முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வல்லிதின் முதல் - வலம்புரிச்சங்கு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வல்லிதின் முதல் - வலம்புரிச்சங்கு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வல்லிதின் | காண்க : வல்லாங்கு ; வல்லே . |
| வல்லிமண்டபம் | கொடிப்பந்தல் . |
| வல்லிமரம் | கப்பலின் தலைப் பாய்மரம் . |
| வல்லிமொடி | ஒரு கொடிவகை . |
| வல்லியம் | புலி ; கொல்லிமலை ; கொடி ; காண்க : செவ்வள்ளி ; மஞ்சள் ; இடைச்சேரி . |
| வல்லியம்பொருப்பு | கொல்லிமலை . |
| வல்லினம் | க் , ச் , ட் , த் , ப் , ற் என்னும் வல்லோசையுள்ள மெய்யெழுத்துகள் . |
| வல்ல¦கம் | பெருங்காயம் . |
| வல்ல¦ட்டுக்குற்றி | பனை முதலிய பெரிய மரங்களைப் பிளக்கும் முளை ; கொட்டாப்புளி ; தாங்கற்கட்டை . |
| வல்லுதல் | செய்யவியலுதல் ; ஒழுங்கு . |
| வல்லுநர் | வல்லோர் . |
| வல்லுப்பலகை | காண்க : வல்லப்பலகை . |
| வல்லுயிர் | அரிதாய்ப் பிழைத்திருக்கும் உயிர் . |
| வல்லுரம் | காடு ; புற்றரை ; வயல் ; மணல் ; பூங்கொத்து ; காட்டுப்பன்றியிறைச்சி ; தனிமை . |
| வல்லுவம் | வெற்றிலைப் பை . |
| வல்லுளி | பன்றி . |
| வல்லூகம் | கரடி ; ஆண்குரங்கு ; முசு . |
| வல்லூரம் | வனம் ; பாழ்நிலம் ; இறைச்சி . |
| வல்லூற்று | பாறையிடையினின்று வரும் நீருற்று . |
| வல்லூறு | ' இராசாளி ' என்னும் பறவை . |
| வல்லெழுத்து | காண்க : வல்லினம் . |
| வல்லெனல் | வலிதாதற்குறிப்பு ; விரைதற்குறிப்பு . |
| வல்லே | விரைவாக . |
| வல்லேறு | இடி . |
| வல்லை | வலிமை ; பெருங்காடு ; மேடு ; கோட்டை ; வயிற்றுக்கட்டிவகை ; வருத்தம் ; மரவகை ; புனமுருங்கை ; வட்டம் ; விரைவு . |
| வல்லைக்கட்டி | வயிற்றுக்கட்டிவகை . |
| வல்லையம் | ஈட்டிவகை . |
| வல்லொற்று | காண்க : வல்லினம் . |
| வல்லோன் | வலிமையுடையோன் . |
| வல்வருத்தம் | கடுவருத்தம் . |
| வல்வாயன் | பேச்சில் திறமையுடையோன் . |
| வல்விடம் | கடுநஞ்சு . |
| வல்விரைதல் | மிக வேகமாதல் . |
| வல்வில் | ஒரே காலத்தில் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஓரம்பை எய்யுந் திறமை . |
| வல்வில்லி | ஒரே காலத்தில் பல பொருள்களை ஊடுருவிச் செல்லும்படி ஓர் அம்பை எய்யுந் திறனுடையவன் . |
| வல்விலங்கு | யானை . |
| வல்வினை | வலியதாகிய ஊழ் ; தீவினை ; கொடுஞ்செயல் ; வலியதாகிய தொழில் . |
| வலக்காரம் | பொய் ; விரகு ; கட்டாயப்படுத்துதல் ; வெற்றி . |
| வலக்கை | வலப்பக்கக் கை ; வலப்பக்கம் . |
| வலக்கைகொடுத்தல் | உதவியளித்தல் ; உறுதி கூறுதல் . |
