமைவகை ; ஒரு சாதியான் . |
வலைவன் | நெய்தல் நிலத்தவன் ; ஒரு சாதியான் . |
வலைவாணன் | நெய்தல் நிலத்தவன் ; ஒரு சாதியான் . |
வலைவாழ்நன் | நெய்தல் நிலத்தவன் ; ஒரு சாதியான் . |
வலைவீசுதல் | மீன் முதலியன பிடிக்க வலையை எறிதல் ; வயப்படுத்த முயலுதல் . |
வலோற்காரம் | காண்க : வலாற்காரம் . |
வவ்வலிடுதல் | குளிர்மிகுதியால் பற்கள் ஒலியுண்டாக விரைந்து மோதிக்கொள்ளுதல் . |
வவ்வலோட்டி | காண்க : வவ்வாலொ(லோ)ட்டி . |
வவ்வால் | ஒரு மீன்வகை ; ஒரு பறவைவகை . |
வவ்வாலொட்டி | ஒரு செடிவகை . |
வவ்வாலோட்டி | ஒரு செடிவகை . |
வவ்வு | கவருதல் ; சுவருக்கும் கூரைக்கும் இடையிலுள்ள வெளி . |
வவ்வுதல் | கவர்தல் ; பற்றுதல் ; வாருதல் . |
வழக்கச்சொல் | உலகில் வழங்குஞ் சொல் . |
வழக்கடிப்பாடு | தொன்றுதொட்டு வரும் பயிற்சி . |
வழக்கம் | பழக்கம் ; தொன்றுதொட்டு நடை பெறுதல் ; ஈகை ; பொதுவானது ; பயன்படுத்துகை . |
வழக்கமாய் | முன்வழக்கப்படி ; பெரும்பாலும் . |
வழக்கர் | நீள்வழி ; வழக்கம் . |
வழக்கழிவு | முறைகேடு . |
வழக்கறிஞன் | வழக்குரைஞன் . |
வழக்கறிதல் | வழக்கங்களை அறிதல் ; சட்டமறிதல் . |
வழக்கறுத்தல் | போக்கைத் தடுத்தல் ; வழக்கைத் தீர்த்துவிடுதல் . |
வழக்கறுதல் | வழக்கத்தினின்று நீங்குதல் . |
வழக்கன் | காண்க : வழக்காளி ; செலவிடுதற்குரியது . |
வழக்காட்டு | வாதாடுகை ; ஊடல் . |
வழக்காடுதல் | வாதாடுதல் ; வழக்குத் தொடுத்தல் ; ஊடுதல் . |
வழக்காளி | வழக்குத்தொடுத்தவன் ; வாதாடுவோன் ; வழக்கவிவகாரங்கள் அறிந்தவன் . |
வழக்காறு | பழக்கவொழுக்கம் . |
வழக்கிடுதல் | விவகாரம் பண்ணுதல் ; வாதாடுதல் ; தர்க்கித்தல் . |
வழக்கியல் | உலக வழக்கான நடை ; வழக்காறு . |
வழக்கு | இயங்குகை ; உலகவழக்கு ; செய்யுள் வழக்கு ; என்னும் இருவகை வழக்குகள் ; இயல்புவழக்கு தகுதிவழக்குகள் ; பழக்கவொழுக்கம் ; நீதி ; நெறி ; நீதிமன்றத்தில் முறையிடுதல் ; விவகாரம் ; வாதம் ; வண்மை . |
வழக்குதல் | போக்குதல் . |
வழக்குப்பேசுதல் | வாதாடுதல் ; நியாயம் எடுத்துரைத்தல் . |
வழக்கோரம் | ஒருசார் நிற்றல் ; ஒரு பக்கஞ் சார்ந்துபேசும் நியாயம் . |
வழகம் | பவளம் . |
வழகு | மென்மை . |
வழங்காத்தேர் | பேய்த்தேர் ; கானல்நீர் . |
வழங்காவழி | புதுவழி . |
வழங்குதல் | இயங்குதல் ; உலாவுதல் ; நடைபெறுதல் ; அசைந்தாடுதல் ; கூத்தாடுதல் ; நிலைபெறுதல் ; பயிற்சிபெறுதல் ; கொண்டாடப்படுதல் ; தகுதியுடையதாதல் ; பயன்படுத்தல் ; கொடுத்தல் ; செய்துபார்த்தல் ; சொல்லுதல் ; நடமாடுதல் . |
வழப்பம் | காண்க : வழக்கம் . |
வழலிக்கை | இளைப்பு . |
வழலுதல் | தோலுரிதல் . |
வழலை | புண்ணினின்று வடியும் நீர் ; பாம்பு வகை ; ஓர் உப்புவகை ; சலவைக்கட்டி ; கோழை . |
வழவழத்தல் | வழுக்குந்தன்மையாதல் ; உறுதியற்றிருத்தல் ; மழமழத்தல் ; தெளிவின்றிப் பேசுதல் . |
வழவழவெனல் | வழுக்குதற்குறிப்பு ; தெளிவின்றிப் பேசுதற்குறிப்பு . |
வழாஅல் | தவறுகை ; வழக்குகை . |
வழாநிலை | சொற்கள் அல்லது தொடர்கள் இலக்கணவிதியினின்றும் விலகாது அமைகை . |
வழாறு | நிறைபுனல் உள்ள ஆறு அல்லது குளம் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 945 | 946 | 947 | 948 | 949 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வலுத்தல் முதல் - வழாறு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சாதியான், நிலத்தவன், வழக்கம், வாதாடுதல், நெய்தல், வலாற்காரம், விவகாரம், அல்லது, வழக்கு, தெளிவின்றிப், நியாயம், பழக்கவொழுக்கம், தொன்றுதொட்டு, பெண், வலையை, செடிவகை, சொல், வழக்காளி, வழக்காறு