முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » வரைவாழை முதல் - வல்லிசைவண்ணம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - வரைவாழை முதல் - வல்லிசைவண்ணம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| வரைவாழை | மலைவாழை . |
| வரைவில்லி | பொதுமகளிர் . |
| வரைவின்மகளிர் | பொதுமகளிர் . |
| வரைவின்மாதர் | பொதுமகளிர் . |
| வரைவு | அளவு ; எல்லை ; எழுதுகை ; சித்திரமெழுதுகை ; ஏற்றத்தாழ்வு நோக்குகை ; திருமணம் ; நீக்கம் ; பிரிவு . |
| வரைவுகடாதல் | தலைவியை மணம்புரிந்து கொள்ளுமாறு தோழி தலைமகனை வற்புறுத்தும் அகத்துறை . |
| வரைவுடன்படுதல் | தலைவியின் சுற்றத்தார் தலைமகனுக்கு அவளை மணம்புரிவிக்க இசையும் அகத்துறை . |
| வரைவுமலிதல் | மணம் நிகழ்வதுபற்றி மகிழ்வுறுதல் . |
| வரோதயன் | தெய்வவரத்தால் தோன்றியவன் . |
| வல் | வலிமை ; திறமை ; மேடு ; சூதாடுகருவி ; முலைக்கச்சு ; விரைவு . |
| வல்கம் | மரப்பட்டை . |
| வல்சி | உணவு ; அரிசி ; சோறு ; நெல் . |
| வல்மீகம் | கறையான்புற்று ; யானைக்கால் நோய் . |
| வல்ல | வலிமையுள்ள ; திறமையுள்ள . |
| வல்லடி | வலிமை ; திறமை ; வலாற்காரம் ; கொடுமை ; கொடுஞ்செயல் ; அருஞ்செயல் ; காலமல்லாக் காலத்து ஏற்படும் சாவு . |
| வல்லடிக்காரன் | வலாற்காரம் செய்வோன் ; கொள்ளைக்காரன் . |
| வல்லடிவம்பன் | வலுக்கட்டாயத்தால் செயலை முடித்துக்கொள்வோன் . |
| வல்லடிவழக்கு | அநியாய வழக்கு ; நியாயமின்றிப் பலத்தைப் பயன்படுத்துகை . |
| வல்லணங்கு | காளி . |
| வல்லநாய் | சூதாடுகருவியாகிய நாய் . |
| வல்லப்பலகை | சூதாடுதற்குரிய பலகை . |
| வல்லபசத்தி | காண்க : குண்டலிசத்தி ; மிகுவலி . |
| வல்லபடி | காண்க : வல்லாங்கு . |
| வல்லபம் | வலிமை ; திறமை ; கொடுஞ்செயல் ; அருஞ்செயல் ; விருப்பம் ; உயர்சாதிக் குதிரைவகை . |
| வல்லபன் | கணவன் ; அன்பிற்குரியவன் ; இடையருள் தலைவன் ; குதிரைகளை மேற்பார்ப்போன் ; வலிமையுள்ளவன் . |
| வல்லபி | பார்வதி ; காண்க : வல்லவி . |
| வல்லபை | மனைவி ; தலைவி ; வலிமையுள்ளவர் ; திறமையுள்ளவர் ; விநாயக்கடவுளின் தேவி . |
| வல்லம் | ஆற்றல் ; மனைவி ; ஓர் ஊர் ; ஒரு சிவதலம் ; வாழை ; ஓலையால் முடைந்த கூடை ; இரண்டு மஞ்சாடி நிறை ; பளிங்குக் கல்வகை . |
| வல்லமை | வலிமை . |
| வல்லயம் | ஓர் ஈட்டிவகை . |
| வல்லரி | தளிர் ; பூங்கொத்து ; பசுங்காய் ; காய்க்குலை ; கொடி . |
| வல்லவன் | வலியவன் ; கணவன் ; இடையன் ; திறமையுடையவன் ; சமைப்போன் ; வீமன் ; மேலைச் சாளுக்கிய அரசன் . |
| வல்லவாட்டு | இடத்தோள்மேல் அணியும் ஆடை ; கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் ஆடை . |
| வல்லவாறு | காண்க : வல்லாங்கு . |
| வல்லவி | மனைவி ; திறமையுள்ளவர் ; வலிமையுள்ளவர் . |
| வல்லவைமன் | விநாயகன் . |
| வல்லா | முடியாதவை . |
| வல்லாங்கு | இயன்றவளவில் . |
| வல்லாட்டு | குறும்பு . |
| வல்லாண்முல்லை | ஒருவனது குடியையும் பதியையும் இயல்புகளையும் புகழ்ந்து அவனது ஆண்மை பெருகச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை . |
| வல்லாண்மை | பேராற்றல் . |
| வல்லாமை | இயலாமை ; தள்ளாமை . |
| வல்லார் | வலிமையுடையவர் ; திறமையுள்ளவர் ; வலுக்குறைந்தோர் ; திறமையில்லாதவர் . |
| வல்லார்கொள்ளை | பாதுகாப்பில்லாது பலராற் கவரப்படும் சொத்து . |
| வல்லாரை | கொடிவகை ; கேட்டைநாள் . |
| வல்லாளகண்டன் | மிக்க துணிவுள்ளவன் ; பேராற்றலுள்ளவன் . |
| வல்லாளன் | வலிமையுள்ளவன் ; திறமையுடையவன் ; ஓர் அரசன் . |
| வல்லான் | வலிமையுள்ளவன் ; திறமையானவன் ; கடவுள் ; சூதாடுபவன் . |
| வல்லி | படர்கொடி ; மருந்துச்செடி ; இளம்பெண் ; முருகக்கடவுளின் தேவியாகிய வள்ளியம்மை ; உபநிடதம் ; பதாகை ; முருக்கமரம் ; திருமணம் ; இடைச்சேரி ; விரைவு ; பிரிகை ; அளவுவகை ; சூதாடுபவன் ; கால்விலங்கு . |
| வல்லிக்கயிறு | உடைமேல் தரிக்கும் அரைஞாண் . |
| வல்லிகம் | மிளகு ; கொடி ; மஞ்சள் . |
| வல்லிகை | குதிரையின் கழுத்தில் கட்டும் ஒரு வடம் ; காதணிவகை ; யாழ் . |
| வல்லிசம் | மிளகு . |
| வல்லிசாதகம் | கற்பகமரத்தில் படருங் கொடிவகை . |
| வல்லிசாதம் | கற்பகமரத்தில் படருங் கொடிவகை . |
| வல்லிசாதி | தெய்வத்தன்மையுள்ள கொடி . |
| வல்லிசை | உச்ச இசை ; வல்லோசை ; பாம்பு . |
| வல்லிசைவண்ணம் | வல்லெழுத்துமிக்குப் பயின்றுவருஞ் சந்தம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 942 | 943 | 944 | 945 | 946 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வரைவாழை முதல் - வல்லிசைவண்ணம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, வலிமை, பொதுமகளிர், வல்லாங்கு, மனைவி, திறமையுள்ளவர், கொடிவகை, கொடி, வலிமையுள்ளவன், திறமை, திருமணம், அரசன், சூதாடுபவன், மிளகு, படருங், கற்பகமரத்தில், திறமையுடையவன், அகத்துறை, வலாற்காரம், கணவன், வல்லவி, விரைவு, அருஞ்செயல், வலிமையுள்ளவர், கொடுஞ்செயல்

