தமிழ் - தமிழ் அகரமுதலி - வழி முதல் - வழிமொழிதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வழி | நெறி ; காரணம் ; கழுவாய் ; வழிபாடு ; ஒழுக்கம் ; முறைமை ; பின்சந்ததி ; மரபு ; மகன் ; சுற்றம் ; உடன்பிறந்தான் ; பரம்பரை ; நூல் வந்த நெறி ; சுவடு ; பின்னானது ; வழக்கு ; பழைமை ; மலைப்பக்கம் ; இடம் ; திரட்சி ; வரம் ; பின்பு ; வினையெச்சவிகுதி ; ஏழனுருபு . |
| வழிக்கரை | வழிப்பக்கம் . |
| வழிக்குவருதல் | இணங்குதல் ; நல்வழிப்படுதல் . |
| வழிக்கொள்ளுதல் | பின்பற்றிச் செல்லுதல் ; பயணப்படுதல் . |
| வழிகட்டுதல் | வழிமறித்தல் ; எத்தனஞ்செய்தல் ; வழிகாட்டுதல் . |
| வழிகாட்டி | செல்லுதற்குரிய வழியைக் காட்டுபவர் ; பிறர் பின்பற்றுதற்குரிய முன்மாதிரியாக இருப்பவர் ; வழிகாட்டிமரம் . |
| வழிகாட்டுதல் | செல்லும் நெறியை அறிவித்தல் ; நன்னெறி உணர்த்துதல் ; வழிவகை கூறுதல் . |
| வழிகெடுதல் | சுவடுதெரியாமல் அழிதல் . |
| வழிச்செல்வோன் | பயணி . |
| வழிச்செலவு | பயணச்செலவு ; பயணம் . |
| வழிசீத்தல் | செல்லும் வழியைச் செப்பனிடுதல் . |
| வழிசெய்தல் | வகைசெய்தல் . |
| வழித்தடை | பயணத்திற்கு நேரும் இடையூறு . |
| வழித்தல் | வடித்தல் ; அரைத்த சந்தனம் முதலியவற்றைத் திரட்டியெடுத்தல் ; பூசுதல் ; துடைத்தெடுத்தல் ; வழிக்குதல் ; சவரம் பண்ணுதல் ; ஆடையைத் திரைத்தல் . |
| வழித்திண்ணை | வீடு ; கோபுரம் முதலியவற்றின் வெளித்திண்ணை . |
| வழித்துணை | பயணத்தில் உடன்வருவோன் ; வழிக்குத் துணையாவோன் ; வழிவழியாக உதவிவரும் குடும்பத்துணை . |
| வழித்தெய்வம் | குலதெய்வம் . |
| வழித்தொண்டு | வழிவழியடிமை . |
| வழித்தோன்றல் | மரபிற் பிறந்த பிள்ளை , மகன் . |
| வழிதல் | நிரம்பிவடிதல் ; தோல்வழலுதல் . |
| வழிதிகைத்தல் | செல்வழி தெரியாது மயங்குதல் ; செய்வகை தெரியாது கலங்குதல் . |
| வழிதுறை | வழியும் துறையும் ; பக்கத்துணை ; வழிவகை . |
| வழிநடத்தல் | ஏவல் செய்தல் . |
| வழிநடை | வழிச்செல்லுகை ; நடைபாதை . |
| வழிநாள் | பின்வருநாள் . |
| வழிநிலை | பின்னின்று ஏவல் செய்தல் ; பின் நிகழ்வது ; அலங்கார வகை . |
| வழிநிலைக்காட்சி | இயற்கைப் புணர்ச்சியை அடுத்த இடந்தலைப்பாட்டில் தலைவன் தலைவியைக் காணுங் காட்சி . |
| வழிநிற்றல் | ஏவல்செய்தல் . |
| வழிநூல் | நூல் மூன்றனுள் ஒன்றான முதனூல் வழியை விகற்பிக்கும் நூல் . |
| வழிப்படுத்தல் | பயணப்படுத்துதல் ; நல்வழிச் செலுத்துதல் ; சீர்திருத்துதல் ; வசப்படுத்துதல் ; வணக்கஞ் செய்வித்தல் . |
