தமிழ் - தமிழ் அகரமுதலி - வழிமோனை முதல் - வழுவு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வழிமோனை | மோனைகளுள் ஒன்று . |
| வழியட்டுதல் | வழியவிடுதல் . |
| வழியடியார் | பரம்பரைத் தொண்டர் . |
| வழியடை | இடையூறு ; தாயத்தின் பின் உரிமையுடையோன் . |
| வழியடைத்தல் | செல்லவிடாது வழித்தடை செய்தல் ; தடுத்தல் . |
| வழியம்பலம் | சாலையில் தங்குவதற்குரிய சத்திரம் . |
| வழியல் | வழித்தெடுக்கப்பட்டது ; வழிந்தோடுவது . |
| வழியலைத்தல் | வழியில் கொள்ளையடித்தல் . |
| வழியளவை | கருதலளவை . |
| வழியனுப்புதல் | பயணப்படுத்திவிடுதல் . |
| வழியாயம் | சுங்கம் . |
| வழியிரங்குதல் | பின் வருந்துதல் . |
| வழியிலார் | வழித்தோன்றல் ; திக்கற்றவர் . |
| வழியுணவு | கட்டுச்சோறு . |
| வழியுரைத்தல் | தூதுசொல்லுதல் . |
| வழியுரைப்போர் | தூதர் . |
| வழியெஞ்சுதல் | மரபற்றுப்போதல் . |
| வழியெதுகை | ஒரு செய்யுளில் அடிதோறும் முதன் மூன்று சீர்க்கண்ணும் வரும் எதுகை வகை . |
| வழியொழுகுதல் | பின்செல்லுதல் ; நேர்வழியிற் செல்லுதல் ; ஏவலின்படி நடத்தல் . |
| வழியோன் | காண்க : வழித்தோன்றல் . |
| வழிவகை | இடம் பொருள் ஏவல்கள் . |
| வழிவந்தான் | மரபிற் பிறந்தவன் ; பின்பற்றியொழுகுவோன் ; நற்குடியிற் பிறந்தோன் . |
| வழிவருத்தம் | பயணத்தாலுண்டான இளைப்பு . |
| வழிவருதல் | மரபுவழியாய் வருதல் ; தொன்று தொட்டு வருதல் ; நற்குடிப் பிறத்தல் ; பின்பற்றி யொழுகுதல் ; சாத்திரங்களில் கூறிய முறை தப்பாமல் நடத்தல் . |
| வழிவழி | மரபுவழி . |
| வழிவழியாய்ப்போதல் | வெவ்வேறு வழியாகப் பிரிந்துபோதல் . |
| வழிவிடுதல் | பயணமனுப்புதல் ; வழிவிட்டு ஒதுங்குதல் ; செல்வழியைத் திறத்தல் ; நெறிதவறுதல் ; இடையூறுகளைப் போக்குதல் ; இறக்குந்தறுவாயில் கழுவாய்ச் சடங்கு செய்தல் . |
| வழு | தவறு ; கேடு ; பாவம் ; பழிப்புரை ; குற்றம் ; கன்று முதலியன பிறக்கும்போது காணப்படும் சவ்வு முதலியன . |
| வழுக்கட்டை | உருண்டுதிரண்டிருக்கை ; மூடத்தன்மை ; சிறுவன் . |
| வழுக்கம் | தவறு ; ஒழுக்கத்தவறு . |
| வழுக்கல் | சறுக்குகை ; காண்க : வழுக்குநிலம் ; வழுக்கை ; வழுக்காய் . |
| வழுக்காய் | வழுக்கலுள்ள இளந்தேங்காய் . |
| வழுக்கு | தோல்வி ; சறுக்குகை ; தவறு ; மறதி ; பயன்படாது கழிவது ; கொழுப்பு ; வழுவழுப்பான நீர்ப்பண்டம் . |
| வழுக்குதல் | சறுக்குதல் ; தவறுசெய்தல் ; தப்புதல் ; மறத்தல் ; அசைதல் ; ஒழிதல் ; அடித்தல் ; மோதுதல் . |
| வழுக்குநிலம் | சறுக்கலான தரை . |
| வழுக்குமரம் | விளையாடுதற்குரிய சறுக்குமரம் . |
| வழுக்கை | இளந்தேங்காயின் உள்ளீடு ; தலை மயிர் உதிர்ந்து வளராத நிலை . |
| வழுக்கைத்தலை | பொட்டலாயிருக்குந் தலை . |
| வழுத்தரல் | இறந்துபோதல் . |
| வழுத்துதல் | வாழ்த்துதல் ; துதித்தல் ; மந்திரித்தல் . |
| வழுதலை | கத்தரிச்செடி ; கண்டங்கத்திரிவகை ; புல்லுருவிச்செடி ; திருடர்களை அச்சுறுத்துவதற்காகப் புனத்திடும் பொய்க்கழு . |
| வழுதி | பாண்டியன் . |
| வழுதிவளநாடு | ஆழ்வார்திருநகரியைச் சூழ்ந்த நாடு . |
| வழுது | பொய் ; வைக்கோல் ; அரிதாள் . |
| வழுதுணங்காய் | கத்தரிக்காய் ; கண்டங்கத்தரிவகை . |
| வழுதுணை | கத்தரிச்செடி . |
| வழுந்துதல் | தோலுரிதல் . |
| வழுநிலை | சொல் முதலியன இலக்கணத் தவறாக வருகை . |
| வழுநீர் | கண்பீளை . |
| வழும்பு | குற்றம் ; தீங்கு ; நிணம் ; வழுவழுப்பான நீர்ப்பண்டம் ; அழுக்கு . |
| வழுவமைத்தல் | இலக்கண வழுவாயினும் அமைவதாகக் கொள்ளுதல் . |
| வழுவமைதி | இலக்கண வழுவாயினும் அமைவதாகக் கொள்ளுதல் . |
| வழுவல் | நழுவுதல் ; தவறு ; கேடு ; இளந்தேங்காயின் வழுக்கல் . |
| வழுவழுத்தல் | வழுக்குதல் ; வழுவழுப்பாதல் ; உறுதியறிதல் . |
| வழுவழுப்பு | கொழகொழப்பு ; வழுக்குந்தன்மை ; மென்மை ; பளபளப்பு ; எண்ணெய்ப்பசையுடைமை . |
| வழுவழெனல் | மென்மைக்குறிப்பு ; விரைதற்குறிப்பு ; வழுக்குதற்குறிப்பு . |
| வழுவாடி | செயலை நழுவவிடுபவன் . |
| வழுவாமை | நேர்மை ; தவறுறாமை . |
| வழுவாய் | தப்புகை ; பாவம் . |
| வழுவு | தவறு ; குற்றம் ; கேடு ; பாவம் ; பழிப்புரை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 947 | 948 | 949 | 950 | 951 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வழிமோனை முதல் - வழுவு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தவறு, குற்றம், முதலியன, பாவம், கேடு, அமைவதாகக், நீர்ப்பண்டம், வழுவழுப்பான, வழுக்காய், வழுவாயினும், வழுக்குதல், இளந்தேங்காயின், வழுக்கை, கொள்ளுதல், இலக்கண, கத்தரிச்செடி, வழுக்கல், நடத்தல், வழித்தோன்றல், செய்தல், பின், காண்க, வருதல், சறுக்குகை, சொல், பழிப்புரை, வழுக்குநிலம்

