முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வலம்வருதல் முதல் - வலுச்சண்டை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வலம்வருதல் முதல் - வலுச்சண்டை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வலம்வருதல் | திருக்கோயில் முதலியவற்றை இடமிருந்து வலப்பக்கமாகச் சுற்றிவருதல் . |
| வலமன் | வலப்பக்கம் . |
| வலயம் | வட்டம் ; சக்கரப்படை ; கடல் ; குளம் ; கைவளையம் ; தாமரையின் சுருள் ; சுற்றிடம் ; நீர்நிலை ; பாத்தி ; தோட்டம் ; எல்லை . |
| வலவன் | திறமையுடையவன் ; வெற்றியாளன் ; தேர்ப்பாகன் ; திருமால் ; வலப்பக்கத்து உள்ளவன் ; ஓர் அசுரன் . |
| வலவாய் | வலப்பக்கம் . |
| வலவை | விநாயகன் தேவி ; திறமை ; வல்லவன்(ள்) ; காளி ; இடாகினி ; வஞ்சகப்பெண் . |
| வலற்காரம் | பொய் . |
| வலன் | வெற்றி ; வலப்பக்கம் ; மேலிடம் ; ஆணை ; வலி ; சேனை ; வலம்வருதல் ; வலப்பக்கத்தில் இருப்பவன் ; திறமையானவன் ; ஓர் அசுரன் ; ஏழனுருபு . |
| வலாகம் | கொக்கு ; நீர் . |
| வலாகு | கொக்கு . |
| வலாகை | கொக்கு . |
| வலாட்டிகன் | திண்ணியன் . |
| வலார் | காண்க : வளார் . |
| வலாரி | வலன் என்னும் அசுரனின் பகைவனான இந்திரன் . |
| வலாற்காரம் | கட்டாயப்படுத்தல் . |
| வலி | வன்மை ; காண்க : வலாற்காரம் ; நறுவிலி ; அகங்காரம் ; வல்லெழுத்து ; தொகைநிலைத் தொடர் மிக்கு வருஞ் செய்யுட்குணம் ; பற்றுக்கோடு ; பற்றிரும்பு ; தொல்லை ; நோவு ; ஒலி ; சூள் ; வஞ்சகம் ; இழுக்கை ; இசிவுநோய்வகை ; வலிமைமிக்கவன் ; கோடு ; குரங்கு . |
| வலி | (வி) உடன்படுத்து ; இழு . |
| வலிக்கட்டு | யாழ்நரம்பின் வலிந்த கட்டு . |
| வலிகுன்மம் | வலிப்பு முதலியவற்றோடு கூடிய சுரநோய் . |
| வலிங்கம் | வலாற்காரம் . |
| வலிச்சல் | தசை முதலியவற்றின் கடினத்தன்மை ; பனையின் கடுங்காய் ; காய்ந்தது ; கட்டுவரிச்சல் . |
| வலிசெய்தல் | மிடுக்குச்செய்தல் ; வல்வழக்குரைத்தல் . |
| வலித்தல் | கட்டாயப்படுத்துதல் ; பற்றிக் கொள்ளுதல் ; இடர்ப்பட்டுப் பொருள்கொள்ளுதல் ; அழுத்தி உச்சரித்தல் ; மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்குதல் ; துணிதல் ; வற்றச்செய்தல் ; திண்ணியதாதல் ; வற்றுதல் ; நோவுண்டாதல் ; முயலுதல் ; கொழுத்தல் ; சொல்லுதல் ; ஆலோசித்தல் ; கருத்தோடு செய்தல் ; உடன்படுதல் ; இழுத்தல் ; வளைத்தல் ; அழுகு காட்டுதல் ; துடுப்பால் படகு தள்ளுதல் ; கப்பற்பாய் தூக்குதல் ; புகை குடித்தல் ; இசிவு காணுதல் ; ஏங்குதல் ; மெல்லொற்றை வல்லொற்றாக மாற்றுதல் . |
| வலிதம் | சுற்றுவட்டம் ; அசைவு . |
| வலிதல் | திண்ணியதாதல் ; உச்சரிப்பில் அழுத்தமாதல் ; மெல்லெழுத்து வல்லெழுத்தாதல் ; நேர்வழியில் பொருள்கொள்ளாது இடர்ப்படுதல் ; முயலுதல் ; உய்தல் ; தங்குதல் ; கட்டாயப்படுத்தல் ; துணிதல் ; மீறுதல் ; இழத்தல் . |
| வலிதின் | வலாற்காரமாக . |
| வலிது | வலிமையுள்ளது ; வலாற்காரம் . |
| வலிதை | நிருத்தக்கைவகை . |
| வலிந்துகொள்ளுதல் | இடர்ப்பட்டுப் பொருள் கொள்ளுதல் ; வலாற்காரமாய்க் கைப்பற்றல் . |
| வலிநோய் | காக்கைவலிப்புநோய் . |
| வலிப்பற்று | பற்றுக்குறடு . |
| வலிப்பு | இசிவு ; நோவு ; இழுக்கை ; தண்டு வலிக்கை ; அழகுகாட்டுகை ; நிலைபேறு ; வருத்தம் ; மெல்லொற்று வல்லொற்றாகை . |
| வலிப்புறுத்தல் | வற்புறுத்துதல் ; நிலைபெறுத்துதல் . |
| வலிபடுதல் | பற்றியிழுக்கப்படுதல் ; மாறுபடுதல் ; வலிமையறுதல் . |
| வலிமுகம் | குரங்கு . |
| வலிமுன்பு | மிக்க வலி . |
| வலிமை | வன்மை ; திறமை ; திண்மை ; வலாற்காரம் . |
| வலிமைசெய்தல் | கட்டாயப்படுத்தல் . |
| வலிய | தானாக ; பெரிய ; வலிமையுள்ள ; கட்டாயமாக . |
| வலியவன் | வலிமையுள்ளவன் ; வல்லவன் . |
| வலியறிதல் | பகைவனுடைய வலிமையைத் தெரிந்துகொள்ளுதல் . |
| வலியன் | வலிமையுடையான் ; திறமையானவன் ; உடல்நலமுடையவன் ; கரிக்குருவி ; இறுகிய நிலையுடையது . |
| வலியாடுதல் | துன்பப்படுத்துதல் . |
| வலியான் | காண்க : வலியன் . |
| வலியுறுத்துதல் | பலப்படுத்துதல் ; வற்புறுத்துதல் ; உறுதிப்படுத்துதல் ; இவறுதல் . |
| வலிவு | வலிமை ; உச்சவிசை . |
| வல¦நகம் | தாழை . |
| வல¦முகம் | திரைந்த முகமுடைய குரங்கு . |
| வலு | வலிமை ; திறமை ; கனம் ; கொசு ; ஒரு பசைமருந்து ; பற்று ; எட்டு ; பலமான ; மிகுதியான . |
| வலுக்காரன் | திறமையுள்ளவன் . |
| வலுச்சண்டை | வலியத்தொடங்குஞ் சண்டை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 944 | 945 | 946 | 947 | 948 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வலம்வருதல் முதல் - வலுச்சண்டை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், வலாற்காரம், கட்டாயப்படுத்தல், குரங்கு, காண்க, கொக்கு, திறமை, வலிமை, வலப்பக்கம், துணிதல், இடர்ப்பட்டுப், திண்ணியதாதல், வலியன், இசிவு, கொள்ளுதல், வற்புறுத்துதல், முயலுதல், நோவு, வலன், வல்லவன், அசுரன், திறமையானவன், வன்மை, இழுக்கை, வலம்வருதல், வலிப்பு