| வழிப்படுதல் | காண்க : வழிபடுதல் ; நேர்படுதல் ; சந்தித்தல் ; வணங்குதல் . |
| வழிப்பயணம் | ஆத்திரை , பிரயாணம் . |
| வழிப்பறி | வழிக்கொள்ளை . |
| வழிப்பறித்தல் | ஆறலைத்தல் . |
| வழிப்பிரிவு | பலவழி கூடுமிடம் . |
| வழிப்புரை | வழிப்போக்கர் இளைப்பாறத் தங்குமிடம் . |
| வழிப்பெருந்தேவி | பட்டத்தரசிக்கு அடுத்த தேவி . |
| வழிப்போக்கு | வழியிற்போகை ; வழி ; வயல்களில் உள்ள வழிப்பாதை ; பாழ்நிலம் . |
| வழிப்போதல் | பயணமாதல் ; பின்பற்றுதல் . |
| வழிபடுகடவுள் | ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரித்தாக வணங்கும் கடவுள் . |
| வழிபடுத்தல் | காண்க : வழிப்படுத்தல் . |
| வழிபடுதல் | பின்பற்றுதல் ; பயணமாதல் . |
| வழிபடுதெய்வம் | காண்க : வழிபடுகடவுள் . |
| வழிபண்ணுதல் | வகைசெய்தல் . |
| வழிபயத்தல் | பிற்பயத்தல் ; மறுக்காது கொடுத்தல் . |
| வழிபறி | காண்க : வழிப்பறி . |
| வழிபறித்தல் | காண்க : வழிப்பறித்தல் . |
| வழிபாடு | வழியிற் செல்லுகை ; பின்பற்றுகை ; வணக்கம் ; பூசனை ; வழக்கம் ; சமயக்கோட்பாடு . |
| வழிபார்த்தல் | எதிர்பார்த்தல் ; வகைபார்த்தல் ; சமயம் பார்த்தல் ; சூழ்ச்சி தேடுதல் . |
| வழிபோவார் | பயணிகள் . |
| வழிமடக்குதல் | செல்வதைத் தடுத்தல் . |
| வழிமறித்தல் | செல்வதைத் தடுத்தல் . |
| வழிமார்க்கம் | நல்லொழுக்கம் . |
| வழிமுட்டு | செல்லமுடியாத வழி . |
| வழிமுதல் | குலமுதல்வன் ; காண்க : வழிபடு கடவுள் . |
| வழிமுரண் | ஒரு செய்யுளில் முரண்டொடை மிகுதியாகப் பயில்வது . |
| வழிமுறை | தலைமுறை ; பின்பு . |
| வழிமுறைத்தாய் | தகப்பனுக்கு இரண்டாந் தாரமாகிய சிறிய தாய் . |
| வழிமுறைத்தாரம் | முதல் மணத்துக்குப்பின் மணந்துகொண்ட தாரம் . |
| வழிமொழி | ஒரு சந்தப்பாட்டுவகை ; அணிவகை . |
| வழிமொழிதல் | வழிபாடு கூறுதல் ; பின்மொழிதல் ; அனுசரித்துக் கூறுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 946 | 947 | 948 | 949 | 950 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வழி முதல் - வழிமொழிதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கூறுதல், நூல், வழிபாடு, வழிப்பறித்தல், வழிப்பறி, வழிபடுதல், பயணமாதல், வழிபடுகடவுள், தடுத்தல், செல்வதைத், கடவுள், வழிப்படுத்தல், பின்பற்றுதல், ஏவல், வழிகாட்டுதல், வழிமறித்தல், பின்பு, மகன், செல்லும், வழிவகை, செய்தல், நெறி, தெரியாது, வகைசெய்தல், அடுத்த