| வலக்கைதருதல் | உதவியளித்தல் ; உறுதி கூறுதல் . |
| வலக்கையடித்தல் | உறுதிகூறுதல் . |
| வலங்கம் | பெருங்குடும்பம் . |
| வலங்காரம் | மத்தளத்தின் மார்ச்சனை பூசிய பக்கம் . |
| வலங்கை | வலப்பக்கத்துக் கை ; தமிழ்நாட்டுச் சாதியாருள் ஒரு சார் கூட்டத்தினர் . |
| வலங்கொள்ளுதல் | காண்க : வலம்வருதல் ; வெற்றிகொள்ளுதல் ; வெல்லுதல் . |
| வலசை | இடம்விட்டு இடம் குடிபெயர்கை ; கூட்டம் ; வடுகச்சாதியார் ; வரிச்சல் . |
| வலசைபோதல் | பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்தல் . |
| வலசைவாங்குதல் | வேற்றூருக்குக் கூட்டத்தோடு குடிபோதல் . |
| வலஞ்சுழி | வலமாகச் சுழலுகை ; வலப்புறமாகச் சுழியுஞ் சுழி ; குதிரையின் நற்சுழிவகை ; திருவலஞ்சுழி யென்னுஞ் சிவதலம் . |
| வலஞ்சுழித்தல் | வலமாகச் சுற்றச்செய்தல் ; வலப்புறமாகச் சுழியும்படி கீறுதல் . |
| வலஞ்சுழிதல் | வலமாகச் சுழலுதல் ; வலப்புறமாகச் சுழிந்திருத்தல் . |
| வலஞ்செய்தல் | காண்க : வலம்வருதல் . |
| வலட்டி | வல்லமையுள்ளது . |
| வலத்தல் | சுற்றுதல் ; பின்னுதல் ; பிணித்தல் ; தொடுத்தல் ; கொழுத்தல் ; சொல்லுதல் ; வளைத்தல் . |
| வலது | வெற்றி ; வலப்பக்கம் ; திறமை ; செயல் ; ஒருவன் சத்திக்குள் அடங்கியது ; யாதொரு குறையுமின்றி வாழும் வாழ்க்கை . |
| வலந்தம் | உரை ; வளைவு . |
| வலம் | வெற்றி ; வலிமை ; படை ; ஆணை ; வலப்பக்கம் ; வலமாகச் சுற்றிவருதல் ; கனம் ; மேலிடம் ; ஏழனுருபு ; பவ்வீ ; உயர்வு . |
| வலம்பம் | நேர்கோடு . |
| வலம்பாய்தல் | வெற்றியுண்டாதல் ; இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கஞ் செல்லுதல் . |
| வலம்புரி | வலப்பக்கம் முறுக்குண்ட சங்கு ; காண்க : வலம்புரிச்சங்கு ; நந்தியாவட்டம் ; வலமாகச் சுழிந்திருப்பது ; வலம்புரிச்சங்கு வடிவிலுள்ள கைவரி ; வலம்புரிச்சங்கு வடிவாகச் செய்த தலையணி ; செடிவகை ; அபிநயவகை ; வலமாகச் சுற்றிவருதல் . |
| வலம்புரிச்சங்கு | வலமாகச் சுழிந்துள்ள சங்குவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 943 | 944 | 945 | 946 | 947 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வல்லிதின் முதல் - வலம்புரிச்சங்கு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வலமாகச், வலப்பக்கம், வலம்புரிச்சங்கு, வெற்றி, வலப்புறமாகச், வல்லினம், உதவியளித்தல், உறுதி, இடம், சுற்றிவருதல், இடம்விட்டு, வலம்வருதல், கூறுதல், திறமை, வலிமை, என்னும், கொல்லிமலை, வல்லே, வயிற்றுக்கட்டிவகை, காலத்தில், எய்யுந், செல்லும்படி, ஊடுருவிச், பொருள்களை, வலியதாகிய

